Posts

Showing posts from April, 2017

Facebook page

தேடல் 7

பகுதி 7 வரதராஜன் மாதவன் அனுப்பின ஆளுங்களை பார்த்தவுடன் கோபம் தலைக்கேற கத்திக்கொண்டிருந்தார். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் அதிர்ந்து போயினர். அப்புறம் நிதானமாக சார் மாதவன் யார் தெரியுமா அவர் நினைச்சா உங்களை என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று மிரட்டல் தொணியில் அவர்கள் ஆட்கள் பேச ஆரம்பிக்க, வரதராஜன் மிகவும் கோபமாக என்ன பண்ணுவாராம் பண்ண சொல்லு என் சர்வீஸ்ல நான் பார்க்காத மிரட்டல்களா வெளியே போங்க என்று விரட்டினார். அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினர். இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வினய் குழப்பத்துடனும் ஒரு வித பதட்டத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வெளியேறும் போது வினயை பார்த்துக்கொண்டே வெளியேறினர். வினய் அய்யாச்சாமியிடம் யார் இவர்கள் எதுக்கு இங்க வந்து வரதராஜன் சாரை மிரட்டிட்டு போறாங்க என்று கேட்டான். தம்பி இந்த மாதிரி நிறைய பேர் வந்து மிரட்டிட்டு போவாங்க அய்யா வாதாடுறா கேஸ்ல எதிர் தரப்புல இருந்து நிறைய மிரட்டல் வரும் அதுல இவுங்களும் ஒரு தரப்பு அவ்வளவு தான் ஆனால், இவுங்க ரெம்ப பெரிய இடம் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் அய்யாசா...

தேடல் 6

பகுதி 6 ரஞ்சித் போன் பண்ணி சொல்லியவற்றை நினைத்து வினய் குழம்பிக் கொண்டே இருந்தான். யாரு நமக்கு தெரியும்னு சொல்லிட்டு வச்சுட்டாரே என்று யோசித்தபடியே, உமாவிற்கு கால் பண்ணி தெரிவிக்கலாம் என்று செல்போனை எடுத்து டயல் செய்தான். உமாவின் அம்மா எடுத்து ஹலோ சொல்ல, நான் வினய் பேசுறேன் உமா இல்லையா என்றான் வினய். உமா குளிச்சுட்டு இருக்கா வினய், நீ எப்படி இருக்க வீட்டுக்கு இப்போல்லாம் வரதே இல்லையே என்று உமாவின் அம்மா கேட்க, வினய் யோசித்தபடி இல்லமா வேலை கொஞ்சம் இருக்குறதால வர முடியலை என்று சொல்லிக்கொண்டிருக்கையில் உமா குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்தாள். யாரும்மா என்று உமா கேட்க நம்ம வினய் தம்பி தான் என்று சொல்லிக்கொண்டே அம்மா எப்படி இருக்காங்க என்று வினயிடம் கேட்டாள் உமாவின் அம்மா. அம்மா நல்ல இருக்காங்க உமா வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லுங்க என்றான் வினய். உமா வந்துட்டாப்பா நீ பேசு என்று உமாவிடம் போனை கொடுத்து விட்டு சமயலறைக்கு சென்றாள் உமாவின் அம்மா. சொல்லு வினய் காலையிலேயே கால் பண்ணிருக்க, உமா ரஞ்சித் போன் பண்ணாரு அவனை கண்டுபிடிச்சுட்டாங்களாம், நம்ம ஸ்டேஷன்க்கு போகணும் க...

தேடல் 5

பகுதி 5 வினய் அப்பா சொன்ன நண்பரைப் பார்த்து அவரிடம் ஜூனியராக சேர்வதற்கு பைக்கில் செல்கிறான். அவர் பெயர் வரதராஜன், வழக்கை வாதாடுவதில் வல்லவர். அதுமட்டுமில்லாமல் நேர்மையானவர். அவரின் திறமைக்கு கோடி கோடியாக சொத்து சேர்த்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் வரும் கேஸ் அனைத்தையும் அவர் ஏற்பதில்லை அவர் மனதிற்கு சரி என்று பட்டால் மட்டுமே அதை ஏற்பார், பணத்தை வைத்து இவரை விலைக்கு வாங்க நினைத்து ஏமாந்து போனவர் நிறைய பேர். அதனால் இவர் சந்தித்த மிரட்டல்கள் நெருக்கடிகள் நிறைய, இருந்தும் இவர் எதற்கும் மசியாதவர்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை இதற்கு மறுபெயர் தான் இந்த வரதராஜன். அதனால் தான் சீனிவாசனின் சாய்ஸ் வரதராஜனாக இருந்தது.  வினய் அவரைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான்,வரதராஜன் வினயை வரச் சொல்கிறார்.வினய் வருகிறான், அவனை உட்கார கூட சொல்லாமல் உங்க அப்பா பேசினார்.அவர் சொன்னதற்காக தான் இதற்கு சம்மதித்தேன், என்று சொல்லும் போதே இவர் மிகவும் கண்டிப்பான பேர்வழி என்று கணித்து விட்டான். நண்பர் மகன் என்று நான் பார்க்க மாட்டேன். சரியான நேரத்துக்கு வர வேண்டும். இன்று 5 நிமிடம் லேட்டாக வந்திருக...