தேடல் 25
பகுதி 25 கோர்ட்டில் வினய் நன்றாக ஒரு கைதேர்ந்த வழக்கறிஞராக வாதாடினான், சீனிவாசன் கைதேர்ந்த வழக்கறிஞராக இருந்தாலும் வினய் எடுத்து வைக்கும் வாதத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார். அப்போது வினய் வரதராஜன் டிரைவர் ராஜா தலை மறைவிற்கும் மாதவனுக்கும் சம்பந்தம் உண்டு என்று வாதாடிய பொழுது ஜட்ஜ் குறுக்கிட்டு ஆதாரம் இல்லாமல் இவ்வாறு பேசக்கூடாது என்று கூற, இல்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று டிரைவர் ராஜாவின் மனைவியை விசாரிக்க அனுமதி கோரினான் வினய். ஜட்ஜ் யூ கேன் ப்ரோஸீட் என்றதும் அமுதா அமுதா அமுதா என்று மூன்று முறை கூப்பிட சாட்சி கூண்டில் அமுதா ஏறினார். மாதவன் மற்றும் ஜெகன் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது அமுதாவை நேரில் பார்த்ததும்,வினய் விசாரணையை தொடங்கினான், உங்கள் பெயர் என்ன என்றான் வினய், அமுதா என்றதும் உங்கள் கணவர் பெயர், எங்கே வேலை பார்க்கிறார் என வினய் கேட்க, என் கணவர் பெயர் ராஜா வரதராஜன் சாரிடம் டிரைவர் வேலை பார்க்கிறார் என்றாள் அமுதா. இப்போது உங்கள் கணவர் எங்கே என்று வினய் கேட்க, தெரியாது என்று பதிலுடன் அழுகையையும் பதிலாக கொடுத்தாள் அமுதா. ஏன் இங்கு அ...