Posts

Showing posts from 2017

Facebook page

தேடல் 26

பகுதி 26   வினய் வாதாடியதை கேட்டு மிகவும் சந்தோசப்பட்ட வாணியிடம்  அப்பா எங்கே என்று வினய் கேட்டான். அவர் அப்போவே வந்துட்டார் அவர் அறைக்கு போனவர் வெளியே வரவே இல்லை என்றாள் வாணி. உடனே வினய் சீனிவாசன் அறை கதவை திறந்தான். சீனிவாசன் ஜன்னல் வழியே அசைந்தாடும் மரக்கிளையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார், இல்லை இல்லை எதையோ உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார்.  வினய் பக்கத்தில் வந்து அப்பா என்றதும் சீனிவாசன் நினைவு வந்தவராய் வாப்பா வினய், நீ நல்ல வாதாடின வரதராஜன் பெயரை காப்பாற்றி விட்டாய் என்று வினயை கட்டித்தழுவி பாராட்டினார் சீனிவாசன். ரெம்ப நன்றி என்று சொல்லிவிட்டு வினய் எதையோ கேட்கத் தயங்கி நின்றான். என்ன வினய் எதுவும் என்னிடம் கேட்கணுமா என்று சீனிவாசன் கேட்டார், ஆமா அப்பா அது வந்து என்று வினய் இழுக்க, என்னப்பா கேளு என்றார் சீனிவாசன்.  அப்பா நீங்க ஒரு வேளை நான் வாதாடுறேனு விட்டு கொடுத்திடீங்களா என்று திக்கி திணறி வினய் கேட்டு விட்டான். சீனிவாசன்  சிறிதாக சிரித்து விட்டு, இது நம் தொழில் அவரவர் தொழில் அவர்களுக்கு கடவுள் போன்றது. அதைபோல் தான் எனக்கு...

தேடல் 25

பகுதி 25 கோர்ட்டில் வினய் நன்றாக ஒரு கைதேர்ந்த வழக்கறிஞராக வாதாடினான், சீனிவாசன் கைதேர்ந்த வழக்கறிஞராக இருந்தாலும் வினய் எடுத்து வைக்கும் வாதத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.  அப்போது வினய் வரதராஜன் டிரைவர் ராஜா தலை மறைவிற்கும் மாதவனுக்கும் சம்பந்தம் உண்டு என்று வாதாடிய பொழுது ஜட்ஜ் குறுக்கிட்டு ஆதாரம் இல்லாமல் இவ்வாறு பேசக்கூடாது என்று கூற, இல்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று டிரைவர் ராஜாவின் மனைவியை விசாரிக்க அனுமதி கோரினான் வினய். ஜட்ஜ் யூ கேன் ப்ரோஸீட் என்றதும் அமுதா அமுதா அமுதா என்று மூன்று முறை கூப்பிட சாட்சி கூண்டில் அமுதா ஏறினார்.  மாதவன் மற்றும் ஜெகன் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது அமுதாவை நேரில் பார்த்ததும்,வினய் விசாரணையை தொடங்கினான், உங்கள் பெயர் என்ன என்றான் வினய், அமுதா என்றதும் உங்கள் கணவர் பெயர், எங்கே வேலை பார்க்கிறார் என வினய் கேட்க, என் கணவர் பெயர் ராஜா வரதராஜன் சாரிடம் டிரைவர் வேலை பார்க்கிறார் என்றாள் அமுதா. இப்போது உங்கள் கணவர் எங்கே என்று வினய் கேட்க, தெரியாது என்று பதிலுடன் அழுகையையும் பதிலாக கொடுத்தாள் அமுதா. ஏன் இங்கு அ...

தேடல் 24

பகுதி 24 கோர்ட் வளாகத்தில் காற்றை கிழித்து கொண்டு ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து இறங்கியது வேறு யாருமல்ல மாதவனும் அவன் ஆட்களும் தான் அவர்கள் வேகமாக கோர்ட்டிற்குள் நுழைந்தனர். வாசலில் சீனிவாசன் நின்று கொண்டு வாங்க அடுத்து ஒரு அரைமணி நேரத்துல நம்ம கேஸ் வந்துடும் என்று கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். அனைவரும் ஒரு இடத்தில் வந்து அமர்ந்தனர், அப்போது சீனிவாசன் இங்கயே உட்கார்ந்திருங்க நான் போய்ட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். மாதவன் அவர் போகும் பாதையை பார்த்துக்கொண்டே இருந்தான், அதை கவனித்த ஜெகன் என்ன பாஸ் அவரை பார்த்துக்கொண்டே இருக்கீங்களே என்ன விஷயம் என்றான். இல்லை இவரை முழுவதுமா நம்பலாமா இல்லையானு தான் தெரியலை, நமக்கு எதிரா வாதாடுறது இவர் பையன் அதனால எதுவும் பையன் ஜெயிக்கட்டும்னு விட்டுருவாரா என்று சந்தேகித்தான் மாதவன். அய்யோ பாஸ் நான் முன்னாடியே சொல்லிட்டேன் இவரை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன் அதனால எல்லாமே நமக்கு சாதகமா தான் வாதாடுவாரு எந்த பிரச்னையும் இல்லை என்றான் ஜெகன். என்னமோ சொல்ற சரி, நாம தான் விவசாயிங்களா ஏமாத்தி அந்த நிலத்தை வாங்குனோம்னு தெரிஞ்சா எதுவு...

தேடல் 23

பகுதி 23 அனிதாவை இரவில் வீட்டில் விட்டு வரதராஜனை ஹாஸ்பிடலுக்கு பார்க்க சென்றவன், அவர் அறைக்கதவை திறந்ததும் அதிர்ச்சியானான். அய்யாசாமி தலையில் அடி பட்டு கிடந்தார், முகமூடி போட்ட ஒருவன் வரதராஜனை கத்தியை வைத்து குத்த முயன்றான். அய்யாசாமி அவன் காலை பிடித்து அவனை விடாமல் தடுத்து கொண்டிருந்தார்.  வினய் வேகமாக ஓடி வந்து அவனை பிடிக்க முயன்றான், அதற்குள் அவன் தள்ளி விட்டு தப்பித்து விட்டான். உடனே வரதராஜனுக்கு எதுவும் அடி பட்டு இருக்கிறதா என்று பார்த்தான், அதிர்ஷ்டவசமாக அய்யாசாமி இருந்ததால் எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. டாக்டர் நர்ஸ் என்று குரல் கொடுத்துக்கொண்டே சென்றான் வினய், டாக்டர் வேகமா வந்து வினய் இது ஹாஸ்பிடல் இப்படி கத்துறீங்களே என்று கேட்க, இந்த ஹாஸ்பிடல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை போல என்று வினய் நடந்தவற்றை கூறினான்.  டாக்டர் அதிர்ந்து போனார், சீக்கிரம் வாங்க டாக்டர் அய்யாசாமிக்கு தலையில காயம் ஆகி இருக்கிறது என்று கூட்டி கொண்டு போனான் வினய். பின் டாக்டர் அய்யாசாமிக்கு மருந்து போட்டு கட்டினார், ரெஸ்ட் எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந...

தேடல் 22

பகுதி 22 உமா வீட்டில் வினயும் அனிதாவும் வந்து இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் சொன்ன விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். உமா நீ என்ன நினைக்கிற என்று கேட்ட நேரத்தில் ரஞ்சித்திடம் இருந்து கால் வந்தது வினய்க்கு, டிரைவர் ராஜாவின் மனைவி கிடைத்து விட்டதாக தகவல் சொன்னான் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித். உடனே வினய் உமாவிடமும் அனிதாவிடமும் சொல்லிக்கொண்டு ஸ்டேஷனுக்கு புறப்பட்டான். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்திடம் என்ன சார் ராஜா மனைவி கிடைச்சுட்டாங்களா, ஆனால் அவர் மனைவி எதுக்கு தப்பிக்க நினைக்கணும் என்று கேட்டான் வினய். அதே தான் எனக்கும் சந்தேகம் அவர் மனைவி குழந்தை இங்கதான் இருக்காங்க, நாங்க பிடிச்சுட்டு வந்ததும் அதிர்ச்சில இருக்காங்க எதுவும் பேசலை இன்னும் வாங்க போய் பார்க்கலாம் என்று ஸ்டேஷனுக்குள் வினயை கூட்டி வந்தான் ரஞ்சித். சாந்தி என்று கூப்பிட்டான் ரஞ்சித். எஸ் சார் என்று சல்யூட் அடித்து ஒரு பெண் ரஞ்சித் முன் வந்து நின்றார், ராஜா மனைவியை கூட்டிட்டு வாங்க என்றான் ரஞ்சித், சரி சார் என்று சொல்லிக்கொண்டு அந்த பெண் டிரைவர் மனைவியை கூட்டி வந்தார். ராஜாவின் மனைவி வந்ததும், உட்காருங்கள் என்றார் ரஞ்சித். வினய...

தேடல் 21

பகுதி 21 வினயும் அவர் அப்பா சீனிவாசனும் வாதாட துவங்கினர், கோர்ட்டில் அமைதி நிலவியது என்ன நடக்கும் என்று அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். சீனிவாசன் வாதாட ஆரம்பித்தார் அவர் எடுத்து வைத்த வாதங்களில் வினய் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். ஆனாலும் வினய் நன்கு வாதாடினான், இருந்தாலும் முன் அனுபவத்தில் சீனிவாசன் நன்கு வாதாடிய படியால் வினய் கொஞ்சம் திணறினான். இருவரும் வாதாடியதை வைத்து பார்த்து வரும் வியாழக்கிழமை வழக்கை தள்ளி வைக்கிறேன்  என்று சொல்லி ஜட்ஜ் எழுந்து சென்றார். மாதவன் முகத்தில் கடுப்பு கொப்பளித்தது, என்ன இன்னும் தள்ளி கொண்டே போகிறதே வழக்கு என்று சொல்லி கோபமானான். ஜெகன் வந்து அவனை சமாதானப்படுத்தினான், இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி அடுத்த வரும் தேதியில நமக்கு சாதகமா தீர்ப்பு வந்துரும் என்று மாதவனை சமாதானப்படுத்தினான். சீனிவாசனிடம் உங்கள் கோப முகத்தை காட்டாதீர்கள் என்று ஜெகன் மாதவனை ஆசுவாசப்படுத்தினான்.  வினய்க்கு கொஞ்சம் சந்தோசம் அடுத்த தடவை எப்படியாவது வழக்கை நன்கு வாதாடி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டான். வீட்டில் வாண...

தேடல் 20

பகுதி 20 வினய் இரவு வரதராஜன் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டே தூங்கினான், இரவு ஒரு 3 மணி அளவில் வினய்க்கு முழிப்பு வந்தது அருகில் தண்ணீர் பாட்டிலை தேடினான் அதில் தண்ணீர் இல்லை. உடனே சமயலறைக்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு வந்து படுத்தான். அப்போது அவனுக்கு போன் கால் வந்தது, வினய் யார் அது இந்த நேரத்தில் என்று ஹலோ என்றான், அடுத்த முனையில் வினய் நீ பயப்படாமல் இந்த கேஸ் எடுத்து எனக்கு பதிலாக வாதாடு என்று குரல் கேட்டது, வினய் யாரென்று கேட்டான், அந்த குரல் வரதராஜன் என்றது வினய்க்கு தூக்கி வாரி போட்டது.  சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தான் மணி 7 ஆகி இருந்தது, வினயின் முகம் வியர்த்து கொட்டியது மனசு படபடத்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு நாம் கண்டது கனவு என்று மனசை தேற்றிக்கொண்டான். இருந்தாலும் வரதராஜன் கேஸ் எடுத்து வாதாடுவது என்று முடிவுக்கு வந்தான்.  இன்னும் 2 நாட்களே உள்ளன வழக்கு வருவதற்கு அதற்குள் அனைத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று மனதில் யோசித்து கொண்டான். விவசாயிகளை பார்க்க சென்றான் அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் சேகரித்து கொண்டான். வீட்டில் அம்மா வாணியையு...

தேடல் 19

பகுதி 19 அனைவரும் ராஜுவுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயம் ராஜ் சேனலில் வேலைக்கு சேர எடுத்த சாம்பிள் வீடியோவை உமாவிற்கும், வினய்க்கும் கட்டினான். உமா பார்த்து விட்டு பாராட்டினாள். ஆனால் வினய் வீடியோவை வைத்த கண் வாங்காமல் மறுபடி மறுபடி பார்த்து கொண்டிருந்தான். என்னடா வினய் நல்லா எடுத்துருக்கேனா திருப்பி திருப்பி பார்க்குற என்றான் ராஜ். அதற்கு வினயிடம் எந்த பதிலும் இல்லை அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு குழம்பினர். மீண்டும் வினய் என்று ராஜ் கூப்பிட வினய் கண்டுகொள்ளவே இல்லை அந்த வீடியோவை பார்த்துக்கொண்டே இருந்தான். ராஜ் மறுபடி டேய் வினய் என்னடா ஆச்சு வினய் என்று அவனை உலுக்க ஆரம்பித்தான். அப்போது தான் வினய் நினைவு வந்தவனாய் உணர்ந்தான். என்னடா ஆச்சு என்றான் ராஜ், இல்லை இந்த வீடியோ இன்னைக்கு எடுத்ததா என்றான் வினய். ஆமாடா காலையில வீடியோ எடுத்துட்டு வர சொன்னாங்க அதான் நானும் போய் எடுத்துட்டு வந்தேன் இதை பார்த்துட்டு தான் வேலை கொடுத்தாங்க என்னடா என்னாச்சு என்றான் ராஜ். இல்ல இதுல ராஜா போறத பார்த்தேன் அதான் அவர் தானானு கண்டுபி...

தேடல் 18

பகுதி 18 வினய் வரதராஜன் அருகில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான், என்ன செய்வது என்று தெரியாத ஒரே குழப்பத்தில் இருந்தான். அப்போது வரதராஜன் கண்களில் அசைவு இருப்பதாய் கண்டான், வினய்கு ஆச்சர்யம் உடனே அருகில் சென்று சார் என்று கூப்பிட வழக்கு என்ன ஆனது என்றார், வினய் உடனே இருபது நாட்கள் தள்ளி வச்சுருக்காங்க உங்க உடல்நிலை கருதி என்று சொல்லி முடிப்பதற்குள் நீ எனக்கு பதிலா வாதாடு என்று சொல்லிவிட்டு கண் மூடினார் வரதராஜன். வினய்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, உடனே டாக்டரை கூப்பிட்டான். டாக்டர் வந்து பார்த்து விட்டு உண்மையாகவே கண் விழித்தாரா இல்லை உங்கள் மனப்பிரமையா என்றார், சார் இல்லை இப்போதான் கண் விழித்து என்கிட்ட பேசினார் என்றான் வினய். டாக்டர்க்கு வினய் மேல் நம்பிக்கை இல்லை, இது மாதிரி நிறைய பேர் பார்த்துருக்கோம் இவ்வளவு சீக்கிரம் அவர் கண் விழிக்க சான்ஸ் இல்லை. ஒரு வேளை அவர் கண் விழித்து பேசினார் என்றால் நல்ல முன்னேற்றம் தான் என்று சொல்லி கிளம்பி விட்டார் டாக்டர். அய்யாசாமி உள்ளே பதறி கொண்டே உள்ளே நுழைந்தார், என்னாச்சு தம்பி டாக்டர் வந்து போறார் என்னாச்சு என்று பதறினார். ஒண்ணு...

தேடல் 17

பகுதி 17 ராஜ் சொன்னது போல அப்பாவையே இந்த கேஸ்ல வாதாட வச்சுடனும் என்று சந்தோசமாக புறப்பட்டான். ஆனால் அவன் வீட்டில் எதிர்பாராத ஒன்று நடந்து கொண்டிருந்தது, வீட்டை அடைந்தான் நிறைய கார்கள் நின்றிருந்தன. வினய்க்கு மிகவும் ஆச்சர்யம் என்ன இது இந்த ராத்திரி நேரத்துல இவ்வளவு கார்கள் நம்ம வீட்டில் நிற்குதே என்று குழப்பத்துடனும் ஆச்சர்யத்துடனும் வீட்டிற்குள் நுழைந்தான் வினய். அவன் நுழைந்ததும் மாதவன் வினயின் அப்பா சீனிவாசனிடம் இந்த கேஸ்ல நீங்க தான் வாதாடனும் என்று அட்வான்ஸ் மற்றும் இந்த கேஸ் பத்திய ஃபைல்ஸ் நீட்டினான். வினய் நுழைவதற்கும் சீனிவாசன் மாதவனிடம் சரி நான் வாதாடுறேன் என்று சொல்வதற்கும் சரியாய் இருந்தது. அப்போது தான் வினய்க்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது, ஓஹோ மாதவன் ஆட்களுடன் வந்து அப்பாவை வழக்கில் வாதாட கேட்டு வந்திருக்கிறான் என்று அதிர்ந்து போனான். அப்போது மாதவன் வினய் பக்கம் திரும்ப, இது யாரென்று தெரியாதது போலக்கேட்க, இது என் மகன் என்று சீனிவாசன் சொன்னார். ஆமா நான் கூட பார்த்துருக்கேன் கோர்ட்ல வரதராஜன் சார் கூட வருவாரே அந்த தம்பி தானே என்று நக்கலாக கேட்க ஜெகன் சிரிக்க ஆரம்பித்தா...

தேடல் 16

பகுதி 16 டாக்டர் வினயை அழைத்து வரதராஜன் உடல்நிலையை பற்றி விளக்கி கொண்டிருந்தார், அவர் உயிருக்கு ஆபத்தில்லை ஆனால் அவர் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். தலையில் பலமா அடிபட்டதால கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். உங்களுக்கே தெரியும் கோமால இருக்குறவங்க எப்போ அதுல இருந்து மீண்டு வருவாங்கனு சொல்ல முடியாது என்று டாக்டர் கூறி விட்டு சென்றார். டாக்டர் கூறி சென்றதும் வினய் மிகவும் குழம்பி போனான், இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்போதைக்கு வழக்கை தள்ளிப்போட செய்யலாம் ஆனால் கோர்ட்டில் குத்துமதிப்பாக ஒரு காலநேரம் சொல்லி ஆகவேண்டுமே இப்போ என்ன செய்வது மிகவும் குழம்பித்தான் போனான் வினய். சரி இப்போதைக்கு அப்பாவிடம் இதை பற்றி பேசுவோமே என்று கிளம்பினான்.                                                         கோர்ட் - வெள்ளிக்கிழமை  வெள்ளிக்கிழமை காலை 10 மணி அனைவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாதவன், ஜெகன் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மூவரின் முகத...

தேடல் 15

பகுதி 15 வினய் பைக்கில் கிளம்பினான், சிறிது தூரம் சென்று கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது, ஹலோ என்றான், தம்பி வரதராஜன் அய்யா வந்த வண்டி ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு தம்பி என்று அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி. வினய் அதிர்ச்சியானான். உடனே பைக்கை கிளப்பி ஹாஸ்பிடலுக்கு வந்தடைந்தான். அய்யாசாமி நின்று அழுதுகொண்டிருந்தார், அண்ணே என்னாச்சு தெரியல தம்பி அய்யா கிளம்பி போன கொஞ்ச நேரத்துல ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு போன் வந்தது. அப்படியே கிளம்பி இங்க வந்துட்டேன் என்று அய்யாசாமி அழுதுகொண்டே சொன்னார். அப்போ டிரைவர் எங்க? என்று வினய் கேட்க தெரியலையே தம்பி என்றார் அய்யாசாமி. சரி இப்போ வரதராஜன் சார் எப்பிடி இருக்கார் என்று வினய் கேட்க, டாக்டர் உள்ள பார்த்துகிட்டு இருக்காங்க இன்னும் வெளியே வரவே இல்ல என்று தேம்பி தேம்பி அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி. அப்போது ஒரு போலீஸ் வந்து சார் இது அவருடைய ஃபைல், கண்ணாடி, மொபைல் என்று வந்து நீட்டினார். வினய் அவரிடம் சார் எப்படி இது நடந்தது என்று வினய் கேட்க, அந்த போலீஸ்காரர் தெரியலை தம்பி சம்பவம் நடந்த இடத்துல யாருமே இல்லை, யாரும் எதுவும் பார்க்கலை. நம்ம போலீஸ் வண...

தேடல் 14

பகுதி 14 ஊட்டியில் இருந்து வினய் வீட்டை அடைந்ததும் ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. வினய் அவன் அறையில் குளித்து முடித்து கிளம்பிக்கொண்டு இருந்தான். அப்போது  வினயின் அம்மா வாணி வந்து வினய் வரதராஜன் வீட்டுக்கு இனிமேல் போக வேண்டாம்ப்பா என்றாள். வினய் தலை வாரிக் கொண்டு இருந்தவன் திரும்பி என்னமா இப்படி சொல்றீங்க என்னாச்சு என்றான் வினய் ஆச்சர்யமாக!!  இல்ல வினய் நீ வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன் ஆனால் சொல்ல முடியலை என்று இழுத்தாள், என்னமா சொல்ற என்னாச்சு என்ன தான் பிரச்சனை சொல்லுங்க என்றான் குழப்பமாக, அப்போது  சீனி வாசன் உள்ளே நுழைந்தார்,அது ஒண்ணுமில்லடா வரதராஜன் ஆபீஸ்ஸா யாரோ எரிச்சுட்டாங்களாம் அந்த பயத்துல தான் உங்க அம்மா இப்படி பயப்படுறா என்றார் சீனிவாசன். அய்யோ ஆபீஸ்ஸா எரிச்சுட்டாங்களா, வரதராஜன் சார்க்கு என்ன ஆச்சு என்று மிகவும் பதட்டமானான் வினய். பயப்படாத அவருக்கு ஒன்னும் ஆகலை ஆனால் அவர் வச்சிருந்த டாக்குமெண்ட் எல்லாம் எரிஞ்சு போச்சுன்னு சொன்னார். சரி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டான். அப்போது வாணி என்னடா நான் போக வேண்டாம்னு சொ...

தேடல் 13

பகுதி 13  வினயும் அனிதாவும் காதலிக்கிறார்கள் என்று கேட்டவுடன் வருணின் முகம் மாறியது, என்ன நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என்றான். ஆமா என்றான் வினய். வருண் டென்ஷன் ஆனான், நான் அனிதாவை காலேஜ் படிக்கும் போது இருந்து லவ் பண்றேன் நீ என்னனா இப்போ வந்து லவ் பன்றேன்னு சொல்ற, ஒழுங்கு மரியாதையாய் அனிதாவை விட்டு விலகிடு இல்ல எப்படி விலக்கணுமோ அப்படி விலக்கிருவேன் என்று வருண் சொல்ல சொல்ல வினய்க்கு அதிர்ச்சியாய் இருந்தது. வருண் வினயின் பக்கம் வந்தான் வினயின் தோளில் கை போட்டு வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தான். வினய்க்கு ஆச்சர்யமாக இருந்தது அதிர்ச்சியிலேயே இருந்தான். என்ன வினய் ஆச்சர்யமா இருக்கா, என்னடா இவ்வளவு நேரம் மிரட்டுற மாதிரி பேசுனவன் இப்போ வாழ்த்துக்கள் சொல்றனேனு பார்க்கிறீர்களா, இந்த கதையில நான் வில்லன் இல்லை பாஸ் என்றான் வருண் சிரித்துக்கொண்டே. வினய் வருணை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தான், நான் வில்லன் இல்லை என் அப்பா அம்மாவும் பணம் புகழ் இருந்தாலும் என்னை ரெம்பவும் ஒழுக்கமா தான் வளர்த்துருக்காங்க என்றான் வருண். அனிதா பின்னாடி சுத்துனேன் காதலிச்சேன் என்னைக்க...