தேடல் 20
பகுதி 20
வினய் இரவு வரதராஜன் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டே தூங்கினான், இரவு ஒரு 3 மணி அளவில் வினய்க்கு முழிப்பு வந்தது அருகில் தண்ணீர் பாட்டிலை தேடினான் அதில் தண்ணீர் இல்லை. உடனே சமயலறைக்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு வந்து படுத்தான். அப்போது அவனுக்கு போன் கால் வந்தது, வினய் யார் அது இந்த நேரத்தில் என்று ஹலோ என்றான், அடுத்த முனையில் வினய் நீ பயப்படாமல் இந்த கேஸ் எடுத்து எனக்கு பதிலாக வாதாடு என்று குரல் கேட்டது, வினய் யாரென்று கேட்டான், அந்த குரல் வரதராஜன் என்றது வினய்க்கு தூக்கி வாரி போட்டது.
சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தான் மணி 7 ஆகி இருந்தது, வினயின் முகம் வியர்த்து கொட்டியது மனசு படபடத்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு நாம் கண்டது கனவு என்று மனசை தேற்றிக்கொண்டான். இருந்தாலும் வரதராஜன் கேஸ் எடுத்து வாதாடுவது என்று முடிவுக்கு வந்தான்.
இன்னும் 2 நாட்களே உள்ளன வழக்கு வருவதற்கு அதற்குள் அனைத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று மனதில் யோசித்து கொண்டான். விவசாயிகளை பார்க்க சென்றான் அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் சேகரித்து கொண்டான்.
வீட்டில் அம்மா வாணியையும் அப்பா சீனிவாசனையும் அழைத்து நான் இந்த கேஸ் எடுத்து வழக்காட போகிறேன் என்று சொன்னான். அவர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர், ஆனால் வினய் முகம் மட்டும் கொஞ்சம் வாட்டமாகவே இருந்தது. அதை கவனித்த சீனிவாசன் அப்பாவை எதிர்த்து வாதாட வேண்டும் என்பதால் உன் முகத்தில் இந்த வாட்டமா என்றார். ஆமா இது என்னோட முதல் வழக்கு அதுவும் இல்லாமல் என் குருவும் இப்போது உடல்நிலை சரி இல்லை, அது மட்டுமல்லாமல் பெரிய வழக்கு, அதையும் மீறி என் அப்பாவை எதிர்த்து வாதாட போகிறேன் என்பதால் எனக்கு மிகவும் கவலையா இருக்கு.
என் சூழ்நிலை வேற யாருக்கும் வர கூடாது என்று வினய் சொல்லிவிட்டு வருந்தினான். அப்போது சீனிவாசன் இது எல்லா தொழிலும் இருக்கும் விஷயம் தான், எல்லாம் மறந்து உன் வேலையை விரும்பி நீ செய்தால் உன்னை சுத்தி இருக்குற சூழ்நிலையை உன் வசமாக்கிடலாம். எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காத வெற்றியோ தோல்வியோ நீ உன் வேலையை விரும்பி உன் மனதுக்கு திருப்தியா செய் அது உன்னை மேம்படுத்தும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சீனிவாசன்.
வாணிக்கு சந்தோசம் தாங்கவில்லை டேய் வினய் நீயும் உங்க அப்பாவும் வாதாட போறீங்க எனக்கு சந்தோசமா இருக்கு நீ உங்க அப்பா தானேனு விட்டு கொடுக்காம தைரியமா வாதாடனும் சரியா என்றாள் வாணி வெகுளியாக. சரிம்மா என்று சொல்லி விட்டு நகர்ந்தான் வினய்.
அப்போது இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் வினய்க்கு போன் செய்தார்.வினய் எடுத்து ஹலோ என்றான், வினய் நீங்க சொன்னதை வச்சு நான் இன்னைக்கு ராஜா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன் ஆனால் வீடு பூட்டி இருக்கு, இது என்னவோ திட்டம் போட்டு செய்ற மாதிரி இருக்கு அவர் மனைவிக்கும் ஏதோ தெரிஞ்சுருக்கு ராஜா வந்து போயிருக்கான் வீட்டுக்கு, அதனால நான் ராஜாவை கண்டுபிடிக்குறதுல தீவிரப்படுத்துறேன் செக் பாயிண்ட் எல்லாத்துக்கும் அவன் போட்டோ அனுப்பிருக்கேன் அவன் கிடைச்சுட்டா கொஞ்சம் சுலபமா இருக்கும் என்றார் ரஞ்சித். ஆமா சார் நீங்க ஏதாவது முன்னேற்றம் இருந்தா சொல்லுங்க எனக்கு தெரிஞ்சு எந்த விஷயமானாலும் சொல்றேன் என்றான் வினய், ரஞ்சித் என்று குரல் கேட்கவே சரி வினய் நான் உங்களுக்கு அப்புறமா கால் பண்றேன் நான் வெளியில இருக்கேன் என்று வைத்து விட்டார் ரஞ்சித்.
என்ன அம்மா கூப்பிட்டுகிட்டே இருக்க போன் பேசிட்டு இருக்கேன்ல என்றான் ரஞ்சித். ஏண்டா ரஞ்சித் இப்போ நீ ஃபிரியா இருக்கேனு தான ஷாப்பிங் கூட்டிட்டு வந்தேன் இப்போ என்னடா இங்கயும் வந்து போன்ல பேசிட்டு இருக்க இங்க வா உனக்கு ஆட்டா நூடுல்ஸ் வேணுமா, மைதா நூடுல்ஸ் வேணுமா என்றாள் ரஞ்சித் அம்மா கோமதி. ஆம் கோமதி ரஞ்சித்தின் அம்மா அவர் ஊரில் தான் இருப்பார் எப்போதாவது தன் மகனை பார்க்க மதுரைக்கு வருவதுண்டு இப்போது இங்கு வந்திருக்கிறார், சரி வாங்க கதைக்கு போகலாம். அம்மா இந்த நூடுல்ஸ் வேணுமா அந்த நூடுல்ஸ் வேணுமான்னு கேட்க தான் கூப்பிட்டியா என்று கோபமானான் ரஞ்சித்.
பின்ன உனக்கு என்ன வேணும்னு எனக்கு என்ன தெரியும் அது சரி இல்லை இது சரி இல்லைனு குறை சொல்லுவா உனக்குன்னு ஒருத்தி வந்தா நான் எதுக்கு அவளே எல்லாத்தையும் பார்த்துக்குவா என்றதும் ரஞ்சித் சரி ஏதாவது ஒன்னு எடுத்து வை உடனே கல்யாண பேச்சு எடுக்காத என்று நகர்ந்தான்.
உடனே முகம் அஷ்டகோணலாகும் உனக்கு கல்யாண பேச்சு எடுத்தாலே இப்படித்தான் என்று கோமதி சலித்து கொண்டாள். அப்போது சர்க்கரை தீர்ந்துடுச்சு அந்த சுகர் பாக்கெட் எடு என்றதும் ரஞ்சித் அதை எடுக்க முயல இன்னொரு கை வந்து இன்னொரு பக்கம் அந்த சர்க்கரை பாக்கெட்டை எடுக்க முற்பட்டது. இருவரும் சாரி என்று கேட்டுக்கொண்டே முகத்தை பார்த்தனர் அது வேறு யாருமல்ல உமா, ஹாய் சார் நீங்க என்ன இந்த பக்கம் என்றாள் உமா. காபி குடிக்க வந்தேன் என்றான் கிண்டலாக, என்ன சார் கிண்டலா என்றாள் உமா.
பின்ன என்ன சூப்பர்மார்கெட்க்கு எதுக்கு வருவாங்க ஷாப்பிங் தான் என்று சொல்லி முடிக்கையில் கோமதி எல்லா பொருளையும் எடுத்து கொண்டு தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு ஒரு சர்க்கரை பாக்கெட்டை எடுக்க இவ்வளவு நேரமா என்று வந்து பார்த்தாள் அப்போது உமாவும் ரஞ்சித்தும் பேசிக்கொண்டிருந்தனர்.
கோமதி இது யார் என்று கேட்கையில் அம்மா இது உமா என்னோட ஃபிரென்ட் என்று அறிமுகப்படுத்தினான். உமா கை எடுத்து கும்பிட்டு வணக்கம் என்றாள். கோமதியும் வணக்கம் என்றாள் பின் இருவரும் பேசிக்கொண்டனர் பில் முடித்து வருவதற்குள் கோமதியும் உமாவும் நன்றாக ஒட்டிக்கொண்டனர்.
வெளியே வந்ததும் கோமதி உமாவிடம் எங்க வீட்டுக்கு கண்டிப்பா வந்துட்டு போகணும் வாம்மா என்றாள், இல்லைம்மா இன்னொரு நாள் வரேன் என்றாள் உமா. அது எல்லாம் முடியாது பக்கத்துல தான் வீடு வந்து ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம் வா என்றாள் கோமதி. வற்புறுத்துவதால் அதை தவிர்க்க முடியாமல் உமாவும் சென்றாள் மூவரும் காரில் சென்றனர் செல்லும் போதே இருவரும் அந்த சாப்பாடு எனக்கு பிடிக்கும் அது நன்றாக இருக்கும் இந்த ஹோட்டலில் இது நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
வீட்டை அடைந்தனர், கோமதி காபி போட்டு கொண்டு வந்தாள் ஆண்ட்டி உங்க வீடு ரெம்ப நல்லா இருக்கு என்றாள் உமா. எல்லாம் என் மகன் தான் நல்லா சுத்தம் பண்ணி வச்சுப்பான் நான் மாசத்துல ஒரு நாள் வந்து போவேன் அவ்ளோதான் என்றாள் கோமதி. ஏன் ஆண்ட்டி நீங்களும் இங்க இருக்கலாம்ல என்றாள் உமா. எனக்கு எங்க ஊருல இருக்குற மாதிரி இங்க இருக்க முடியாது இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா நிம்மதியா இருக்கும் என்றாள் கோமதி.
ஏன் சார் நீங்க கல்யாணம் சீக்கிரம் பண்ணிக்க வேண்டியது தான பாருங்க உங்க அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்க என்றாள் உமா, ரஞ்சித் சிரித்துக்கொண்டே நழுவினான். கோமதியும் உமாவும் அதிக நேரம் பேசிக்கொண்டே இருந்தனர். பின் டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என்றாள் உமா, டேய் ரஞ்சித் இவளை போய் வீட்டுக்கு விட்டுட்டு வா என்றாள் கோமதி, ஐயோ அதெல்லாம் வேண்டாம் நான் ஆட்டோல போய்டுவேன் என்று கிளம்பினாள் உமா.
இல்லை உமா இருங்க நான் கார்ல விட்டுட்டு வரேன் என்று கிளம்பினான் ரஞ்சித், ஐயோ உங்களுக்கு எதுக்கு சிரமம் என்றாள் உமா, இதில என்னமா சிரமம் அவன் விட்டுட்டு வர போறான் என்று கோமதி சொன்னாள். சரி என்று இருவரும் காரில் கிளம்பினர். அப்போது உமாவிடம் அடிக்கடி வீட்டுக்கு வந்து இந்த ஆண்ட்டியை பார்க்க வரணும் அடுத்த தடவை வரும் போது பாதுஷாவும் முறுக்கும் பண்ணி வச்சுருக்கேன் சரியா என்றாள் கோமதி. சரி ஆண்ட்டி போய்ட்டு வரேன் என்று சொல்லி கையசைத்தாள். காரில் செல்லும்போது உமா பேச ஆரம்பித்தாள்.
ஏன் சார் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க பாவம் அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்க என்றாள் உமா. ம்ம் புரியுது எனக்கு பிடிச்ச பொண்ணு கிடைக்கணுமே அதான் காத்திட்டு இருக்கேன் என்றான் ரஞ்சித்.
அப்போ உங்களுக்கு எப்படி பொண்ணு வேணும் சொல்லுங்க என்றாள் உமா, எனக்கு பொண்ணு நல்லா கலகலன்னு பேசணும் என்னை எங்க அம்மாவை நல்லா பார்த்துக்கணும் அது போதும் என்றான் ரஞ்சித். ஓஹோ கவலையை விடுங்க நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு கண்டிப்பா கிடைக்கும் என்றாள் உமா. அது சரி அம்மா ஏன் ஊரை விட்டு இங்க வர மாட்டேங்கிறாங்க என்றாள் உமா, அது அப்பா வாழ்ந்த இடம் அப்பா இறந்த பிறகு அம்மாக்கு ஒரே ஆறுதல் அந்த வீடு தான் அந்த வீட்ல இருந்தா அப்பா கூட இருக்குற மாதிரி ஒரு உணர்வு அம்மாவுக்கு அதுனால அம்மா அந்த வீட்டை விட்டும் ஊரை விட்டும் வர மறுக்கிறாங்க என்றான் ரஞ்சித்.
ஓஹோ இப்போ புரிஞ்சுருச்சு என்றாள் உமா. சரி சார் வீடு வந்துடுச்சு என்றாள் உமா. உமா இறங்கினாள் வாங்க சார் வீடு வரைக்கும் வந்துடீங்க உள்ளே வராம போக கூடாது வாங்க என்றாள் உமா. இல்லை இன்னொரு நாள் உரிமையோடு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் ரஞ்சித். என்னது உரிமையோடா என்று குழம்பிக்கொண்டே உமா வீட்டுக்குள் நுழைந்தாள்.
ரஞ்சித் வீட்டுக்கு போகும் போதே முடிவு செய்து விட்டான். உமாவின் குணம் அவன் அம்மாவிடம் பழகும் விதம் எல்லாமே பிடித்து விட்டது ரஞ்சித்திற்கு, அதற்கு முன்னரே ஆசை இருந்தது அதனால் உமாவை கல்யாணம் செய்து கொள்ளலாம் அம்மாவிடம் பேசி இது குறித்து முடிவு எடுப்போம் என்று நினைத்துக்கொண்டே சென்றான்.
காலை கோர்ட்டில் அனைவரும் அமர்ந்திருக்க வினையும் அவர் அப்பாவும் எதிரெதிர் தரப்பில் வாதாட ஆயத்தமானார்கள்....
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment