தேடல் 25
பகுதி 25
கோர்ட்டில் வினய் நன்றாக ஒரு கைதேர்ந்த வழக்கறிஞராக வாதாடினான், சீனிவாசன் கைதேர்ந்த வழக்கறிஞராக இருந்தாலும் வினய் எடுத்து வைக்கும் வாதத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.
அப்போது வினய் வரதராஜன் டிரைவர் ராஜா தலை மறைவிற்கும் மாதவனுக்கும் சம்பந்தம் உண்டு என்று வாதாடிய பொழுது ஜட்ஜ் குறுக்கிட்டு ஆதாரம் இல்லாமல் இவ்வாறு பேசக்கூடாது என்று கூற, இல்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று டிரைவர் ராஜாவின் மனைவியை விசாரிக்க அனுமதி கோரினான் வினய். ஜட்ஜ் யூ கேன் ப்ரோஸீட் என்றதும் அமுதா அமுதா அமுதா என்று மூன்று முறை கூப்பிட சாட்சி கூண்டில் அமுதா ஏறினார்.
மாதவன் மற்றும் ஜெகன் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது அமுதாவை நேரில் பார்த்ததும்,வினய் விசாரணையை தொடங்கினான், உங்கள் பெயர் என்ன என்றான் வினய், அமுதா என்றதும் உங்கள் கணவர் பெயர், எங்கே வேலை பார்க்கிறார் என வினய் கேட்க, என் கணவர் பெயர் ராஜா வரதராஜன் சாரிடம் டிரைவர் வேலை பார்க்கிறார் என்றாள் அமுதா.
இப்போது உங்கள் கணவர் எங்கே என்று வினய் கேட்க, தெரியாது என்று பதிலுடன் அழுகையையும் பதிலாக கொடுத்தாள் அமுதா. ஏன் இங்கு அழுகுறீர்கள் யாரும் உங்களை மிரட்டினார்களா என்று வினய் கேட்க, ஆம் என்னை ஜெகன் என்பவர் வீட்டுக்கு வந்து மிரட்டினார், என் கணவரை பற்றி தகவல் கிடைத்தால் போலீஸிடம் சொல்லாமல் எங்களிடம் சொல்ல வேண்டும் என்று என் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார் அப்போது போனில் யாரிடமோ பாஸ் என்று சொல்லி பேசிக்கொண்டே எங்களை மிரட்டினார். நான் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் சாரிடம் வந்து சேர்ந்தேன் என அழுது கொண்டே சொன்னாள் அமுதா.
இது தான் யுவர் ஹானர் என்று வினய் கூற, ஜட்ஜ் யாரு அந்த ஜெகன் என்று கேட்க, மாதவனின் கம்பெனியில் வேலை செய்பவர் என்று சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெகன் கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை விட்டு நகர முற்பட்டான்.
அப்போது இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் ஜெகனை போக விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். அப்போது வினய் ஜெகனை விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கூற, ஜட்ஜ் அனுமதி அளித்தார். பின் ஜெகன் கூண்டில் ஏறினான்.
உங்கள் பெயர் என வினய் கேட்க, ஜெகன் என்று சொன்னான். உங்களுக்கும் மாதவனுக்கும் என்ன சம்பந்தம் என்று வினய் கேட்டான். நான் மாதவன் சார் கம்பெனில வேலை பார்க்கிறேன் என்றான் ஜெகன். சரி எதிரில் இருப்பவர் உங்களுக்கு தெரிகிறதா என்று கேட்டான் வினய். தெரியலை என்றான் ஜெகன். அட பாவி என் வீட்டுக்கு வந்து என்னைய மிரட்டி என் குழந்தை கழுத்துல கத்தி வச்சியே என்று அமுதா கத்தினாள். என்னமா என்ன என்னவோ பேசுறயே என்று ஜெகன் கேட்டான்.
அப்போ நீங்க அமுதா வீட்டுக்கு போய் மிரட்டவே இல்லையா என்று வினய் கேட்க, அய்யோ நான் போகவே இல்லை போனதானே மிரட்டுறதுக்கு என்று ஜெகன் பிடிவாதம் பிடித்தான். வினய் தன் இருக்கையில் இருந்த ஒரு கவரை ஜட்ஜிடம் கொடுத்தான் இது அமுதா குடியிருக்கும் வீடு பக்கத்தில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவானது இதில் ஜெகன் வருவதும் போவதும் பதிவாகி உள்ளது என்றான் வினய்.
ஜெகனுக்கு வியர்க்க ஆரம்பித்தது ஜட்ஜ் அந்த சிடியை லேப்டாபில் பார்த்து ஆமாம் என்று தலையாட்டினார். அவ்வளவு தான் யுவர் ஹானர் இவர் மூலமாக தான் மாதவன் இதை செய்திருக்க வேண்டும் என்று கூற, சீனிவாசன் எழுந்து ஜெகன் இதை செய்தார் என்றே வைத்து கொள்ளுங்கள் ஆனால் இதற்கும் மாதவனுக்கும் என்ன சம்பந்தம் ஜெகனுக்கும் டிரைவர் ராஜாவிற்கும் தனிப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருக்கலாம் அல்லவா என்றார் சீனிவாசன்.
ராஜா ஏன் தலைமறைவு ஆக வேண்டும் அவர் மனைவியை ஜெகன் வந்து ஏன் மிரட்ட வேண்டும் ராஜாவை பற்றி தகவல் தெரிந்தால் எங்களிடம் கூற வேண்டும் என்று ஏன் ஜெகன் சொல்ல வேண்டும் என்று வினய் கேட்க, ஜட்ஜ் குறுக்கிட்டு தக்க ஆதாரம் உங்களிடம் இருந்தால் மட்டும் பேசுங்கள் இல்லை என்றால் ஆதாரத்தை கொண்டு வந்து விட்டு பேசுங்கள் என்றார். வினய் மீண்டும் அதை நினைவு படுத்தினான் ஜெகன் அமுதாவை மிரட்டும் போது ராஜாவை பற்றி தகவல் கிடைத்தால் என்னிடம் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை எங்களிடம் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் ஜெகன் போனில் பாஸ் என்று பேசிக்கொண்டே அமுதாவின் குழந்தையின் மேல் கத்தி வைத்து மிரட்டினார் என்று அமுதாவே சாட்சி கூறினார் அல்லவா என்று நினைவு படுத்தினான் வினய்.
சீனிவாசன் எழுந்து எனக்கு சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை ஜெகன் போனில் பாஸ் என்று சொல்லிக்கொண்டே மிரட்டினார் என்பதற்காக அது மாதவன் என்றாகி விடுமா என்றார். அது மட்டுமில்லாமல் டிரைவர் ராஜா எங்கே அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை தலைமறைவாகி இருக்கிறாரா என்றெல்லாம் கேட்டார் எதிர்கட்சிக்காரர் ஆனால் அவரை கண்டுபிடித்து கொடுக்கும் படி ஒரு ஆட்கொணர்வு மனு ஏன் இன்னும் போட வில்லை என்று சீனிவாசன் கேட்டார்.
ஜட்ஜ் பேச ஆரம்பித்தார் ராஜாவை இத்தனை நாள் காணவில்லை எனும் பொழுது ஏன் ஆட்கொணர்வு மனு போடவில்லை அவர் குடும்பத்தில் இருந்து, அதுமட்டுமில்லாமல் மாதவன் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்த முடியாது அதே சமயம் ஜெகன் மீது தக்க ஆதாரம் இருப்பதால் அவரை 10 நாள் போலீஸ் கஷ்டடியில் விசாரிக்க அனுமதி அளிக்கிறேன் வழக்கை 10 நாட்கள் தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி ஜட்ஜ் எழுந்து கிளம்பி விட்டார்.
ஜெகனை இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். மாதவன் முகம் அதிர்ச்சியில் இருந்தது. மிகவும் கோபம் அடைந்தான் சீனிவாசனிடம் அந்த கோபத்தை காட்டினான். உங்கள் மகன் என்பதால் நீங்கள் விட்டு கொடுத்து விட்டீர்களா என்று கோபத்தில் ஏதேதோ பேச ஆரம்பித்தான் மாதவன். சீனிவாசன் பொறுமையாக நான் எப்படி வாதாட வேண்டுமோ அப்படி வாதடினேன் உங்கள் பெயரும் சேர்ந்து மாட்டிவிடப்படும் நிலை வரும்போது குறுக்கிட்டு வாதாடினேன் அது அனைவர்க்கும் தெரியும் என்று பொறுமையாக சொல்ல மாதவன் மிகவும் கோபமுற்றான்.
நீங்கள் இனி இந்த வழக்கில் வாதாட தேவை இல்லை என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு காரில் பறந்து சென்றான். சீனிவாசனும் அவர் காரில் வீட்டுக்கு சென்றார். இது மிகவும் முக்கியமான வழக்கு அதுவும் மிக பெரிய வழக்கறிஞரான வரதராஜன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால் வழக்கை பற்றிய செய்திகள் உடனுக்குடன் நேரலையில் பிளாஷ் நியூஸ் எல்லா சேனல்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது. அதில் அனிதா வேலை செய்யும் சேனலும் என்பதால் செய்தியை உடனுக்குடன் தெரிந்து கொண்டாள் அனிதா.
வினய் கோர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அனைவரும் பாராட்டினர், அனிதாவிடம் இருந்து போன் வந்தது ஹேய் காங்கிராட்ஸ் வினய், எல்லா சேனலுக்கும் இந்த செய்தி தான் முக்கிய செய்தியா போய்கிட்டு இருக்கு என்றாள், அப்படியா என்று வினய் ஆச்சர்யத்துடன் கேட்க, ஆமா வினய் என்று அனிதா சொன்னாள். சரி அனிதா நான் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க சேனல் இருக்குற பக்கத்துல ஒரு பார்க் இருக்குல்ல அங்க வருவேன் பார்க்கலாம் என்றான் வினய். சரி வினய் நானும் இப்போ ஃபிரீ தான் வா நானும் வந்துடுறேன் என்று போனை வைத்து விட்டாள்.
வீட்டிற்கு வந்ததும் அம்மா வாணிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை டிவி சமூகவலைத்தளம் என்று எல்லாவற்றிலும் இதே நியூஸ் என்பதால் வாணிக்கு சந்தோசம் தாங்கவில்லை. நான் அப்போவே சொன்னேன்ல என் பிள்ளை எப்படியும் நல்லா வாதாடுவானு சொன்னேன்ல என்று வினயிடம் கூறினாள் வாணி. அய்யோ அம்மா இன்னும் தீர்ப்பே வரல அதுக்குள்ள ஏன் இவ்ளோ ஆர்ப்பாட்டம் என்று அம்மா வாணியிடம் கூறினான்.
எனக்கு இதுவே பெரிய விஷயம் தான் கண்டிப்பா தீர்ப்பு உனக்கு சாதகம் தான் பாரு நீ தான் ஜெயிப்ப என்று வாணி அம்மாவிற்கே உரிய பாசத்தில் சொன்னாள். சரி அப்பா வந்துட்டாரா என்று வினய் கேட்டான். ஆமா அவர் அப்போவே வந்துட்டார் ஆனால் வந்து அறைக்கு போனார் அதுக்கு அப்புறம் வெளியே வரவே இல்லை என்று வாணி கூற, உடனே வினய் சீனிவாசன் அறைகதவை திறந்தான்.....
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை comment box இல் தெரிவிக்கவும்

Comments
Post a Comment