Facebook page

தேடல் 19

பகுதி 19

அனைவரும் ராஜுவுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயம் ராஜ் சேனலில் வேலைக்கு சேர எடுத்த சாம்பிள் வீடியோவை உமாவிற்கும், வினய்க்கும் கட்டினான். உமா பார்த்து விட்டு பாராட்டினாள். ஆனால் வினய் வீடியோவை வைத்த கண் வாங்காமல் மறுபடி மறுபடி பார்த்து கொண்டிருந்தான்.

என்னடா வினய் நல்லா எடுத்துருக்கேனா திருப்பி திருப்பி பார்க்குற என்றான் ராஜ். அதற்கு வினயிடம் எந்த பதிலும் இல்லை அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு குழம்பினர். மீண்டும் வினய் என்று ராஜ் கூப்பிட வினய் கண்டுகொள்ளவே இல்லை அந்த வீடியோவை பார்த்துக்கொண்டே இருந்தான்.


ராஜ் மறுபடி டேய் வினய் என்னடா ஆச்சு வினய் என்று அவனை உலுக்க ஆரம்பித்தான். அப்போது தான் வினய் நினைவு வந்தவனாய் உணர்ந்தான். என்னடா ஆச்சு என்றான் ராஜ், இல்லை இந்த வீடியோ இன்னைக்கு எடுத்ததா என்றான் வினய். ஆமாடா காலையில வீடியோ எடுத்துட்டு வர சொன்னாங்க அதான் நானும் போய் எடுத்துட்டு வந்தேன் இதை பார்த்துட்டு தான் வேலை கொடுத்தாங்க என்னடா என்னாச்சு என்றான் ராஜ்.

இல்ல இதுல ராஜா போறத பார்த்தேன் அதான் அவர் தானானு கண்டுபிடிக்க தான் திரும்பி திரும்பி பார்த்தேன் என்றான் வினய். அவர்கள் மூவரும் முழித்து கொண்டே குழம்பினர். யாரு அது ராஜா என்று அனிதா கேட்டாள். அது நம்ம வரதராஜன் சார் டிரைவர் பெயர் தான் ராஜா இந்த ஆக்சிடெண்ட்ல இந்த ராஜா தான் கார் ஓட்டிட்டு போனது ஆனால் அந்த இடத்தில வரதராஜன் சார்க்கு மட்டும் தான் அடி பட்டு ஹாஸ்பிடல்ல இருக்கார் இந்த ராஜா பத்தி ஒரு நியூஸும் இல்லை இப்போ பார்த்த இந்த வீடியோல ராஜா சாதாரணமா போய்கிட்டு இருக்கான் எனக்கு ரெம்ப டவுட்டா இருக்கு என்று சொல்லி முடித்தான் வினய்.

அப்படியா இவ்வளவு நடந்துருக்கு அந்த டிரைவர் பத்தி இன்ஸ்பெக்டர்ட்ட சொல்ல வேண்டியது தான என்றாள் அனிதா. அது எல்லாம் சொல்லிட்டேன் அவர்களும் டிரைவர் வீடு வரைக்கும் போய் விசாரிச்சுட்டு வந்துட்டாங்க ஆனால் அந்த டிரைவர் மனைவிக்கும் எதுவும் தெரியாதுன்னு சொல்லி அழுதாங்க அப்படினு ரஞ்சித் சொன்னார் ஆனால் இப்போ இதையெல்லாம் பார்த்தா ரெம்ப தப்பா இருக்கே என்று குழம்பினான் வினய்.

இந்த வீடியோவை எடுத்துட்டு போய் இன்ஸ்பெக்ட்டர்கிட்ட ஆதாரம் கொடுத்தா அவர்கள்  கண்டுபிடிக்கட்டுமே இந்த டிரைவரை என்று உமா கூறினாள். அப்போது வினய் யோசித்து விட்டு அதுவும் சரி தான் என்று அந்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து அவன் மொபைலில் வைத்துக்கொண்டான். 

இப்போ நீ என்ன பண்ண போற வினய் என்று அனிதா கேட்க, நாளைக்கு ரஞ்சித்தை போய் நேர்ல பார்த்து இந்த விஷயம் பத்தி பேசலாம்னு இருக்கேன் அப்டியே இந்த ஆதாரத்தையும் அவர்கிட்ட கொடுக்கலாம்னு இருக்கேன் என்றான் வினய். ஹேய் ராஜ் நீ இந்த ஒரிஜினல் வீடியோ உங்கிட்ட பத்திரமா இருக்கட்டும் எல்லாரும் உங்க மொபைலில் ஒரு காப்பிய வச்சுக்கோங்க என்றான் வினய். அனைவரும் சரி என்று தலையாட்டினர்.

சரி கிளம்பலாம் என்று அனைவரும் கிளம்பினர். வீடு வந்தும் வினய் மிகவும் யோசித்து கொண்டே இருந்தான், இந்த வழக்கில் நாம் வாதாடலாமா அந்த அளவுக்கு நமக்கு தகுதி இருக்கா இன்று காலை வரதராஜன் சார் எனக்கு பதில் நீ இந்த வழக்கில் வாதாடு என்று ஏன் அப்படி சொன்னார் அது சொல்லி முடித்து விட்டு உடனே கண் மூடிவிட்டாரே இதெல்லாம் உண்மையா இல்லை டாக்டர் சொன்னது போல் மனப்பிரமையா என்று தனக்குள்ளே குழம்பி தூங்கி போனான்.

விடிந்தது வினய் இருக்கையில் அமர்ந்திருந்தான் ரஞ்சித் வருவதற்கு காத்திருந்தான். கான்ஸ்டபிள் ஆறுமுகம் மட்டுமே இருந்தார், ரஞ்சித் சார் வர நேரம் தான் நீங்க உட்காருங்க சார் என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தார். வினய் காத்துக்கொண்டிருக்கும் சமயம் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தான் ரஞ்சித் இருக்கை மேலே காந்தி, நேரு படம் இருந்தது அதன் கீழ் வாய்மையே வெல்லும் என்ற வாசகம் இருந்தது, அதை பார்த்து கொண்டிருந்த சமயம் ரஞ்சித் உள்ளே நுழைந்தார்.

ஹாய் வினய் என்றார் ரஞ்சித், குட் மார்னிங் சார் என்றான் வினய். உட்காருங்க வினய் என்ன காலையிலேயே வந்துருக்கீங்க என்ன விஷயம் என்றார் ரஞ்சித். சார் எனக்கு ஒரு சந்தேகம் அந்த டிரைவர்க்கும் இந்த ஆக்சிடெண்ட்க்கும் ஏதோ தொடர்பு இருக்குனு நினைக்கிறேன் சார் என்றான் வினய். எப்படி சொல்றீங்க என்றார் ரஞ்சித், இல்லை இதுவரைக்கும் ராஜாவை பத்தி எதுவுமே தெரியலை அவர்கள் வீட்ல அவர் மனைவிக்கும் தெரியலை அதுவும் இல்லாம அவன் ஏன் தலைமறைவா இருக்கனும் அங்க தான் சார் ஏதோ ஒன்னு இருக்குனு எனக்கு தோணுது என்றான் வினய்.

சரி நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும் ஆனால் ராஜாவும் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு அங்க யாராவது பார்த்து காப்பாத்தி கொண்டு போயிருக்கலாம், இல்லை அப்டியே அவன் தலைமறைவா இருக்கானு வச்சுக்குவோம் அதற்கான ஆதாரம் நம்மகிட்ட எங்க இருக்கு என்றார் ரஞ்சித்.

அப்போது வினய் கொண்டு வந்திருந்த ஆதாரத்தை ரஞ்சித்திற்கு காட்டினான். இங்க கிராஸ் ஆகுறாரே இது தான் டிரைவர் ராஜா என்றதும் ரஞ்சித் மறுபடி மறுபடி பார்த்தான். இது எந்த இடம் என்று ரஞ்சித் கேட்டார், இது மாட்டுத்தாவணி பக்கம் இருக்குற ஒரு ஹோட்டல் சார் என்று வினய் சொன்னான். அப்போ ராஜா வேண்டுமென்றே தலைமறைவா தான் இருக்கான் அப்போ அவன் தான் இந்த ஆக்சிடென்ட் வேண்டும் என்றே  செய்திருக்கணும் இல்லை இது பத்தி ஏதோ ஒன்னு அவனுக்கு தெரிஞ்சுருக்கணும் என்றார் ரஞ்சித்.


ஆமா சார் கண்டிப்பா ஏதோ ஒன்னு தெரிஞ்சுருக்கணும் சீக்கிரமே ராஜாவை கண்டுபிடிச்சா எல்லாமே தெரிய வரும் என்றான் வினய். 
சரி ராஜா போட்டோ ஏதாவது இருந்தா எனக்கு மெயில் பண்ணுங்க அப்டியே இந்த வீடியோவையும் எனக்கு மெயில் பண்ணிடுங்க. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை நான் எடுக்கிறேன் என்று ரஞ்சித் சொன்னார்.

ரெம்ப நன்றி சார் என்றான் வினய்.  அவன் மதுரைல தான் இருக்கான் அப்போ கண்டிப்பா அவன் வீட்டுக்கு போகாம இருக்க மாட்டான் எனக்கு என்னமோ அவன் மனைவியை திருப்பி விசாரிக்கலாம்னு தோணுது என்றார் ரஞ்சித். சரி சார் நீங்க எப்படியாவது அவனை கண்டுபிடிங்க ரெம்ப உதவியா இருக்கும் வரதராஜன் சார்க்கு எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா போதும் என்றான் வினய்.

சரி வினய் நான் பார்த்துக்குறேன் நீங்க கிளம்புங்க என்றார் ரஞ்சித்.
வினய் கிளம்பினான். 

அன்று எல்லா வேலையையும் முடித்து கொண்டு வீட்டில் அமர்ந்தான், அப்போது வாணி வந்து என்னடா ரெம்ப களைப்பா இருக்கியே என்ன அனிதாவை பார்க்கலயா என்றாள் கிண்டலாக, இல்லமா இன்னைக்கு ரெம்ப வேலை அந்த வழக்கு பத்தின தகவல் சேகரிக்கவே நேரமாயிடுச்சு என்றான் வினய்.

சரி சரி உங்க அப்பாகிட்ட பேசுனியா இந்த கேஸ் எடுத்து நடத்த வேண்டாம்னு என்றாள் வாணி. இல்லையே நான் எதுவும் பேசலையே 
என்றான் வினய், அன்னைக்கே சொன்னேன்ல அப்பா முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்னு என்று சொல்லி சிரித்தான் வினய்.

டேய் நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ என்னடா சிரிக்கிற என்றாள் வாணி. ஓஹோ அப்படியா  என்று சொல்லிவிட்டு வினய் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு இந்த மூஞ்சி சீரியஸா இருக்கா என்று கேட்டான் வினய்.

என்னடா விளையாடுறியா இப்போ நீ கேட்பியா மாட்டியா உங்க அப்பாகிட்ட என்றாள் வாணி மிகவும் கோபமாக, சரி சரி கோவப்படாதமா என்று சொல்லி அப்பாவிடம் பேச கிளம்பினான். உள்ளே சீனிவாசன் ஃபைலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வினய் உள்ளே நுழைந்ததும் வா வினய் என்று சொல்லி விட்டு  ஃபைலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பா நீங்க இந்த கேஸ்ல கண்டிப்பா வாதாடணுமா என்று கேட்டான், சீனிவாசன் நிமிர்ந்து பார்த்து விட்டு ஃபைலை மூடி வைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.

உங்க அம்மா கேட்க சொன்னாளா என்றார் சீனிவாசன். இல்லை எனக்கும் தோணுச்சு அதான் கேட்குறேன் அவங்க ரெம்ப மோசமானவங்க மாதவன் அவன் ஆட்கள் ரெம்ப மோசமானவங்க அவர்களுக்கு சாதகமா நீங்க வாதாடணுமா என்று கேட்டான் வினய்.

வினய் என்னடா எதுவுமே தெரியாதது மாதிரி கேட்குற என்னை நம்பி வந்தவங்கள நல்லவர்களா கெட்டவர்களா என்பதை பார்க்கமாட்டேன் எனக்கு வர வழக்கை மட்டும் தான் பார்ப்பேன். வந்த வழக்கை வேண்டாம்னு சொன்னதில்லை வராத வழக்கை வம்படியா தேடி பிடிச்சு நான் வாதாடுவதுமில்லை உனக்கு தெரியும் தானே என்றார் சீனிவாசன் கொஞ்சம் சத்தமாகவே.

வினய் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான் இருந்தாலும் மீண்டும் அப்பா என்று சொல்ல, இனிமேல் இது பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீனிவாசன். வினயும் சரிப்பா என்று கிளம்பினான், சாப்டியா என்றார் சீனிவாசன். இல்ல இனிமேல் தான் சாப்பிடணும் என்றான் வினய். சரி சாப்பிட்டு தூங்கு என்றார் சீனிவாசன்.சரி என்று சொல்லி கிளம்பினான் வினய்.

இரவு படுக்கையில் வினய் நினைவுகள் எங்கோ சென்றன அவன் மனதுக்குள் வரதராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது நீ எனக்கு பதிலாக வாதாடு என்ற வார்த்தை அவனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தது 
வினய் ஒரு முடிவெடுத்தான்....


தேடல் தொடரும் 


பாகா 


உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10