Facebook page

தேடல் 26

பகுதி 26 


வினய் வாதாடியதை கேட்டு மிகவும் சந்தோசப்பட்ட வாணியிடம்  அப்பா எங்கே என்று வினய் கேட்டான். அவர் அப்போவே வந்துட்டார் அவர் அறைக்கு போனவர் வெளியே வரவே இல்லை என்றாள் வாணி. உடனே வினய் சீனிவாசன் அறை கதவை திறந்தான். சீனிவாசன் ஜன்னல் வழியே அசைந்தாடும் மரக்கிளையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார், இல்லை இல்லை எதையோ உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். 

வினய் பக்கத்தில் வந்து அப்பா என்றதும் சீனிவாசன் நினைவு வந்தவராய் வாப்பா வினய், நீ நல்ல வாதாடின வரதராஜன் பெயரை காப்பாற்றி விட்டாய் என்று வினயை கட்டித்தழுவி பாராட்டினார் சீனிவாசன். ரெம்ப நன்றி என்று சொல்லிவிட்டு வினய் எதையோ கேட்கத் தயங்கி நின்றான். என்ன வினய் எதுவும் என்னிடம் கேட்கணுமா என்று சீனிவாசன் கேட்டார், ஆமா அப்பா அது வந்து என்று வினய் இழுக்க, என்னப்பா கேளு என்றார் சீனிவாசன். 

அப்பா நீங்க ஒரு வேளை நான் வாதாடுறேனு விட்டு கொடுத்திடீங்களா என்று திக்கி திணறி வினய் கேட்டு விட்டான். சீனிவாசன்  சிறிதாக சிரித்து விட்டு, இது நம் தொழில் அவரவர் தொழில் அவர்களுக்கு கடவுள் போன்றது. அதைபோல் தான் எனக்கும் நான் எப்போதும் என் தொழிலுக்கு உண்மையாக இருந்திருக்கிறேன் இருப்பேன் என்று சொல்லிவிட்டு வினயை பார்த்தார் சீனிவாசன். வினய் அமைதியாக நின்றான், வினய் உண்மையை சொல்லனும்னா நீ எடுத்து வைத்த வாதத்துல நான் கொஞ்சம் திணறித்தான் போனேன், வரதராஜனை என் கண் முன்னால் பார்த்தது மாதிரி இருந்தது என்றார் சீனிவாசன்.

எனக்கு வரதராஜன் சார் மட்டுமில்லை நீங்களும் எனக்கு உதவி பண்ணி இருக்கீங்க அப்பா என்றான் வினய். நானா நான் என்ன பண்ணேன் என்று யோசித்தார் சீனிவாசன். ஆமா அப்பா உங்ககிட்ட இருந்து தொழிலில் உண்மையா இருக்கணும்னு கத்துக்கிட்டேன். சிறுவயதிலே இருந்து பார்த்து பார்த்து என்னை வளர்த்தீங்க அவ்வளவு ஏன் எனக்கு இந்த வக்கீல் தொழில் வேண்டாம் என்று பிடிவாதமாய் இருந்த போதும் நீங்கள் தான் வரதராஜனை போய் பாரு என்று சொல்லி என்னையும் அறியாம இந்த தொழிலை விரும்ப வச்சதே நீங்க தான் அப்பா என்றான் வினய்.


ஓஹோ அதுவா அது அப்பாவா என்னோட கடமைடா அது என்றார் சீனிவாசன். அது சரி கோர்ட் வாசல்ல பார்த்தேன் மாதவன் கோபமா ஏதோ பேசிட்டு போனான் என்று வினய் கேட்க, அது ஒண்ணுமில்லப்பா நீ போய் சாப்பிடு என்றார் சீனிவாசன். அப்பா எதையோ மறைக்க பார்க்கிறார் என்று வினய்க்கு புரிந்ததால் அப்பா என்ன என்று சொல்லுங்க என்று பிடிவாதமாக கேட்க, சீனிவாசன் சொல்ல ஆரம்பித்தார்.


மாதவனுக்கு என் மேல் கோபம் என்றார், எதற்கு என்று வினய் கேட்க, அவனுக்கு சந்தேகம் நீ என் மகன் என்பதால் நான் சரியாக வாதாடாமல் விட்டு கொடுக்கிறேன் என்று அவன் நினைக்கிறான் என்றார் சீனிவாசன். வினயின் முகம் வாடியது இதற்கு தான் நான் அன்று யோசித்தேன் நான் இதில் வாதாட வேண்டாம் என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையில்,  சீனிவாசன் குறுக்கிட்டு அதெல்லாம் ஒன்றுமே இல்லை நானும் விட்டு கொடுக்கவில்லை விட்டு கொடுக்கும் அளவுக்கு நீயும் தரம் குறைந்து போக வில்லை, இனி கவலைப்பட வேண்டாம் என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேறுமாறு அவனே கூறி விட்டான் அதனால் நீ கவலைப்பட தேவை இல்லை என்றார் சீனிவாசன்.

வினய்க்கு இப்போது தான் ஒரு வித பயம் தொற்றியது. மாதவன் வழக்கில் இருந்து வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டு பிறகு அப்பாவிடம் எதுவும் பிரச்சனை செய்வானோ என்று யோசித்தான் வினய். என்னடா யோசிக்கிற என்று சீனிவாசன் கேட்டு விட்டு, போ சாப்பிடு என்று அனுப்பிவைத்தார் சீனிவாசன்.

வினய் அதையே யோசித்து கொண்டிருந்தான் மணி 5 ஆகி இருந்தது, அய்யோ அனிதாவை பார்க்க பார்க்கிற்கு வரேனு சொல்லி இருந்தோமே என்று பைக்கில் கிளம்பினான். பார்க்கில் அனிதாவும் அமர்ந்திருந்தாள் வினயை பார்த்ததும், ஹேய் வினய் ஒரே நாள் உன் பெயர் எல்லாரும் உச்சரிச்சுட்டு இருக்காங்க வாழ்த்துக்கள் என்றாள் அனிதா.

வினய் சிரித்துக்கொண்டே தேங்க்ஸ் அனிதா என்றான், சரி அப்பா எதுவும் சொன்னாரா என்று அனிதா கேட்க, அப்பா ரெம்ப பாராட்டினார் என்றான் வினய். சூப்பர் சூப்பர் என்று சொல்லிவிட்டு உமா என்ன செய்றா நானும் போன் ட்ரை பண்ணிட்டே இருக்கேன் எடுக்கவே இல்லை என்றாள் அனிதா. ஆமா அவளுக்கு ஏதோ ப்ராஜெக்ட் முடிக்கணுமாம் இந்த வாரம் உமா கொஞ்சம் பிஸி னு சொன்னாள் என்றான் வினய். அப்படியா சரி இருக்கட்டும் என்றாள் அனிதா. 

அது இருக்கட்டும் உங்க கேமரா மேன் எங்கம்மா போனையும் காணோம் ஆளையும் காணோம் என்றான் வினய். சாரி சாரி அவன் இப்போ இங்க இருக்குறதே இல்லை ஊர் ஊரா சுத்திட்டு இருக்கான் அவன் போன் பேச கூட டைம் இல்லயாம் அதான் என்கிட்ட சொல்லி கங்கிராட்ஸ்  சொல்ல சொன்னான் என்றாள் அனிதா. 

ம் சரி சரி ஆளாளுக்கு பிஸி ஆகிட்டாங்க இருக்கட்டும் இருக்கட்டும் என்றான் வினய் சிரித்தபடி. அனிதாவும் சிரித்துக்கொண்டே அது இருக்கட்டும் என்னை எப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவ என்றாள். வினய் ஓஹோ இது வேறயா என்றதும்  அனிதா முகம் சுருங்கியது. ஹேய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் உன்ன விட அங்க ஒரு ஆளு பார்க்கணும் பார்க்கணும் அனிதாவை வீட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்லி ஒரே நச்சரிப்பு என்றான் வினய். யாரு அம்மாவா என்று அனிதா கேட்க, ஆமா அம்மாவே தான் என்றான் வினய்.

சரி அப்போ ஒருநாள் கண்டிப்பா கூட்டிட்டு போகணும் சரியா என்று  சிரித்து கொண்டே அனிதா மறுபுறம் பார்க்க அங்கு ஒரு காதல் ஜோடி ஒரே கூல்ட்ரிங்க்ஸ்ல் இரண்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். என்னபார்குற என்று வினய் திரும்பி பார்க்க ஓஹோ அப்போ நான் போய் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வரவா என்று வினய் கேட்க, அனிதா என்ன கிண்டலா என்று வெட்கத்தில் சிரிக்க அனிதா செல்போன் சிணுங்கியது. 

ஐயோ ஆபீஸ்ல இருந்து கால் ஹலோ என்றாள் அனிதா, சரி சார் சரி சார் என்று சொல்லி வைத்து விட்டாள். வினய் சரி நான் கிளம்பனும் என்றாள் அனிதா. என்ன ஃபிரீனு தான சொன்ன இப்போ என்னாச்சு என்றான் வினய், அது இல்லை இன்னொரு ப்ரோக்ராம் அந்த ப்ரோக்ராம் பண்ண வேண்டிய பொண்ணு வரலை அதான் நான் போகணும் என்றாள் அனிதா. ஓஹோ இப்போ அடுத்தவங்க ப்ரோக்ராம் கூட பண்ண ஆரம்பிச்சுட்டியா சூப்பர் சரி போயிட்டு வா என்றான் வினய்.

சாரி வினய் தப்பா எடுத்துக்காத என்றாள் அனிதா. ச்ச ச்சா இதுல என்ன இருக்கு போய்ட்டு வா நானும் கிளம்புறேன் என்று சொல்லி இருவரும் கிளம்பினர். வினய் நேராக இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்தை பார்க்க ஸ்டேஷன்க்கு வந்தான். வாங்க வினய் என்றார் ரஞ்சித். கோர்ட்ல தூள் கிளம்பிட்டீங்க போங்க என்று வினயை பாராட்டினான் ரஞ்சித். நன்றி சார் என்று சொல்லி விட்டு அமுதா பத்திரமா இருக்காங்களா சார் என்றான் வினய். நீங்க கவலைப்பட வேண்டாம் பாதுகாப்பான இடத்துல தான் இருக்காங்க என்றான் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்.


சரி சார் அப்புறம் நாம யோசிக்காத விஷயத்தை அப்பா வாதாடும் போது சொல்லிட்டார், நாம இத்தனை நாளா இதை பத்தி யோசிக்கவே இல்லை என்றான் வினய். ரஞ்சித் என்ன அது என்றான். அதான் சார் ஆட்கொணர்வு மனு போட்டு ராஜாவை கொண்டு வரலாமே என்றான் வினய். ஆமா வினய் அவர் மனைவி அமுதா மூலமா ஆட்கொணர்வு மனு கொடுக்க சொல்லலாம் என்ற பொழுது வினய்க்கு போன் வந்தது, எடுத்து ஹலோ என்றான், மறுமுனையில் நான் தான் வரதராஜன் டிரைவர் ராஜா பேசுறேன் என்றது ஒரு குரல் அதிர்ச்சியில் ஆடி போனான் வினய்......


தேடல் தொடரும் 


பாகா 


உங்கள் கருத்துக்களை comment box இல் தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10