Facebook page

தேடல் 14

பகுதி 14

ஊட்டியில் இருந்து வினய் வீட்டை அடைந்ததும் ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. வினய் அவன் அறையில் குளித்து முடித்து கிளம்பிக்கொண்டு இருந்தான். அப்போது  வினயின் அம்மா வாணி வந்து வினய் வரதராஜன் வீட்டுக்கு இனிமேல் போக வேண்டாம்ப்பா என்றாள். வினய் தலை வாரிக் கொண்டு இருந்தவன் திரும்பி என்னமா இப்படி சொல்றீங்க என்னாச்சு என்றான் வினய் ஆச்சர்யமாக!! 

இல்ல வினய் நீ வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன் ஆனால் சொல்ல முடியலை என்று இழுத்தாள், என்னமா சொல்ற என்னாச்சு என்ன தான் பிரச்சனை சொல்லுங்க என்றான் குழப்பமாக, அப்போது  சீனி வாசன் உள்ளே நுழைந்தார்,அது ஒண்ணுமில்லடா வரதராஜன் ஆபீஸ்ஸா யாரோ எரிச்சுட்டாங்களாம் அந்த பயத்துல தான் உங்க அம்மா இப்படி பயப்படுறா என்றார் சீனிவாசன்.

அய்யோ ஆபீஸ்ஸா எரிச்சுட்டாங்களா, வரதராஜன் சார்க்கு என்ன ஆச்சு என்று மிகவும் பதட்டமானான் வினய். பயப்படாத அவருக்கு ஒன்னும் ஆகலை ஆனால் அவர் வச்சிருந்த டாக்குமெண்ட் எல்லாம் எரிஞ்சு போச்சுன்னு சொன்னார். சரி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டான்.

அப்போது வாணி என்னடா நான் போக வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன் நீ கிளம்புற என்றாள். அப்போது சீனிவாசன் குறுக்கிட்டு வாணி இது என்ன புதுசா நமக்கு இத்தனை வருசமா நான் பார்க்காத கேஸ்ஸா நான் பார்க்காத பிரச்சனையா வக்கீல் வேலைக்கு வந்துட்டாளே இதெல்லாம் சாதாரணம் என்றார், வினய் நீ கிளம்பு உங்க அம்மாவுக்கு நான் புரிய வைக்கிறேன் என்றார் வரதராஜன்.


வினய் வாணியிடம் அம்மா ஒன்னும் இல்லம்மா நான் போய்ட்டு வந்துடுறேன் என்று  சொல்லிவிட்டு கிளம்பினான் வினய்.


                                                       வரதராஜன் வீடு 

வினய் வரதராஜன் வீட்டை வந்தடைந்தான். அய்யாசாமி அண்ணன் என்னாச்சு என்ன நடந்தது என்று வினய் பதட்டத்துடன் கேட்டான், தம்பி நேத்து ராத்திரி மாதவன் ஆளுங்க வந்து ஆபீஸ்சா இப்படி கொளுத்தி விட்டுட்டாங்க தம்பி முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எரிஞ்சு போச்சு நாளைக்கு மாதவன் கேஸ் இருக்கு நம்ம அய்யா தான் வாதாடுவாரு எப்படியும் அவர் ஜெயிச்சுடுவாருனு பயத்துல இப்படி செஞ்சுருக்காங்கிய தம்பி என்று சொல்லிமுடித்தார் அய்யாசாமி.


அப்போது வரதராஜனை பார்க்க உள்ளே சென்றான் வினய். சார் எல்லா டாக்குமெண்ட்ஸும் எரிஞ்சுடுச்சா இப்போ என்ன சார் செய்வீங்க நாளைக்கு மாதவன் கேஸ்க்கு ஆதாரமே இல்லாம எப்படி ஆஜராக முடியும் என்றான் வினய். டாக்குமெண்ட்ஸ் எல்லாமே எரிஞ்சு போச்சு உண்மை தான் ஆனால் நான் எல்லா டாக்குமெண்ட்ஸ்கும்  டேட்டாவா மாத்தி என்னோட பெண்டிரைவ்லயும் லேப்டாப்லயும் வச்சுருக்கேன் என்று வரதராஜன் சொன்னதும் வினய்க்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

சரி இப்போ உன்னோட நேரம் வந்துருச்சு நீ இனிமே இங்க வரணும்னு அவசியம் இல்லை இனி நீ இந்த வழக்குக்கு சம்பந்தமான விஷயங்களை தேடி கண்டுபிடி, இந்த வழக்குக்கு தேவைப்படுற சாட்சியங்களை நீ சேகரிக்கணும் இத்தனை நாள் என்கூட இருந்துருக்க அதனால கண்டிப்பா உனக்கு எப்படியெல்லாம் சாட்சியங்களை சேகரிக்கணும்னு தெரிஞ்சுருக்கும் நீ கிளம்பு நாளைக்கு கோர்ட்க்கு வந்துடு என்றார் வரதராஜன்.

வினய் முழித்துக்கொண்டே கிளம்பினான். அவன் கிளம்பியதும்  வரதராஜன் வினய் செல்வதை பார்த்துக்கொண்டே இருந்தார், அப்போது மாதவன் சொன்ன வார்த்தைகள் அவர் காதுகளுக்கு கேட்டது உங்ககிட்ட ஒரு சின்னப்பையன் ஜூனியரா சேர்ந்துருக்கானாமே அவன் உங்களை மாதிரியே நேர்மையா இருந்து வெட்டியா போக போறான் போல, என்ன புரியலையா அவனை எப்படியாச்சும் விலை பேசிடலாம்னு பார்த்தேன் ஆனால் முடியலை பிழைக்கத் தெரியாதவன் போல என்றான் சிரித்துக்கொண்டே அதான் இப்படி உங்க ஆபீஸ கொழுத்திட்டேன் என்றான் மாதவன். அவன் பேசிய வார்த்தைகள் வரதராஜன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

மாதவன் பேசியதை பார்க்கும்போது வரதராஜனுக்கு வினய் மீது மிகவும் நம்பிக்கை வந்தது அதனால் தான் இந்த கேஸை பத்தின விஷயங்களை வினயிடம் சேகரிக்க சொல்லி இருக்கிறார் வரதராஜன்.

இது எதுவுமே புரியாமல் வினய் குழப்பத்துலயே இருந்தான் இவர் ஏன் திடிர்னு நம்மள இந்த கேஸ்ல சாட்சிகளை சேகரிக்க சொல்லி இருக்காரு, அய்யாசாமி அண்ணண் சொல்லி இருக்காரே இவர் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டார்னு சொன்னாரே, இப்போ என்னை மட்டும் எப்படி நம்புனாரு என்று குழப்பத்திலேயே வீட்டுக்கு சென்றான் வினய்.


வீட்டில் வினய் வந்ததும் வாணிக்கு சந்தோசம் தாங்கவில்லை என்ன வினய் போனதும் வந்துட்ட அம்மா சொன்ன மாதிரியே இனி இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டீயா  அப்படித்தானே என்றாள் வாணி வெகுளியாக.

அய்யோ அம்மா இல்ல அவர் இனி நீ இங்க வரணும்னு அவசியம் இல்ல நீ இந்த கேஸ் பத்தின சாட்சியங்களை சேகரிச்சுட்டு வா அப்படினு சொல்லிட்டார் என்றான் வினய்.

அப்படியா சொன்னார் அப்போ இனி போகமாட்டியா அங்க என்றாள் வாணி படபடப்பாக, வாணி தேவை இல்லாமல் பயப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டான் வினய், அம்மா நீங்க பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்கலை அப்பாவுக்கு வராத பிரச்சனையா என்றான் வினய், உன்னையும் உங்க அப்பாவையும் சாமளிக்கவே முடியாது, சரி நீ ஊட்டில இருந்து வந்து ரெஸ்ட் எடுக்கவே இல்ல போய் ரெஸ்ட் எடு என்றாள் வாணி.

இனி ரெஸ்டலாம் கிடையாது கேஸ் என்கைக்கு நம்பி கொடுக்குறாருன்னா நான் நல்லா வேலை செய்யணும் அதனால நான் இனி அந்த வேலையில இறங்கணும் நான் கிளம்புறேன் என்றான் வினய்.

டேய் சாப்பிட்டு போடா என்று வாணி கத்த வந்து சாப்பிடுறேன் என்று சொல்லிக்கொண்டே வினய் பைக்கில் கிளம்பினான்.

அடுத்த நாள் காலை கோர்ட் வாசலில் அனைவரும் நிற்க, மாதவன் சிரித்துக்கொண்டே காரில் அமர்ந்திருந்தான். அப்போது மாதவன் ஜெகனிடம்  வரதராஜன் முகத்துல ஒரு பயம் இருக்கே எப்படி சாட்சி, டாக்குமெண்ட்ஸ்  இல்லாம சமாளிக்க போறாரோ தெரியல என்று சிரித்துக்கொண்டே இருந்தான் மாதவன்.

அப்போது மாதவன் வக்கீல் வந்து சார் அடுத்து நம்ம கேஸ் தான் போகலாம் என்றான்.   

கோர்ட்டில் வரதராஜன் வாதாட ஆரம்பித்தார் ஒவ்வொரு பாயிண்ட் ஆக எடுத்து வைத்து வாதாடினார், மாதவன் வக்கீல் மிகவும் தடுமாறினார் கடைசியாக இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று மாதவன் வக்கீல் கேட்க, அரங்கமே அமைதியானது. மாதவன் முகத்தில் சந்தோசம் அப்போது என்னிடம் ஆதாரம் இருக்கிறது இதோ அதற்கான டாக்குமெண்ட்ஸ் என்று வரதராஜன் ஜட்ஜிடம் நீட்ட மாதவன் முகத்தில் ஈ ஆடவில்லை அனைவரும் பயத்துடன் இருக்க, ஜட்ஜ் பேச ஆரம்பித்தார்.

இந்த வழக்கில் மாதவன் மீது உள்ள குற்றச்சாட்டிற்கு இந்த டாக்குமெண்ட்ஸ் போதுமானது, நிலத்தின் உரிமையாளர்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி இருந்தாலும் எதிர் தரப்பின் பதிலை வரும் வெள்ளிக்கிழமை விளக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

அனைவரும் வெளியே வந்தனர். மாதவன் மிகவும் டென்ஷனில் இருந்தான். எப்படி அந்த டாக்குமெண்ட்ஸ் அவருக்கு கிடைச்சது நீங்க தான கொளுத்துனீங்க அப்புறம் எப்படி என்று கத்தினான் மாதவன். சார் எங்கயோ தப்பு நடந்திருக்கு என்றான் ஜெகன்.

அப்போது ஜெகன் காதில் மாதவன் எதையோ சொல்ல ஜெகன் சரி சார் நான் பார்த்துக்கறேன் என்றான் ஜெகன். மாதவன் காரில் ஏறி  கிளம்பி சென்றான். 

வரதராஜன் வெளியே வர எல்லாரும் அவரை பாராட்டினர், நிலத்தின் உரிமையாளர்கள் அவரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தனர், அவர்களை தடுத்து என்னுடைய கடமையை செய்தேன் அவ்வளவு தான் என்று சொல்லி வரதராஜன் கிளம்பி சென்றார். வினயிடம் வெள்ளிக்கிழமை வரை நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ என்று கூப்பிட்டு சொல்லி விட்டு வரதராஜன் காரில் ஏறி சென்றார்.

வினயும் பைக்கில் கிளம்பினான், சிறிது தூரம் சென்று கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது, ஹலோ என்றான், தம்பி வரதராஜன் அய்யா வந்த வண்டி ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு தம்பி என்று அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி. வினய் அதிர்ச்சியில் உறைந்தான்......


தேடல் தொடரும் 


பாகா 


உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10