தேடல் 20
பகுதி 20 வினய் இரவு வரதராஜன் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டே தூங்கினான், இரவு ஒரு 3 மணி அளவில் வினய்க்கு முழிப்பு வந்தது அருகில் தண்ணீர் பாட்டிலை தேடினான் அதில் தண்ணீர் இல்லை. உடனே சமயலறைக்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு வந்து படுத்தான். அப்போது அவனுக்கு போன் கால் வந்தது, வினய் யார் அது இந்த நேரத்தில் என்று ஹலோ என்றான், அடுத்த முனையில் வினய் நீ பயப்படாமல் இந்த கேஸ் எடுத்து எனக்கு பதிலாக வாதாடு என்று குரல் கேட்டது, வினய் யாரென்று கேட்டான், அந்த குரல் வரதராஜன் என்றது வினய்க்கு தூக்கி வாரி போட்டது. சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தான் மணி 7 ஆகி இருந்தது, வினயின் முகம் வியர்த்து கொட்டியது மனசு படபடத்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு நாம் கண்டது கனவு என்று மனசை தேற்றிக்கொண்டான். இருந்தாலும் வரதராஜன் கேஸ் எடுத்து வாதாடுவது என்று முடிவுக்கு வந்தான். இன்னும் 2 நாட்களே உள்ளன வழக்கு வருவதற்கு அதற்குள் அனைத்தையும் தயார் செய்ய வேண்டும் என்று மனதில் யோசித்து கொண்டான். விவசாயிகளை பார்க்க சென்றான் அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் சேகரித்து கொண்டான். வீட்டில் அம்மா வாணியையு...