லட்டும் கடலை உருண்டையும்
ஒரு ஊரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. அந்த ஊரில் எப்போதும் அந்த இனிப்பு கடைக்கு என்றே தனிக்கூட்டம் அலைமோதும். வார இறுதி நாட்களில் மிகவும் கூட்டம் நிரம்பி வழியும் பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம், தீபாவளிக்கு வந்து இனிப்புகளை வாங்கி செல்வார்கள் மக்கள். அதுவும் அந்த இனிப்பு கடையில் லட்டுக்கு மிகவும் கிராக்கியாக இருக்கும், அதனால் லட்டுக்கு மிகவும் சந்தோசம் அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் கர்வமும் கொண்டு இருந்தது லட்டு. லட்டு செய்து வந்து கொட்டிய அடுத்த நிமிடம் லட்டு காலியாகி விடும். அதனால் லட்டு அனைவரிடமும் திமிராக நான் தான் உயர்ந்தவன், என்னை தான் மக்கள் விரும்பி உண்கிறார்கள் என்றது சத்தமாக. பக்கத்தில் இருந்த கடலை மிட்டாயை மிகவும் ஏளனமாக பார்த்தது லட்டு. ஏளன சிரிப்புடன் உன்னை யாருமே வாங்க மாட்டார்கள் நீ என் பக்கத்தில் இருக்கிறாயே, நம்ம கடை முதலாளி உன்னை போய் என் பக்கத்தில் வைத்திருக்கிறாரே என்று திமிராக பேசியது. இதை கேட்டு கொண்டிருந்த கடலை மிட்டாய் அமைதியாக சொன்னது இந்த உலகில் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. அனைத்து படைப்பிற்கும் ஒரு அர்த்தமும் பயனு...