Facebook page

தேடல் 24

பகுதி 24

கோர்ட் வளாகத்தில் காற்றை கிழித்து கொண்டு ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து இறங்கியது வேறு யாருமல்ல மாதவனும் அவன் ஆட்களும் தான் அவர்கள் வேகமாக கோர்ட்டிற்குள் நுழைந்தனர். வாசலில் சீனிவாசன் நின்று கொண்டு வாங்க அடுத்து ஒரு அரைமணி நேரத்துல நம்ம கேஸ் வந்துடும் என்று கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.

அனைவரும் ஒரு இடத்தில் வந்து அமர்ந்தனர், அப்போது சீனிவாசன் இங்கயே உட்கார்ந்திருங்க நான் போய்ட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். மாதவன் அவர் போகும் பாதையை பார்த்துக்கொண்டே இருந்தான், அதை கவனித்த ஜெகன் என்ன பாஸ் அவரை பார்த்துக்கொண்டே இருக்கீங்களே என்ன விஷயம் என்றான்.

இல்லை இவரை முழுவதுமா நம்பலாமா இல்லையானு தான் தெரியலை, நமக்கு எதிரா வாதாடுறது இவர் பையன் அதனால எதுவும் பையன் ஜெயிக்கட்டும்னு விட்டுருவாரா என்று சந்தேகித்தான் மாதவன். அய்யோ பாஸ் நான் முன்னாடியே சொல்லிட்டேன் இவரை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன் அதனால எல்லாமே நமக்கு சாதகமா தான் வாதாடுவாரு எந்த பிரச்னையும் இல்லை என்றான் ஜெகன்.

என்னமோ சொல்ற சரி, நாம தான் விவசாயிங்களா ஏமாத்தி அந்த நிலத்தை வாங்குனோம்னு தெரிஞ்சா எதுவும் பிரச்சனை பண்ணுவாரா இவர் என்றான் மாதவன், இல்ல பாஸ் சீனிவாசன் சார் எப்பவும் தன்கிட்ட வர ஆளுங்க நல்லவங்களா கெட்டவங்களானு பார்க்குறது இல்லை அவர் எப்போவும் வர வழக்குல வாதாடி ஜெயிக்க தான் முயற்சி பண்ணுவார், அதுல நிறைய கேஸ்ல வெற்றியும் பெற்று இருக்கிறார், அதனால நம்ம தான் விவசாயிங்க நிலத்தை ஏமாத்தி புடுங்குனோம்னு தெரிஞ்சாலும் இவர் பக்கம் இருந்து எந்த பிரச்னையும் வராது என்றான் ஜெகன்.


 எப்படி வரும் அதுக்கு எதுவுமே ஆதாரம் இல்லையே என்று சிரித்தான் மாதவன், ஆமாம் பாஸ் என்று ஜெகனும் சிரித்துக்கொண்டே இருக்கையில் ஜெகனின் செல்போன் ஒலித்தது. ஹலோ என்றான் ஜெகன், அண்ணே அவ தப்பிச்சு ஓடிட்டானே எங்க தேடியும் கிடைக்கலை என்றான் ஒருவன் எதிர்முனையில், இதை கேட்டவுடன் ஜெகன் கோவமாக என்னடா சொல்றீங்க எப்போ எங்க ஓடிபோன என்றான்.

அண்ணே நேத்து மதியம் ஒரு 3 மணி இருக்கும் நாங்க சாப்பிட்டு வரலாம்னு போறப்போ அவ தப்பிச்சு போய்ட்டா நாங்களும் எல்லா இடத்துலயும் தேடி பார்த்தோம் காணோம் அண்ணே அவளை என்று சொன்னான் எதிர்முனையில் இருந்தவன். உங்களை என்ன செய்றது உங்களுக்கு மூளையே இருக்காதா சாப்பிட ரெண்டு பேரும் சேர்ந்தா போவீங்க அறிவே இல்லையா என்று கோபத்தில் அதே சமயம் கோர்ட்டில் இருந்ததால் மிகவும் மெதுவாக பேசினான் ஜெகன்

இதை கவனித்து கொண்டே இருந்த மாதவனுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது, ஜெகன் போனில் பேசி முடித்து வந்ததும் என்ன ஜெகன் என்ன பிரச்சனை என்று கேட்டான் மாதவன். அது வந்து அந்த டிரைவர் ராஜா மனைவி அமுதா தப்பிச்சு ஓடிட்டாளாம் என்று சொன்னவுடன் மாதவன் பதட்டமானான். என்ன சொல்ற இப்படி தப்பிச்சுட்டு ஓடிட்டானு என்கிட்ட வந்து சாதாரணமா சொல்ற என்று கேட்டு பதட்டமானான் மாதவன்.

வரதராஜனுக்கு ஆக்சிடெண்ட்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க ஆனால் அது நம்ம தான் பண்ணோம்னு தெரிஞ்ச ஒரே ஆள் அந்த டிரைவர் ராஜா தான், அவனை தான் பிடிக்க துப்பு இல்ல இப்போ அவன் பொண்டாட்டியையும் இப்படி தப்பிக்க விட்டுட்டிங்களே ச்சா என்று தலையில் கைவைத்து கொண்டு மிகவும் டென்ஷன் ஆனான் மாதவன்.

இப்போ அந்த அமுதா வினய் கையில சிக்குனா நம்ம கதி அவ்ளோ தான் என்றான் மாதவன். இல்லை பாஸ் அப்படியே அவ தப்பிச்சு போனாலும் அவ சொந்த ஊருக்கு தான் போய் இருப்பாள், இங்க கண்டிப்பா சுத்திட்டு இருக்க மாட்டாள் என்றான் ஜெகன். 


ஓஹோ அப்டியா அப்போ ராஜாவை எப்படி கண்டுபிடிக்குறது அவளை வச்சு தான் அவனை கண்டுபிடிக்க முடியும்னு நினைச்சோம் இப்போ அவ எங்கயோ ஓடி போய்ட்டானு சொல்ற எனக்கு தெரியாது நாளைக்கு அவளை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கொண்டு வரணும் என்றான் மாதவன். அப்போது சீனிவாசன் வந்து நம்ம கேஸ் வர போகுது வாங்க உள்ளே போகலாம் என்று கூற அவர்கள் அனைவரும் கிளம்பினர், சீனிவாசன் மாதவன் முகம் பதட்டத்துடன் இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்றார். அது ஒண்ணுமில்லை வெளியே வெயில் கொஞ்சம் அதிகம் அதான் கொஞ்சம் களைப்பா இருக்கு என்று மாதவன் சமாளித்தான்.

சரி வாங்க என்று மாதவன் கிளம்ப, அப்போது அவ்வழியே சென்ற ஒருவரின் செல்போன் கீழே விழுந்தது அதை கவனிக்காமல் சென்றவரை ஜெகன் ஹலோ உங்க போன் கீழ விழுந்திடுச்சு இந்தாங்க உங்க போன் என்றான் ஜெகன்.அந்த நபர் திரும்பி கூட பார்க்காமல் அவசர அவசரமாக போனை வாங்கி கொண்டு சென்று விட்டான். அடிக்குற வெயிலுக்கு இந்த ஆளு என்னடா குல்லா போட்ருக்கான் என்று ஜெகன் மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.

   
கோர்ட்டில் அனைவரும் அமைதியாக இருந்தனர், வினய் ஆரம்பித்தான் முதலில் ஜட்ஜிடம் நிறைய பேப்பர்களை கொடுத்துவிட்டு வாதாட ஆரம்பித்தான். வரதராஜனுக்கு ஆக்சிடென்ட்  என்று தான் நினைத்தோம் ஆனால் நடப்பதை பார்க்கும் பொது அது ஆக்சிடென்ட் இல்லை யாரோ திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது யுவர் ஹானோர் என்று வினய் ஆரம்பித்தான். அப்போது ஜட்ஜ் வினய் கொடுத்த பேப்பர்களை பார்த்துக்கொண்டு இருந்தார். 

இந்த வழக்கை வரதராஜன் எடுத்ததும் அவருக்கு மறைமுகமாக சில மிரட்டல்கள் விடுக்கப்பட்டது, அதையும் மீறி அவர் இந்த வழக்கில் வாதாடி ஸ்டே ஆர்டர் வாங்கியதன் விளைவு தான் அவர் ஆக்சிடென்ட் என்று சொன்னதும், மாதவன் முகத்தில் கோபம் கொப்பளித்தது. அப்போது சீனிவாசன் குறுக்கிட்டு இதற்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தமே இல்லாமல் எதற்கு இங்கே இந்த விஷயத்தை எதிர்க்கட்சி வக்கீல் பேசிக்கொண்டிருக்கிறார் அப்படியே சம்மந்தம் உண்டு என்றால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று சீனிவாசன் அப்ஜெக்சன் தெரிவித்தார். 

அப்போது வினய் குறுக்கிட்டு வரதராஜன் சார் கார் ஆக்சிடென்ட் ஆனதே அது நியாபகம் இருக்கிறதா என்றான், இருக்கிறது என்றார் சீனிவாசன். அன்று தான் வரதராஜன் ஸ்டே ஆர்டர் வாங்கி கொடுத்தார் அன்றே கோர்ட்டில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில் அவருக்கு ஆக்சிடென்ட் நடந்தது, அப்ஜெக்சன் யுவர் ஹானோர் என்று சீனிவாசன் எழுந்து ஸ்டே ஆர்டர் வாங்கிய அன்று ஆக்சிடென்ட் நடந்தால் அதற்கு யார் காரணம் என்கிறார் என் கட்சிக்காரர் தான் காரணம் என்று சொல்ல வருகிறாரா என்று சீனிவாசன் கேட்டார். 

நான் அப்படி சொல்லவில்லை ஆனால் அன்று ஆக்சிடென்ட் நடந்தது என்பதை அழுத்தி சொன்னேன் அவ்வளவு தான் என்றான் வினய். அது மட்டுமல்ல அன்று வரதராஜன் காரை ஓட்டி சென்ற டிரைவர் ராஜா என்ன ஆனார் என்றே தெரியவில்லை அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே கேள்விக்குறி என்றான் வினய்.

அப்போது சீனிவாசன் குறுக்கிட்டு இதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது நிலத்தை பற்றிய வழக்கு இதை தேவை இல்லாமல் வேறு எங்கயோ கொண்டு செல்கிறார் எதிர்க்கட்சிகாரர்  என்று சீனிவாசன் பேச, வினய் குறுக்கிட்டு இல்லை சம்மந்தம் இருக்கிறது என்று சொல்லி இந்த கேஸ் எடுத்தவுடன் மறைமுக மிரட்டல்கள், ஆக்சிடென்ட் அதுமட்டுமில்லாமல் வரதராஜனை கொலை செய்ய ஹாஸ்பிடலில் முயற்சி செய்திருக்கிறார்கள் அதற்கான கம்பளைண்ட் மற்றும் அவர் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று இரண்டு மனுவும் ஜட்ஜிடம் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி முடித்தான் வினய். 

அப்போது சீனிவாசன் பேச முற்பட, ஜட்ஜ் குறுக்கிட்டு வரதராஜன் சம்பந்த பட்டு இருப்பதால் இந்த வழக்கையும் இதோடு சேர்த்து விசாரிப்பதில் தவறில்லை யூ கேன் ப்ரோஸீட் என்றார் வினயிடம், அது மட்டுமல்லாமல் ஆக்சிடென்ட் நடந்த அன்று முதல் இன்று வரை டிரைவர் ராஜா எங்கே என்று தெரியவில்லை, அவர் தலைமறைவாகி இருக்கிறாரா இல்லை மாதவன் ஆட்களால் உயிருக்கு பயந்து தலைமறைவைக்கப்பட்டு இருக்கிறாரா என்று வினய் கேட்டதும், சீனிவாசன் குறுக்கிட்டு அப்ஜெக்சன் யுவர் ஹானோர் தேவை இல்லாமல் என்கட்சிகாரர் மீது குற்றம் சுமத்த பார்க்கிறார் என்றார். அப்போது ஜட்ஜ் குறுக்கிட்டு ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் இவ்வாறு பேசுவது தவறு என்று வினயை பார்த்து கூறினார். 

இல்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது டிரைவர் ராஜா மனைவி அமுதாவை விசாரிக்க அனுமதி வேண்டும் என்றான் வினய். பெர்மிசன் க்ராண்ட்டட் என்று ஜட்ஜ் சொன்னதும் அமுதா அமுதா அமுதா என்று ஒருவர் கூப்பிட அமுதா விசாரணை கூண்டில் ஏறினார். அப்போது மாதவன் மற்றும் ஜெகன் முகத்தில் பயம் தொற்றிக்கொண்டது.....


தேடல் தொடரும்...


பாகா 


உங்கள் கருத்துக்களை இங்கு comment  box இல் தெரிவிக்கவும்  

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10