Facebook page

தேடல் 16

பகுதி 16

டாக்டர் வினயை அழைத்து வரதராஜன் உடல்நிலையை பற்றி விளக்கி கொண்டிருந்தார், அவர் உயிருக்கு ஆபத்தில்லை ஆனால் அவர் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். தலையில் பலமா அடிபட்டதால கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார். உங்களுக்கே தெரியும் கோமால இருக்குறவங்க எப்போ அதுல இருந்து மீண்டு வருவாங்கனு சொல்ல முடியாது என்று டாக்டர் கூறி விட்டு சென்றார்.

டாக்டர் கூறி சென்றதும் வினய் மிகவும் குழம்பி போனான், இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்போதைக்கு வழக்கை தள்ளிப்போட செய்யலாம் ஆனால் கோர்ட்டில் குத்துமதிப்பாக ஒரு காலநேரம் சொல்லி ஆகவேண்டுமே இப்போ என்ன செய்வது மிகவும் குழம்பித்தான் போனான் வினய். சரி இப்போதைக்கு அப்பாவிடம் இதை பற்றி பேசுவோமே என்று கிளம்பினான்.


                                                        கோர்ட் - வெள்ளிக்கிழமை 

வெள்ளிக்கிழமை காலை 10 மணி அனைவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாதவன், ஜெகன் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மூவரின் முகத்திலும் சந்தோசம் பெருக்கெடுத்தது, இப்போது தான் வாதாட வரதராஜன் இல்லையே என்ற சந்தோச மிதப்பில் இருந்தனர். அவர்களின் வழக்கு நேரம் வந்தது, அனைவரும் உள்ளே நுழைந்தனர் அப்போது மாதவன் வழக்கறிஞர் வாதாட ஆரம்பித்தார். 

 
என் கட்சிக்காரர் மேல் வீணாக பழி போட்டு இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள், நிலத்தின் உரிமையாளர்கள் சம்மதித்து தான் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள் அவர்கள் மீண்டும் பெரும்பணத்திற்கு கை மாற்ற இப்போது வந்து நாடகமாடுகிறார்கள் என்று மாதவன் வழக்கறிஞர் சொல்லி முடித்தார்.

அப்போது ஜட்ஜ் குறுக்கிட்டு இதை பற்றி முழுமையாக விவாதித்து விட்டாயித்து, உங்கள் கட்சிக்காரர் மீது உள்ள குற்றத்திற்கான ஆதாரம் காண்பிக்கப்பட்டதே நிலத்தின் உரிமையாளர்களே அவர்கள் சம்மதம் இல்லாமல் தான் ஏமாற்றி நீங்கள் கையெழுத்து வாங்கினீர்கள் என்று சாட்சி சொன்னார்களே மறுபடி என்ன முதலில் இருந்து வருகிறீர்கள் என்று சொல்லிவிட்டு நிலத்தின் உரிமையாளர்களின் தரப்பு வழக்கறிஞர் எங்கே என்று ஜட்ஜ் கேட்க ஆரம்பித்தார்.

அப்போது ஜட்ஜிடம் வரதராஜன் நிலை தெரிவிக்கப்பட்டு அதனால் ஒரு மாதம் இந்த வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது, ஜட்ஜ் யோசனையில் ஆழ்ந்த சமயம் மாதவனுடைய வழக்கறிஞர் குறுக்கிட்டு இதற்கு நீங்கள் அனுமதிக்க கூடாது என்று கடுமையாக எதிர்த்தார். 

அப்போது பேசிய ஜட்ஜ் இது மிகவும் இயற்கையானது எனக்கு உங்களுக்கு கூட இந்த நிலை வரலாம் அதனால் அவருக்கு அவகாசம் கொடுப்பதில் தவறில்லை என்றார் அப்போது மாதவன் வழக்கறிஞர் பேச முடியாமல் திணறினார்  பின்னர் தொடர்ந்து பேசிய ஜட்ஜ் வரதராஜன்  தரப்புக்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது ஆனால் 20 நாட்கள் மட்டுமே அதற்குள் வேறு யாரையாவது வழக்கில் ஆஜராக சொல்லுங்கள் இல்லை என்று சொன்னால் கோர்ட் உங்களுக்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுக்கும் என்று சொல்லி வழக்கை இருபது நாட்களுக்கு தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி ஜட்ஜ் கிளம்பி விட்டார். 

வினய்க்கு சிறிது சந்தோசம், மாதவன் மிகவும் கோவமாக எழுந்து சென்று விட்டான், வெளியில் மாதவன் வக்கீல் வந்ததும் மாதவன் அவரை கேள்விகளால் துளைத்து விட்டான். ஒரு கேஸில் உன்னால ஒழுங்கா வாதாடி ஜெயிக்க முடியலை பணம் எவ்வளவு வாங்கியிருக்க ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லை என்று அவனை பொரிந்து தள்ளி விட்டு கோவமாக சென்று விட்டான் மாதவன்.


ஜெகன் தலையில் கைவைத்து நின்று கொண்டிருந்த பொழுது, வினய் வெளியே வந்தான் அவனை பார்த்ததும் வினய்க்கு கோபம் கொப்பளித்தது இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் நகர்ந்து விட்டான் வினய்.


வீட்டிற்கு சென்று நடந்ததை சீனிவாசனிடம் தெரிவித்தான் வினய். இந்த இருபது நாட்களில் வரதராஜன் சரியாகவில்லை என்றால் வேறு ஒருவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் அதற்குள் வரதராஜன் உடல்நிலை சரியாக வேண்டும் என்றார் சீனிவாசன்.

வினய் மிகவும் யோசித்து விட்டு சரி நான் கொஞ்சம் வெளியில் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு சென்றான்.

காபி ஷாப்பில் அனிதாவும் வினயும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அப்போது ராஜும் வந்து அமர்ந்தான் என்னடா இவ்வளவு லேட்டா வர என்று வினய் கேட்க உனக்கு என்னப்பா வேலைக்கு போற நேரத்துக்கு தூக்கம் வரும் எனக்கு அப்படியா வர நேரத்துல தான் தூங்கணும் காலையில தான் தூக்கமே வருது என்றான் ராஜ்.

ஆமா ஆமா ஏன் சொல்ல மாட்ட நாங்கதான் உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னோமா என்று உமா உள்ளே நுழைந்தாள், ராஜ் திரும்பி பார்த்து ஓஹோ இந்த தின்னிப்பண்டாரம் நமக்கு முன்னாடியே வந்து திங்குறதுக்கு ஆர்டர் குடுத்துட்டு வருது போல என்று மனதிற்குள் முணுமுணுத்தான். 

டேய் கேட்குறதுக்கு பதில் சொல்லுடா நாங்களா உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னோம் என்று வினய் கேட்க, ராஜ் உடனே நான் ஒரு கேமரா மேன் வேலைக்கு தான் போவேன் அதுவும் படத்திற்கு வேலை செய்ய தான் போவேன் என்று சொன்னான், அதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் உமா.

அப்போது பக்கத்து டேபிளில் இருந்து அனைவரும் திரும்ப அப்போது ராஜ் குறுக்கிட்டு பயப்படாதீங்க அவ வாந்தி எடுக்கலை சிரிக்க தான் செய்றா என்று சொன்னான், உமா கடுப்பாகி டேய் என்று ஆரம்பிக்க, உடனே வினய் குறுக்கிட்டு ஹே ப்ளீஸ் நான் உங்களை இங்கு எதுக்கு வர சொன்னேன் நீங்க பேசாம சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று வருடத்தப்பட்டான்.

அப்போது உமாவும் ராஜும் சாரி வினய் என்றனர். அனிதா ஆரம்பித்தாள் அப்போ அவர் கோமா ஸ்டேஜ்ல இருந்து எப்போ குணமாவாருனு சொல்ல முடியாத என்று கேட்க, ஆமா அனிதா எத்தனை சினிமால பார்க்குறோம் அதெல்லாம் அதிசயம் கடவுள் கையில தான் இருக்கு அவர் எழுந்து நடக்குறது  என்று ராஜ் சொன்னான். ராஜ் சொல்றது தான் சரி என்று வினயும் ஆமோதித்தான்.

அப்போ இருபது நாட்களுக்குள்ள அவர் குணமாகலைனா என்ன பண்றது என்று உமா கேட்டாள். அதுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றான் வினய். 


சரி இப்போதைக்கு அவர் உடல் நிலையை டாக்டர்கிட்ட தினமும் கேட்டு தெரிஞ்சுக்கோ அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவு செய்யலாம் என்று அனிதா சொன்னாள். ஏன் வினய் நீ அந்த கேஸ்ல வாதாடுன என்ன என்று உமா கேட்க, வினய் சற்று தடுமாறித்தான் போனான். ஏனெனில் அந்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவும் இல்லை அதை பற்றி அவன் யோசிக்கவும் இல்லை. அது சரி வராது உமா நான் இன்னும் ஜூனியர் தான் இவ்வளவு பெரிய கேஸ் கண்டிப்பா என்னால முடியாது வேற யாரையாச்சும் தான் கேட்கணும் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் போன் அடித்தது வினய் எடுத்து பேசினான், என்ன அம்மா நான் சாப்பிட்டு வந்துடுவேன் நீங்க சாப்பிட்டு தூங்குங்க என்றான் வினய் அது இல்ல உங்கிட்ட பேசணும் கொஞ்சம் சீக்கிரம் வா வினய் என்று கூறினாள் வாணி.

வினய் மனதுக்குள் குழப்பம் என்ன திடிர்னு அம்மா என்ன பேச போறாங்க என்று யோசித்தபடி சரி என்று சொல்லி போனை வைத்தான். யாரு அம்மாவா என்ன சொன்னாங்க என்று அனிதா கேட்க இல்ல வீட்டுக்கு சீக்கிரம் வா பேசணும்னு சொன்னாங்க என்றான் வினய். அதுக்கு ஏன் நீ இப்படி டென்ஷனா முகத்தை வச்சுருக்க என்றாள் உமா.

அப்போது ராஜ் மிகவும் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான், என்னடா அவ்வளவு தீவிரமா யோசிக்கிற என்று மூவரும் கேட்க, அப்போது ராஜ் சொல்ல ஆரம்பித்தான் இல்லடா இப்போ இருபது நாளுக்குள்ள வரதராஜன் சரி ஆகலைனா என்ன பண்ணனும் என்றான் ராஜ். என்னடா இவ்வளவு நேரம் கேட்டுட்டு இருந்தியா இல்ல தூங்கிட்டியா என்றான் வினய். 

இல்லை நீ சொன்ன மாதிரி வேற யாரவது ஒரு வக்கீல் தான் வாதாடனும் அப்படி தான என்றான் ராஜ். ஆமா என்றான் வினய், அப்போ ஒன்னு நீ வாதாடனும் ஆனால் இது பெரிய கேஸ் நீ வாதாட முடியாதுனு சொல்ற அதானே என்றான் ராஜ்.

அய்யோ ஏன்டா இப்படி மொக்கை போடுற சொல்ல வேண்டியதை சொல்லு என்றான் வினய். டேய் நீ கையில வெண்ணையை வச்சுட்டு நெய்க்கு அலையிறீயேடா என்றான் ராஜ். வினய்க்கு ஒன்றுமே புரியவில்லை முழிக்க ஆரம்பித்தான். அனிதாவும் உமாவும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்க்க ஆரம்பித்தனர்.

டேய் என்ன சொல்லணுமோ சொல்லு சும்மா எங்களை குழப்பி விடாத என்றாள் உமா. அது இல்ல உமா பெரிய வக்கீல் தான் வாதாடனும்னா வெளியில இருந்து எதுக்கு ஒரு வக்கீலை தேடனும் இவன் அப்பாவே பெரிய வக்கீல் தானே என்று சொல்லி முடித்தான்.

அப்போது தான் வினய்க்கு அந்த யோசனை வந்தது நான் இதை பத்தி யோசிக்கவே இல்லையே, அப்பாவை இந்த கேஸ்ல வாதாட சொல்லலாமே என்று யோசித்தான்.ராஜ் ரெம்ப தேங்க்ஸ்டா என்று சொல்லி வினய் ஆனந்தப்பட்டான் சரி  நான் வீட்ல அப்பாட்ட இதை பத்தி பேசுறேன்  நான் கிளம்புறேன் அம்மா வேற போன் பண்ணிட்டாங்க அப்படினு சொல்லி கிளம்பினான் வினய். பைக்கை கிளப்பினான் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை அறியாமல் வீட்டில் அவன் எதிர்பார்க்காத ஒன்று நடந்து கொண்டிருந்தது......
 


தேடல் தொடரும் 

பாகா 

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10