லட்டும் கடலை உருண்டையும்
ஒரு ஊரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. அந்த ஊரில் எப்போதும் அந்த இனிப்பு கடைக்கு என்றே தனிக்கூட்டம் அலைமோதும். வார இறுதி நாட்களில் மிகவும் கூட்டம் நிரம்பி வழியும் பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம், தீபாவளிக்கு வந்து இனிப்புகளை வாங்கி செல்வார்கள் மக்கள்.
அதுவும் அந்த இனிப்பு கடையில் லட்டுக்கு மிகவும் கிராக்கியாக இருக்கும், அதனால் லட்டுக்கு மிகவும் சந்தோசம் அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் கர்வமும் கொண்டு இருந்தது லட்டு.
லட்டு செய்து வந்து கொட்டிய அடுத்த நிமிடம் லட்டு காலியாகி விடும். அதனால் லட்டு அனைவரிடமும் திமிராக நான் தான் உயர்ந்தவன், என்னை தான் மக்கள் விரும்பி உண்கிறார்கள் என்றது சத்தமாக.
பக்கத்தில் இருந்த கடலை மிட்டாயை மிகவும் ஏளனமாக பார்த்தது லட்டு. ஏளன சிரிப்புடன் உன்னை யாருமே வாங்க மாட்டார்கள் நீ என் பக்கத்தில் இருக்கிறாயே, நம்ம கடை முதலாளி உன்னை போய் என் பக்கத்தில் வைத்திருக்கிறாரே என்று திமிராக பேசியது.
இதை கேட்டு கொண்டிருந்த கடலை மிட்டாய் அமைதியாக சொன்னது இந்த உலகில் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. அனைத்து படைப்பிற்கும் ஒரு அர்த்தமும் பயனும் உண்டு நம் நேரம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றது கடலை மிட்டாய்.
எவ்வளவு திமிர் என்கிட்டயே இப்படி பேசுகிறாயா என்று லட்டு மனதிற்குள் பொறுமிக்கொண்டது. நாட்கள் கடந்தன அந்த ஊரில் உள்ள அனைவரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டனர். கரும்பு சர்க்கரையை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று டாக்டர்கள் செய்திகளில் விளம்பரப்படுத்தினர். அன்றிலிருந்து லட்டு வாங்குவதை அனைவரும் நிறுத்தினர்.
அதற்கு பதில் வெல்லம் கருப்பட்டியில் செய்த கடலை உருண்டையை வாங்கி சாப்பிட ஆரம்பித்தனர். லட்டு வெட்கி தலை குனிந்தது. அப்போது கடலை உருண்டை சொன்னது நீ வெறும் கடலை மாவில் கரும்பு சர்க்கரை சேர்த்து செய்யப்பட்ட உருண்டை உன்னிடம் எந்த சத்தும் இல்லை உன்னை சாப்பிட்டால் அனைவருக்கும் சர்க்கரை வியாதி தான் வரும். ஆனால் நான் அப்படி அல்ல நாட்டு வெல்லம் கருப்பட்டியில் செய்தவன் என்னிடம் சத்துக்கள் ஏராளம், நான் வேர்க்கடலையில் செய்யப்பட்டதால் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியவன். வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. என்னைத் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தச்சோகை வராது. உடல் வளமாக நலமாக இருக்கும்.அதனால் இப்போது மக்கள் என்னை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் என்றது.
லட்டு தான் இத்தனை நாள் அனைத்து இனிப்பையும் மட்டம் தட்டி பேசி தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டது.
நீதி
அனைவருக்குமே அவரவர் நேரம் வரும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment