Facebook page

தேடல் 15

பகுதி 15

வினய் பைக்கில் கிளம்பினான், சிறிது தூரம் சென்று கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது, ஹலோ என்றான், தம்பி வரதராஜன் அய்யா வந்த வண்டி ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு தம்பி என்று அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி. வினய் அதிர்ச்சியானான். உடனே பைக்கை கிளப்பி ஹாஸ்பிடலுக்கு வந்தடைந்தான்.

அய்யாசாமி நின்று அழுதுகொண்டிருந்தார், அண்ணே என்னாச்சு தெரியல தம்பி அய்யா கிளம்பி போன கொஞ்ச நேரத்துல ஆக்சிடென்ட் ஆயிடுச்சுனு போன் வந்தது. அப்படியே கிளம்பி இங்க வந்துட்டேன் என்று அய்யாசாமி அழுதுகொண்டே சொன்னார்.

அப்போ டிரைவர் எங்க? என்று வினய் கேட்க தெரியலையே தம்பி என்றார் அய்யாசாமி. சரி இப்போ வரதராஜன் சார் எப்பிடி இருக்கார் என்று வினய் கேட்க, டாக்டர் உள்ள பார்த்துகிட்டு இருக்காங்க இன்னும் வெளியே வரவே இல்ல என்று தேம்பி தேம்பி அழுதுகொண்டே சொன்னார் அய்யாசாமி.

அப்போது ஒரு போலீஸ் வந்து சார் இது அவருடைய ஃபைல், கண்ணாடி, மொபைல் என்று வந்து நீட்டினார். வினய் அவரிடம் சார் எப்படி இது நடந்தது என்று வினய் கேட்க, அந்த போலீஸ்காரர் தெரியலை தம்பி சம்பவம் நடந்த இடத்துல யாருமே இல்லை, யாரும் எதுவும் பார்க்கலை. நம்ம போலீஸ் வண்டி அந்தப்பக்கம் போகும் போது தான்  பார்த்து ஆம்பலன்ஸ்க்கு போன் பண்ணிருக்காங்க என்றார் அந்த போலீஸ்காரர்.


அப்போ டிரைவர் என்ன ஆனார் என்று வினய் கேட்க, போலீஸ்காரர் டிரைவரா அங்க இவர் மட்டும் தானே இருந்தாரு, இவர் தான் வண்டி ஓட்டிட்டு போயிருப்பாருனுல நினைச்சோம்.

இல்ல சார், டிரைவர் தான் வண்டி ஓட்டிட்டு  போனார்  கோர்ட்ல பார்த்தோமே என்றான் வினய். டிரைவர் பெயர், வீடு எங்க இருக்குனு சொல்லுங்க விசாரிக்க ஆள் அனுப்புறேன் என்று சொன்னார்.

சரி சார் டிரைவர் பெயர் ராஜா என்று சொல்லி வீடு முகவரியையும் கொடுத்தான் வினய். அப்போது தான் ரஞ்சித் வருவதை பார்த்தான் வினய். நீங்க என்ன இங்க என்று ரஞ்சித் கேட்க வரதராஜன் சார்கிட்ட நான் ஜூனியரா சேர்ந்து இருக்கேன் என்றான் வினய்.

அப்படியா இது என்னோட கண்ட்ரோல் ஏரியா அதனால நான் தான்  இதுல இன்ச்சார்ஜ் என்றான் ரஞ்சித். உங்களுக்கு யார் மேலயும் சந்தேகம் இருக்கா என்று ரஞ்சித் கேட்க, வினய் மாதவன் பெயரை சொல்லலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருக்கையில், ரஞ்சித் குறுக்கிட்டு சொல்லுங்க யார் மேலயாவது சந்தேகம் இருந்த சொல்லுங்க என்றான். வினய் யோசித்து விட்டு இல்ல சார் ஆனால் வண்டி ஓட்டிட்டு போன டிரைவர் காணோம் அவரை பிடிச்ச எல்லாமே தெரியும் என்றான் வினய்.

ஆஹா இது ஒன்னு போதுமே கான்ஸ்டபிள்ஸ் அந்த டிரைவர் பத்தி விசாரிச்சீங்களா என்று ரஞ்சித் கேட்க, இல்ல சார் இப்போதான் டிரைவர் தான் வண்டி ஓட்டிட்டு போனது தெரிய வந்தது, நம்ம கான்ஸ்டபிள் போயிருக்காரு என்று சொன்னான் கான்ஸ்டபிள் ஆறுமுகம். 

சரி அவர் வந்ததும் சொல்லுங்க என்று ரஞ்சித் சொல்லி கொண்டிருக்கையில், டாக்டர் வெளியே வந்தார். வினய் ஓடி போய் டாக்டர், சார் எப்படி இருக்கார் என்று கேட்க ரெம்ப மோசமான நிலைமையில தான் இருக்காரு இப்போதைக்கு எங்களால எதுவும் சொல்ல முடியாது, பின்னந்தலையில பலமா அடிபட்டு இருக்கு, அவருக்கு எப்போ ஆபத்தான நிலையில இருந்து வெளிய வருவாருனு சொல்ல முடியாது, இன்னும் ஒரு 7 மணி நேரம் கழிச்சு தான் தெரியும் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

அப்போது அய்யாசாமி கண்ணாடி வழியாக வரதராஜன் படுத்து கிடப்பதை பார்த்து கதறி கதறி ஆழ ஆரம்பித்தார், அனாதையா இருந்த எனக்கு நீங்க மூணு வேளை சோறு போட்டு வச்சுருந்தீங்களே உங்களுக்கா இந்த நிலைமை, கடவுளுக்கு கண்ணே இல்லையா என் உயிரை எடுத்துக்கிட்டு அவரை காப்பாத்து கடவுளே என்று கதறி ஆழ  ஆரம்பிக்க, நர்ஸ் வந்து சார் இங்க எல்லாம் கத்தக்கூடாது வெளியே போங்க சார் என்று சொல்ல வினய் வந்து அய்யாசாமியை கைத்தாங்கலாக கூட்டிச்சென்றான் .

ரஞ்சித் வினயிடம் வந்து உங்களுக்கு வேற ஏதாவது தகவல் கிடைச்சா உடனே எனக்கு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.
வினய்க்கு வரதராஜன் சொல்லிய வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது, இந்த வெள்ளிக்கிழமை வரைக்கும் நீயும் ஜாக்கிரதையா இரு வினய் என்று சொல்லிவிட்டு சென்ற வார்த்தை அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது நம்மை பத்திரமா இருக்க சொல்லி சென்றவர்  இப்போது பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று வினய் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

அப்போது அனிதாவிடம் இருந்து போன், எடுத்து பேசினான் வினய். என்ன வினய் வரதராஜன் சார்க்கு என்ன ஆச்சு எங்க சேனல்ல கூட அவரோட நியூஸ் போய்கிட்டு இருக்கு அவர் எப்படி இருக்கார் என்று அனிதா கேட்டாள். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாதுனு சொல்லிட்டாங்க அனிதா என்று உடைந்து ஆழ ஆரம்பித்தான் வினய்.

அனிதாவிற்கு மிகவும் அதிர்ச்சி வினய் இந்த மாதிரி உடைந்து அழுததில்லை, இப்போதான் அவர் என்னை முழுசா நம்பி இந்த கேஸ் பத்தி தகவல் எல்லாம் சேகரிக்க சொன்னார், போகும் போது கூட வினய் ஜாக்கிரதையா இரு என்று சொல்லி போனார். ஆனால் இப்போ அவர் உயிருக்கு போராடிகிட்டு இருக்கார் என்று அழதொடங்கிவிட்டான்.

அதை பார்த்துக்கொண்டிருந்த அய்யாசாமி வந்து வினயை ஆறத்தழுவி தம்பி எதுவும் ஆகாது என்று தேற்றினார். போனில் அனிதாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை வினய் இரு நானும் வரேன் என்றாள், அப்போது வினய் கண்களை துடைத்துக்கொண்டு இல்லை அனிதா வேண்டாம் நான் பார்த்துக்கறேன் நீ வேலையை கவனி என்று சொல்லி வைத்து விட்டான்.

அனிதாவிற்கு வினய் அழுதது மனசு கேட்க வில்லை, அவளும் போக முடியாது ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது, உமாவிற்கு கால் செய்து நடந்தவற்றை கூறினாள். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட உமா சரிடி நான் போய் பார்த்துக்குறேன் நீ வேலையை முடிச்சுட்டு வா என்று சொல்லி உமா கிளம்பினாள்.

இதற்கு இடையில் சீனிவாசனுக்கு விஷயம் தெரியவந்து வினய்க்கு போன் செய்தார். வினய் என்ன நடந்தது என்று கேட்டார், வினய் நடந்த அனைத்தையும் சொன்னான். சரி நீ பத்திரமா இரு வினய் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

உமா வந்து சேர்ந்தாள், வினய் அவளை பார்த்ததும் என்ன அனிதா அனுப்பி வச்சாளா என்று கேட்டதும், ஆமா என்றாள். அனிதா  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா என்றாள் உமா.  

டேய் வினய் நீ அழுது பார்த்ததே இல்லையே, என்னாச்சு என்று ஆச்சர்யமாக கேட்டாள் உமா. தெரியல உமா எனக்கே புதுசா இருக்கு என்னனு சொல்லத்தெரியலை அவர் என்னை நம்பி கேஸ் பத்தி சொல்லிட்டு பத்திரமா இரு என்று சொல்லிட்டு போனார், அதனால என்னால தாங்கிக்க முடியல என்றான் வினய்.

சரி விடு எல்லாமே சரி ஆயிடும் இப்போ வெள்ளிக்கிழமை கேஸ் வருமே இப்போ வரதராஜன் இருக்குற நிலைமையில என்ன பண்றது என்று கேட்டாள் உமா. அப்போது வினய் யோசித்து விட்டு அதுக்கு ஒரு மனு போடனும் வரதராஜன் சார் உடல்நிலையை வச்சு இப்போ இந்த கேஸ் நடக்க கூடாது தள்ளி வைக்க சொல்லணும் என்றான் வினய். அது முடியுமா என்றாள் உமா. நிச்சயமா முடியும் அப்பாகிட்ட கேட்டு அதுக்கான நடவடிக்கையில் இறங்கணும் என்றான் வினய்.

பின் அனிதா வந்து சேர்ந்தாள் மூவரும் சாப்பிட்டு விட்டு இரவு அனைவரும் வீட்டுக்கு சென்றனர். காலை வினய்க்கு டாக்டரிடம் இருந்து போன் வந்தது, ஹலோ என்றான் வினய். கொஞ்சம் ஹாஸ்பிடலுக்கு வாங்க நேர்ல பேசணும் என்றார் டாக்டர். 

உடனே கிளம்பி சென்றான் வினய், என்ன டாக்டர் என்னாச்சு என்றான் வரதராஜன் சார் நல்லா இருக்காரா அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையே என்று கேட்டான் வினய். டாக்டர் யோசித்து விட்டு அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை ஆனால் என்று இழுத்தார், டாக்டர் சொல்லுங்க என்னாச்சு என்றான் வினய் குழப்பமாக, அவர் உயிருக்கு ஆபத்தில்லை அவர் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார் அவர் எப்போ பழைய நிலைக்கு வருவார்னு சொல்ல முடியாது என்று டாக்டர் சொல்ல சொல்ல  வினய்க்கு தூக்கி வாரி போட்டது..


தேடல் தொடரும் 


பாகா 

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10