தேடல் 16
பகுதி 16 டாக்டர் வினயை அழைத்து வரதராஜன் உடல்நிலையை பற்றி விளக்கி கொண்டிருந்தார், அவர் உயிருக்கு ஆபத்தில்லை ஆனால் அவர் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். தலையில் பலமா அடிபட்டதால கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். உங்களுக்கே தெரியும் கோமால இருக்குறவங்க எப்போ அதுல இருந்து மீண்டு வருவாங்கனு சொல்ல முடியாது என்று டாக்டர் கூறி விட்டு சென்றார். டாக்டர் கூறி சென்றதும் வினய் மிகவும் குழம்பி போனான், இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்போதைக்கு வழக்கை தள்ளிப்போட செய்யலாம் ஆனால் கோர்ட்டில் குத்துமதிப்பாக ஒரு காலநேரம் சொல்லி ஆகவேண்டுமே இப்போ என்ன செய்வது மிகவும் குழம்பித்தான் போனான் வினய். சரி இப்போதைக்கு அப்பாவிடம் இதை பற்றி பேசுவோமே என்று கிளம்பினான். கோர்ட் - வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை காலை 10 மணி அனைவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாதவன், ஜெகன் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மூவரின் முகத...