Facebook page

தேடல் 22

பகுதி 22

உமா வீட்டில் வினயும் அனிதாவும் வந்து இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் சொன்ன விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். உமா நீ என்ன நினைக்கிற என்று கேட்ட நேரத்தில் ரஞ்சித்திடம் இருந்து கால் வந்தது வினய்க்கு, டிரைவர் ராஜாவின் மனைவி கிடைத்து விட்டதாக தகவல் சொன்னான் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித். உடனே வினய் உமாவிடமும் அனிதாவிடமும் சொல்லிக்கொண்டு ஸ்டேஷனுக்கு புறப்பட்டான்.

ஸ்டேஷனில் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்திடம் என்ன சார் ராஜா மனைவி கிடைச்சுட்டாங்களா, ஆனால் அவர் மனைவி எதுக்கு தப்பிக்க நினைக்கணும் என்று கேட்டான் வினய்.

அதே தான் எனக்கும் சந்தேகம் அவர் மனைவி குழந்தை இங்கதான் இருக்காங்க, நாங்க பிடிச்சுட்டு வந்ததும் அதிர்ச்சில இருக்காங்க எதுவும் பேசலை இன்னும் வாங்க போய் பார்க்கலாம் என்று ஸ்டேஷனுக்குள் வினயை கூட்டி வந்தான் ரஞ்சித்.

சாந்தி என்று கூப்பிட்டான் ரஞ்சித். எஸ் சார் என்று சல்யூட் அடித்து ஒரு பெண் ரஞ்சித் முன் வந்து நின்றார், ராஜா மனைவியை கூட்டிட்டு வாங்க என்றான் ரஞ்சித், சரி சார் என்று சொல்லிக்கொண்டு அந்த பெண் டிரைவர் மனைவியை கூட்டி வந்தார்.

ராஜாவின் மனைவி வந்ததும், உட்காருங்கள் என்றார் ரஞ்சித். வினயும் ரஞ்சித்தின் அருகில் அமர்ந்தான். ரஞ்சித் விசாரணையை தொடங்கினார், உங்க பெயர் என்ன என்றான், என் பெயர் அமுதா என்றாள்  ராஜாவின் மனைவி, உங்க வீட்டுக்காரர் எங்க, எங்க தலைமறைவா இருக்கார் சொல்லுங்க என்றான் ரஞ்சித்.

எனக்கு எதுவும் தெரியாது என்றாள் அமுதா, சரி அவர் போன் நம்பர் கொடுங்க என்றான் ரஞ்சித், அவர் போனுக்கு நிறைய தடவை பண்ணி பார்த்துட்டேன் ஸ்விட்ச் ஆஃப் ல தான் இருக்கு என்றாள். என்னமா விளையாடுறீங்களா என்று ரஞ்சித் குரலை உயர்த்த  அமுதா அழத் தொடங்கினாள். வினய்க்கு அதை பார்த்ததும் மிகவும் சங்கடமாக நினைத்தான். 


நீங்க எந்த உண்மையையும் சொல்லலைனா ரெம்ப கஷ்டம் தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லுங்க என்று பொறுமையாக அமுதாவிடம் வரதராஜனின் தற்போதைய நிலைமையை எடுத்து சொன்னான் வினய். அமுதா அப்போதும் அமைதியாகவே இருந்தாள், வினய் எழுந்து போனான்.

அனைத்தையும் பொறுமையாக யோசித்து பார்த்த அமுதா சரி சொல்றேன் என்று சொன்னதும், ரஞ்சித் மற்றும் வினய் இருவரும் திரும்பி பார்த்தனர். என் புருஷன் உயிரோட இருக்காரா இல்லையா சொல்லுங்க என்றாள் அமுதா, ராஜா உயிரோட இருக்குறதால தான் உங்களை இங்க கூட்டி வந்து விசாரிக்கிறோம் என்றான் ரஞ்சித். 

அப்போது அமுதா மிகவும் சந்தோஷப்பட்டாள், வினயும் ரஞ்சித்தும் இருவரும் முகத்தை பார்த்துக்கொண்டனர். அப்போ உங்களை உங்க புருஷன் வந்து பார்க்கவே இல்லையா என்று ரஞ்சித் கேட்க, இல்லவே இல்லை அவர் எப்போ வரதராஜன் சார்கு ஆக்சிடென்ட் ஆச்சோ அப்போ இருந்து இப்போ வரைக்கும் வீட்டுக்கு வரலை எனக்கு போனும் பண்ணவே இல்லை  என்றாள் அமுதா.


என்ன!! ராஜா இன்னும் உங்களை பார்க்கவும் இல்லை போனும் பண்ணலயா! என்று ஆச்சரியப்பட்டான் ரஞ்சித்.பின்பு யோசித்து விட்டு அப்புறம் எதுக்கு நீங்கள் ஊரை விட்டு கிளம்பினீங்க என்றதும், அழ ஆரம்பித்தாள் அமுதா.

என்ன பிரச்சனை என்று தெளிவாக சொல்லுங்கள் அப்போது தான் உங்களை நாங்கள் காப்பாற்ற முடியும் என்றான் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித், அமுதா சொல்ல தொடங்கினாள் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து விசாரித்து விட்டு சென்றதும் ஒருத்தன் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டினான், ராஜாவை பற்றி தகவல் தெரிந்தால் போலீஸிடம் சொல்லாமல் எங்களிடம் வந்து சொல்ல வேண்டும் இல்லை என்றால் உன் குழந்தையை கொன்று விடுவோம் என்று மிரட்டினான் என்று அழுதாள்.

யார் அவன் என்று ரஞ்சித் கேட்க, எனக்கு தெரியாது ஆனால் அவன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான். நாங்கள் தப்பிக்காமல் இருக்க 2 பேர் எங்கள் வீட்டு வாசலில்  எப்போதும்   கண்காணிக்கும் படி சொல்லிவிட்டு சென்றான். எனக்கு மிகவும் பயமாக இருந்தது அவர்கள் சாப்பிட வெளியே சென்ற பொழுது நான் பதறியடித்து தப்பித்து வந்து விட்டேன். சரி இந்த ஊரை விட்டு சென்று விடலாம் என்ற பொழுது உங்களிடம் மாட்டிக்கொண்டேன் என்று அழுதாள் அமுதா.


அவன் எப்படி இருந்தான் என்று கேட்டான் வினய், அமுதா அங்க அடையாளங்களை சொல்ல சொல்ல வினய்க்கு ஜெகன் மீது சந்தேகம் வர இவனா என்று தன் கையில் இருந்த மொபைலில் ஜெகன் போட்டோ காட்டினான் ஆம் இவன் தான் என்று அதிர்ந்து போய்  சொன்னாள்  அமுதா. 

சார் இவன் மாதவன் கூட இருக்கறவன், எனக்கு எப்போ வரதராஜன் ஆக்சிடென்ட் ஆனாரோ அப்போவே சந்தேகம் இருந்துச்சு ஆனால் இப்போ தான் தெளிவா புரியுது இதுல கண்டிப்பா மாதவன் சம்பந்தப்பட்டிருக்கான் என்று வினய் சொன்னான். 

இதுக்கு எல்லாமே விடை வந்து ராஜா தான் அவனுக்கு ஏதோ ஒரு விஷயம் தெரிந்துருக்கு அதனால தான் அவன் வீட்டுக்கு போய் மிரட்டி இருக்காங்க என்று ரஞ்சித் சொல்லி கொண்டிருக்கும்போதே ரஞ்சித் அம்மாவிடம் இருந்து ரஞ்சித்திற்கு போன் வந்தது, அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவேன் என்று வைத்து விட்டான் ரஞ்சித்.

சரி இப்போ அமுதா அவுங்க வீட்டுக்கு  போன பாதுகாப்பு இல்லை சாந்தி இவுங்களை உங்க கூட தங்க வச்சுக்க முடியுமா என்று பெண் கான்ஸ்டபிள் சாந்தியிடம் கேட்டான் ரஞ்சித், அவளும் சரி என்று சொல்லவே அப்போ உங்க கூட கூட்டி போய் வச்சுக்கோங்க இந்த கேஸ் முடியிற வரைக்கும் என்று சொல்லி விட்டு கிளம்பினான் ரஞ்சித். வினயும் சரி சார் அப்போ நானும் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு சென்றான் வினய்.

உமா வீட்டிற்கு சென்றான் வினய், உமாவும் அனிதாவும் பேசி கொண்டு இருந்தனர், வினய் வந்ததும் ஹே என்னாச்சு வினய் என இருவரும் கேட்க வினய் நடந்ததை கூறினான். சரி ராஜ் எங்க என்று வினய் கேட்க அவன் வேலை விஷயமா கோவை போயிருக்கான் அங்க ஷூட்டிங் அவன் வரதுக்கு 2 நாள் ஆகும் என்றாள் அனிதா.


ஓஹோ அப்படியா சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க உமா என்று வினய் கேட்க, இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது என்று உமா சொன்னாள். சரி நான் அப்போ ரஞ்சித் சார்கிட்ட சொல்லிடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டான் வினய். இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்னை யோசிக்க விடு அப்புறம் சொல்லிக்கலாம் என்று உமா வழிய ஆரம்பிக்க, ஓஹோ சரி சரி என்று அனிதாவும் வினயும் ஒரே குரலில் கிண்டல் செய்தனர். இதுக்கு தான் நான் சொல்லாம இருந்தேன் இப்போ பாருங்க நீங்க கிண்டல் செய்றீங்க என்று உமா கோபிக்க, சரி சரி நீ நல்லா யோசிச்சு முடிவு எடு என்று அனிதா உமாவை சமாதானபடுத்தினாள். 

சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர், அனிதாவை வினய் பைக்கில் சென்று அவள் வீட்டில் விடுவதற்காக கிளம்பினான், அப்போது பைக்கில் போய்க்கொண்டு இருக்கும்போது அனிதா பேச தொடங்கினாள், ம்ம்ம் உமாவுக்கு கூட கல்யாணம் பேச்சு வந்துருச்சு நமக்கு எப்போ கல்யாணம் என்று அனிதா கேட்க, நம்ம இரண்டு பேர் வீட்ல இதை பத்தி பேசிட்டு முடிவு எடுப்போம் என்றான் வினய்.  


போகும் வழியில் ஃப்ரைட் ரைஸ் கடை வந்ததும் நிறுத்து நிறுத்து வினய் என்றாள் அனிதா, எதுக்கு அனிதா நிறுத்த சொல்ற அங்க பாரு  ஃப்ரைட் ரைஸ் கடை சாப்பிட்டு போகலாம் என்று அனிதா சொல்ல, சரி வா சாப்பிடுவோம் என்று சொல்லிக்கொண்டு இருவரும் சாப்பிட கடைக்கு சென்றனர். இருவரும் தள்ளுவண்டி கடையில் அமர்ந்து ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது அனிதா வினயிடம் கேட்டாள், உங்க அப்பா என்ன சொன்னார் அவருக்கு எதிரா வாதாடுனியே என்று அனிதா கேட்க, அவர் தான் எனக்கு தைரியம் கொடுத்து வாதாட சொன்னார் முதலில் தயங்கினேன் அப்புறம் அப்பா கொடுத்த தைரியத்தில் நானும் வாதாட தயாரானேன், வீட்டுக்கு வந்ததும் அப்பா என்னிடம் நீ நல்லா வாதாடின முதல் தடவை மாதிரியே இல்லை என்று பாராட்டினார் என்றான் வினய். ஓஹோ பரவாலேயே வாழ்த்துக்கள் என்றாள் அனிதா. சரி வரதராஜன் சாரை போய் பார்த்தியா என்றாள் அனிதா, இல்லை இரண்டு நாள் இந்த கேஸ் விஷயமா அலைஞ்சதுல பார்க்க முடியல இப்போ போய்  பார்த்துட்டு வீட்டுக்கு போகணும் என்றான் வினய்.

சரி நேரமாயிடுச்சு மழை வேற வர மாதிரி இருக்கு போகலாம் என்றாள்  அனிதா. சரி என்று இருவரும் கிளம்பினர். அனிதாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு அவன் வரதராஜனை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றான்.

அங்கு வரதராஜன் அறைக்குள்  நுழைந்த வினய் அதிர்ச்சியானான்.......


தேடல் தொடரும் 


பாகா 


உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்  

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10