Posts

தேடல் 26

பகுதி 26   வினய் வாதாடியதை கேட்டு மிகவும் சந்தோசப்பட்ட வாணியிடம்  அப்பா எங்கே என்று வினய் கேட்டான். அவர் அப்போவே வந்துட்டார் அவர் அறைக்கு போனவர் வெளியே வரவே இல்லை என்றாள் வாணி. உடனே வினய் சீனிவாசன் அறை கதவை திறந்தான். சீனிவாசன் ஜன்னல் வழியே அசைந்தாடும் மரக்கிளையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார், இல்லை இல்லை எதையோ உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார்.  வினய் பக்கத்தில் வந்து அப்பா என்றதும் சீனிவாசன் நினைவு வந்தவராய் வாப்பா வினய், நீ நல்ல வாதாடின வரதராஜன் பெயரை காப்பாற்றி விட்டாய் என்று வினயை கட்டித்தழுவி பாராட்டினார் சீனிவாசன். ரெம்ப நன்றி என்று சொல்லிவிட்டு வினய் எதையோ கேட்கத் தயங்கி நின்றான். என்ன வினய் எதுவும் என்னிடம் கேட்கணுமா என்று சீனிவாசன் கேட்டார், ஆமா அப்பா அது வந்து என்று வினய் இழுக்க, என்னப்பா கேளு என்றார் சீனிவாசன்.  அப்பா நீங்க ஒரு வேளை நான் வாதாடுறேனு விட்டு கொடுத்திடீங்களா என்று திக்கி திணறி வினய் கேட்டு விட்டான். சீனிவாசன்  சிறிதாக சிரித்து விட்டு, இது நம் தொழில் அவரவர் தொழில் அவர்களுக்கு கடவுள் போன்றது. அதைபோல் தான் எனக்கு...

Facebook page

தேடல் 25

பகுதி 25 கோர்ட்டில் வினய் நன்றாக ஒரு கைதேர்ந்த வழக்கறிஞராக வாதாடினான், சீனிவாசன் கைதேர்ந்த வழக்கறிஞராக இருந்தாலும் வினய் எடுத்து வைக்கும் வாதத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.  அப்போது வினய் வரதராஜன் டிரைவர் ராஜா தலை மறைவிற்கும் மாதவனுக்கும் சம்பந்தம் உண்டு என்று வாதாடிய பொழுது ஜட்ஜ் குறுக்கிட்டு ஆதாரம் இல்லாமல் இவ்வாறு பேசக்கூடாது என்று கூற, இல்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று டிரைவர் ராஜாவின் மனைவியை விசாரிக்க அனுமதி கோரினான் வினய். ஜட்ஜ் யூ கேன் ப்ரோஸீட் என்றதும் அமுதா அமுதா அமுதா என்று மூன்று முறை கூப்பிட சாட்சி கூண்டில் அமுதா ஏறினார்.  மாதவன் மற்றும் ஜெகன் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது அமுதாவை நேரில் பார்த்ததும்,வினய் விசாரணையை தொடங்கினான், உங்கள் பெயர் என்ன என்றான் வினய், அமுதா என்றதும் உங்கள் கணவர் பெயர், எங்கே வேலை பார்க்கிறார் என வினய் கேட்க, என் கணவர் பெயர் ராஜா வரதராஜன் சாரிடம் டிரைவர் வேலை பார்க்கிறார் என்றாள் அமுதா. இப்போது உங்கள் கணவர் எங்கே என்று வினய் கேட்க, தெரியாது என்று பதிலுடன் அழுகையையும் பதிலாக கொடுத்தாள் அமுதா. ஏன் இங்கு அ...

தேடல் 24

பகுதி 24 கோர்ட் வளாகத்தில் காற்றை கிழித்து கொண்டு ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து இறங்கியது வேறு யாருமல்ல மாதவனும் அவன் ஆட்களும் தான் அவர்கள் வேகமாக கோர்ட்டிற்குள் நுழைந்தனர். வாசலில் சீனிவாசன் நின்று கொண்டு வாங்க அடுத்து ஒரு அரைமணி நேரத்துல நம்ம கேஸ் வந்துடும் என்று கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். அனைவரும் ஒரு இடத்தில் வந்து அமர்ந்தனர், அப்போது சீனிவாசன் இங்கயே உட்கார்ந்திருங்க நான் போய்ட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். மாதவன் அவர் போகும் பாதையை பார்த்துக்கொண்டே இருந்தான், அதை கவனித்த ஜெகன் என்ன பாஸ் அவரை பார்த்துக்கொண்டே இருக்கீங்களே என்ன விஷயம் என்றான். இல்லை இவரை முழுவதுமா நம்பலாமா இல்லையானு தான் தெரியலை, நமக்கு எதிரா வாதாடுறது இவர் பையன் அதனால எதுவும் பையன் ஜெயிக்கட்டும்னு விட்டுருவாரா என்று சந்தேகித்தான் மாதவன். அய்யோ பாஸ் நான் முன்னாடியே சொல்லிட்டேன் இவரை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன் அதனால எல்லாமே நமக்கு சாதகமா தான் வாதாடுவாரு எந்த பிரச்னையும் இல்லை என்றான் ஜெகன். என்னமோ சொல்ற சரி, நாம தான் விவசாயிங்களா ஏமாத்தி அந்த நிலத்தை வாங்குனோம்னு தெரிஞ்சா எதுவு...

தேடல் 23

பகுதி 23 அனிதாவை இரவில் வீட்டில் விட்டு வரதராஜனை ஹாஸ்பிடலுக்கு பார்க்க சென்றவன், அவர் அறைக்கதவை திறந்ததும் அதிர்ச்சியானான். அய்யாசாமி தலையில் அடி பட்டு கிடந்தார், முகமூடி போட்ட ஒருவன் வரதராஜனை கத்தியை வைத்து குத்த முயன்றான். அய்யாசாமி அவன் காலை பிடித்து அவனை விடாமல் தடுத்து கொண்டிருந்தார்.  வினய் வேகமாக ஓடி வந்து அவனை பிடிக்க முயன்றான், அதற்குள் அவன் தள்ளி விட்டு தப்பித்து விட்டான். உடனே வரதராஜனுக்கு எதுவும் அடி பட்டு இருக்கிறதா என்று பார்த்தான், அதிர்ஷ்டவசமாக அய்யாசாமி இருந்ததால் எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. டாக்டர் நர்ஸ் என்று குரல் கொடுத்துக்கொண்டே சென்றான் வினய், டாக்டர் வேகமா வந்து வினய் இது ஹாஸ்பிடல் இப்படி கத்துறீங்களே என்று கேட்க, இந்த ஹாஸ்பிடல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை போல என்று வினய் நடந்தவற்றை கூறினான்.  டாக்டர் அதிர்ந்து போனார், சீக்கிரம் வாங்க டாக்டர் அய்யாசாமிக்கு தலையில காயம் ஆகி இருக்கிறது என்று கூட்டி கொண்டு போனான் வினய். பின் டாக்டர் அய்யாசாமிக்கு மருந்து போட்டு கட்டினார், ரெஸ்ட் எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந...

தேடல் 22

பகுதி 22 உமா வீட்டில் வினயும் அனிதாவும் வந்து இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் சொன்ன விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். உமா நீ என்ன நினைக்கிற என்று கேட்ட நேரத்தில் ரஞ்சித்திடம் இருந்து கால் வந்தது வினய்க்கு, டிரைவர் ராஜாவின் மனைவி கிடைத்து விட்டதாக தகவல் சொன்னான் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித். உடனே வினய் உமாவிடமும் அனிதாவிடமும் சொல்லிக்கொண்டு ஸ்டேஷனுக்கு புறப்பட்டான். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்திடம் என்ன சார் ராஜா மனைவி கிடைச்சுட்டாங்களா, ஆனால் அவர் மனைவி எதுக்கு தப்பிக்க நினைக்கணும் என்று கேட்டான் வினய். அதே தான் எனக்கும் சந்தேகம் அவர் மனைவி குழந்தை இங்கதான் இருக்காங்க, நாங்க பிடிச்சுட்டு வந்ததும் அதிர்ச்சில இருக்காங்க எதுவும் பேசலை இன்னும் வாங்க போய் பார்க்கலாம் என்று ஸ்டேஷனுக்குள் வினயை கூட்டி வந்தான் ரஞ்சித். சாந்தி என்று கூப்பிட்டான் ரஞ்சித். எஸ் சார் என்று சல்யூட் அடித்து ஒரு பெண் ரஞ்சித் முன் வந்து நின்றார், ராஜா மனைவியை கூட்டிட்டு வாங்க என்றான் ரஞ்சித், சரி சார் என்று சொல்லிக்கொண்டு அந்த பெண் டிரைவர் மனைவியை கூட்டி வந்தார். ராஜாவின் மனைவி வந்ததும், உட்காருங்கள் என்றார் ரஞ்சித். வினய...

தேடல் 21

பகுதி 21 வினயும் அவர் அப்பா சீனிவாசனும் வாதாட துவங்கினர், கோர்ட்டில் அமைதி நிலவியது என்ன நடக்கும் என்று அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். சீனிவாசன் வாதாட ஆரம்பித்தார் அவர் எடுத்து வைத்த வாதங்களில் வினய் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். ஆனாலும் வினய் நன்கு வாதாடினான், இருந்தாலும் முன் அனுபவத்தில் சீனிவாசன் நன்கு வாதாடிய படியால் வினய் கொஞ்சம் திணறினான். இருவரும் வாதாடியதை வைத்து பார்த்து வரும் வியாழக்கிழமை வழக்கை தள்ளி வைக்கிறேன்  என்று சொல்லி ஜட்ஜ் எழுந்து சென்றார். மாதவன் முகத்தில் கடுப்பு கொப்பளித்தது, என்ன இன்னும் தள்ளி கொண்டே போகிறதே வழக்கு என்று சொல்லி கோபமானான். ஜெகன் வந்து அவனை சமாதானப்படுத்தினான், இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி அடுத்த வரும் தேதியில நமக்கு சாதகமா தீர்ப்பு வந்துரும் என்று மாதவனை சமாதானப்படுத்தினான். சீனிவாசனிடம் உங்கள் கோப முகத்தை காட்டாதீர்கள் என்று ஜெகன் மாதவனை ஆசுவாசப்படுத்தினான்.  வினய்க்கு கொஞ்சம் சந்தோசம் அடுத்த தடவை எப்படியாவது வழக்கை நன்கு வாதாடி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டான். வீட்டில் வாண...

தேடல் 20

பகுதி 20 வினய் இரவு வரதராஜன் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டே தூங்கினான், இரவு ஒரு 3 மணி அளவில் வினய்க்கு முழிப்பு வந்தது அருகில் தண்ணீர் பாட்டிலை தேடினான் அதில் தண்ணீர் இல்லை. உடனே சமயலறைக்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு வந்து படுத்தான். அப்போது அவனுக்கு போன் கால் வந்தது, வினய் யார் அது இந்த நேரத்தில் என்று ஹலோ என்றான், அடுத்த முனையில் வினய் நீ பயப்படாமல் இந்த கேஸ் எடுத்து எனக்கு பதிலாக வாதாடு என்று குரல் கேட்டது, வினய் யாரென்று கேட்டான், அந்த குரல் வரதராஜன் என்றது வினய்க்கு தூக்கி வாரி போட்டது.  சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தான் மணி 7 ஆகி இருந்தது, வினயின் முகம் வியர்த்து கொட்டியது மனசு படபடத்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு நாம் கண்டது கனவு என்று மனசை தேற்றிக்கொண்டான். இருந்தாலும் வரதராஜன் கேஸ் எடுத்து வாதாடுவது என்று முடிவுக்கு வந்தான்.  இன்னும் 2 நாட்களே உள்ளன வழக்கு வருவதற்கு அதற்குள் அனைத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று மனதில் யோசித்து கொண்டான். விவசாயிகளை பார்க்க சென்றான் அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் சேகரித்து கொண்டான். வீட்டில் அம்மா வாணியையு...