தேடல் 17
பகுதி 17
ராஜ் சொன்னது போல அப்பாவையே இந்த கேஸ்ல வாதாட வச்சுடனும் என்று சந்தோசமாக புறப்பட்டான். ஆனால் அவன் வீட்டில் எதிர்பாராத ஒன்று நடந்து கொண்டிருந்தது, வீட்டை அடைந்தான் நிறைய கார்கள் நின்றிருந்தன. வினய்க்கு மிகவும் ஆச்சர்யம் என்ன இது இந்த ராத்திரி நேரத்துல இவ்வளவு கார்கள் நம்ம வீட்டில் நிற்குதே என்று குழப்பத்துடனும் ஆச்சர்யத்துடனும் வீட்டிற்குள் நுழைந்தான் வினய்.
அவன் நுழைந்ததும் மாதவன் வினயின் அப்பா சீனிவாசனிடம் இந்த கேஸ்ல நீங்க தான் வாதாடனும் என்று அட்வான்ஸ் மற்றும் இந்த கேஸ் பத்திய ஃபைல்ஸ் நீட்டினான். வினய் நுழைவதற்கும் சீனிவாசன் மாதவனிடம் சரி நான் வாதாடுறேன் என்று சொல்வதற்கும் சரியாய் இருந்தது.
அப்போது தான் வினய்க்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது, ஓஹோ மாதவன் ஆட்களுடன் வந்து அப்பாவை வழக்கில் வாதாட கேட்டு வந்திருக்கிறான் என்று அதிர்ந்து போனான்.
அப்போது மாதவன் வினய் பக்கம் திரும்ப, இது யாரென்று தெரியாதது போலக்கேட்க, இது என் மகன் என்று சீனிவாசன் சொன்னார். ஆமா நான் கூட பார்த்துருக்கேன் கோர்ட்ல வரதராஜன் சார் கூட வருவாரே அந்த தம்பி தானே என்று நக்கலாக கேட்க ஜெகன் சிரிக்க ஆரம்பித்தான்.
அப்போது வினய் கோபத்தின் உச்சிக்கு போக அந்த சமயம் வாணி வந்து வினயை சாப்பிட வாப்பா என்று நாசுக்காக இழுத்துக்கொண்டு சென்றாள்.
அப்போது வினய் அறைக்கு சென்றதும் வாணி படபடவென பேசினாள் , வினய் உங்க அப்பாவை இந்த கேஸ்ல வாதாட வேண்டாம்னு சொல்லுடா இவனுங்கள பார்த்தாலே ரவுடி கும்பல் மாதிரி இருக்குது நீதான் உங்க அப்பாவுக்கு எடுத்து சொல்லணும் என்று வினயிடம் கோரிக்கை வைத்தாள் வாணி.
அட என்னமா என்று வினய் தலையில் கை வைத்தான், அப்பாவை பத்தி உனக்கு தெரியாதா அப்பாவை நம்பி யாராவது கேஸ்னு சொல்லி வந்துட்டா அப்பா அவங்களை கைவிட மாட்டார், அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களானு பார்க்க மாட்டார் அப்பா,உனக்கு இது தெரியாதா என்று சொல்லி முடித்தான் வினய்.
அய்யோ வினய் எனக்கு தெரியும்டா ஆனால் நீதான் பக்குவமா எடுத்து சொல்லனும்டா என்றாள் வாணி பதைபதைப்புடன். வினய் அம்மாவை ஆசுவாசப்படுத்தினான், சரி நீங்க டென்ஷன் ஆகாதீங்க அவர்கள் போகட்டும் பேசுவோம் என்றான் வினய்.
வினய் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வேகமாக குடித்தான், என்னடா என்ன டென்ஷன் ஆக வேண்டாம்னு சொல்லிட்டு நீ டென்ஷனா இருக்கியே என்ன விஷயம் என்றாள் வாணி .
வினய் யோசித்து விட்டு நம்ம வரதராஜன் சார் கோமாவில இருக்கார்ல, ஆமா எனக்கு தான் தெரியுமே அதுக்கு என்ன இப்போ என்றாள் வாணி புரியாதவளாய். அது இல்லம்மா கோர்ட்ல இருபது நாள் கால அவகாசம் கொடுத்திருக்காங்க அதுக்குள்ள அவர் குணமாகலைனா அவருக்கு பதில் வேற வக்கீல் வாதாடனும் அப்படினு சொல்லிட்டாங்க என்றான் வினய்.
ஓஹோ இப்போ என்னடா செய்யப்போற என்றாள் அவன் அம்மா வாணி. நான் நம்ம அப்பாவை வாதாட சொல்லலாம்னு வந்தேன் ஆனால் இப்போ மாதவன் முந்திக்கிட்டான் இப்போ என்ன செய்யுறதுனு தெரியலயே என்றான் வினய்.
அப்பாவை பத்தி எனக்கு நல்லா தெரியும், அப்பாவை நம்பி யாரும் வந்தா அப்பா அவுங்களை ஏமாத்த மாட்டார். வழக்குல வாதாடுறேனு சொல்லிட்டு அப்பா எப்பவும் பின் வாங்குனது இல்லை அதுல பெரும்பாலும் அப்பாவே வழக்குல வெற்றி பெற்றிருக்கார். இப்போ நான் போய் கேட்டாலும் அப்பாவுக்கு தர்ம சங்கடம். இப்போ என்ன பண்றது யாரை வாதாட வைக்குறதுனு தெரியல ஒரே குழப்பமா இருக்கு என்றான் வினய்.
வாணி மகனின் இந்த நிலைமையை பார்த்து வருந்தினாள், அவள் மனதுக்குள் மகனை நினைத்து மிகவும் பெருமைபட்டாள். தன் மகனுக்கு எதுவும் ஆக கூடாது என்று வரதராஜன் வீட்டுக்கு போக வேண்டாம் என்று சொன்னவள் இப்போது அவன் தன் குருவான வரதராஜன் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை பார்த்து வருத்தப்படுவதோடு மட்டுமில்லாமல், அந்த கேஸில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்வதை கண்டு மிகவும் பெருமைப்பட்டாள் வாணி.
அப்போது வாணி வினய் இந்த வேலையே பிடிக்கலைனு இத்தனை வருஷம் இருந்த நீ இப்போ இவ்வளவு சிரத்தை எடுத்து இந்த கேஸ்ல ஜெயிக்கணும்னு நினைக்குறீயே ஏன்? என்றாள் வாணி.
அது வந்து வரதராஜன் சார் பத்தி நான் முழுசா தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னையும் அறியாமல் இந்த வேலையை நான் நேசிக்க ஆரம்பிச்சுட்டேன், அவர் இத்தனை வருஷம் தன்னை நம்பி வருபவர்களின் நேர்மையை வைத்து அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து கேஸை எடுத்து வாதாடுவர்.
ஏழ்மை நிலைமையில் இருப்பவர்கள் அவரிடம் சென்றாலும் அவர்களுக்கு நியாயம் வாங்கிக்கொடுப்பார். இதற்காகவே வாழ்ந்து திருமணம் செய்யாமல் இத்தனை வருஷம் சேவை செய்திருக்கார். இதை எல்லாம் பார்த்து வரதராஜன் சார் மேல மரியாதையும் இந்த வேலையின் மீது எனக்கு ஒரு பற்றும் வந்தது என்றான் வினய்.
இப்போ தான் எனக்கு புரியுது அப்பா ஏன் அவர்கிட்ட என்னை ஜூனியரா சேர சொன்னார்னு, அப்பா எனக்கு புரிய வச்சுட்டார் இனி என் வாழ்க்கை இது தான் என்று சொல்லி முடித்தான் வினய்.
அப்போ வாணி மிகவும் பூரிப்புடன் வினய் பேசுவதை கேட்டு கொண்டே இருந்தாள், வினய் உனக்குள்ள இத்தனை வருஷம் இல்லாத ஒரு பொறுப்புணர்வு வந்துருக்குறத என்னால பார்க்க முடியுது கவலைப்படாத உங்க அப்பா வாதாடுனாளும் நீ கண்டிப்பா ஜெயிப்ப என்றாள் வாணி.
அட போமா நானே இப்போ பெரிய குழப்பத்துல இருக்கேன் நீ வேற என்று முணுமுணுத்தான். ஹே நீயே வாதாடுடா நீ இப்போ பேசுனதை எல்லாம் பார்த்தா உங்க அப்பாவை இருபத்தைந்து வருஷம் முன்னாடி பார்க்குற மாதிரி இருக்கு, கண்டிப்பா வெற்றி உனக்கு தான் என்று சொல்லி வாணி அறையை விட்டு வெளியேறினாள்.
வினய் மிகவும் குழப்பத்துடன் தூங்கி போனான், மறுநாள் காலை மாதவன் ஆஃபிஸில் மாதவனும் ஜெகனும் பேசிக்கொண்டிருந்தனர். எப்படி நீ கண்டுபிடிச்ச சீனிவாசன் இதுல உள்ளே நுழைஞ்சுருக்காருனு என்று கேட்டான் மாதவன், அப்போது ஜெகன் சொல்ல ஆரம்பித்தான் வரதராஜன் தனக்குனு ஜூனியர் யாரும் வச்சுகுட்டது இல்ல அப்படி வச்சுக்க ஒத்துக்கிட்டதே அவரோட நண்பர் சீனிவாசன் கேட்டுக்கொண்டதால் அவர் பையனை ஜூனியரா வச்சுக்கிட்டார் அப்படி இருக்குறப்போ ஒண்ணுமே தெரியாத கன்னுகுட்டி வினய்க்கு எப்படி இப்படி எல்லாம் யோசனை வருதுனு விசாரிச்சு பார்த்தப்போ அவர் அப்பா சீனிவாசன் இதுக்கு பின்னாடி இருக்கறதை தெரிஞ்சுகிட்டேன்.
அதனால அவரை நம்ம பக்கம் இழுத்துட்டா வினய் தனி ஆள் ஆகிடுவான், அறிவுரை சொல்லக்கூட யாரும் இருக்க மாட்டாங்க அப்புறம் நம்ம தான் பாஸ் ஜெயிப்போம் என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தான் ஜெகன். என்கூட இருக்குறவங்களிலே நீ தான் புத்திசாலி அதான் உன்ன என்கூடவே வச்சுருக்கேன் என்று ஜெகனை மிகவும் பாராட்டினான் மாதவன்.
எதுக்கும் சீனிவாசன் மேல ஒரு கண் வச்சுக்கோ ஜெகன், மகன் பாசத்துல அந்த பக்கம் சாய போறார் என்றான் மாதவன். ஐயோ பாஸ் நான் அவரை பத்தி நல்லா விசாரிச்ச பிறகு தான் இதுல இறங்கினேன். சீனிவாசனை பொறுத்தவரைக்கும் அவரை நம்பி யார் வந்தாலும் கைவிடமாட்டார். நல்லவங்களா கெட்டவங்களானு அவர் பார்க்குறது இல்ல வழக்குன்னு அவரை நம்பி யார் வந்தாலும் அவர் கைவிடமாட்டார் அதனால் அவரை முழுசா நம்பலாம் என்றான் ஜெகன். என்ன இருந்தாலும் ஒரு கண் அவர் மேல் இருக்கட்டும் என்றான் மாதவன், சரி பாஸ் என்றான்.
வினய் ஹாஸ்பிடலுக்கு சென்றான், வரதராஜன் படுக்கையில் எந்த அசைவுமின்றி கிடந்தார். வினயை பார்த்ததும் அய்யாசாமி அருகில் வந்து டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டார் ஆவலாக. வினய் மனதுக்குள் எல்லாத்தையும் மறைத்து விட்டு சீக்கிரமே எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவார் நீங்க கவலைப்பட வேண்டாம் என்று டாக்டர் சொன்னதாக கூறினான் வினய்.
அதை கேட்டதும் அய்யாசாமிக்கு சந்தோசம் தாங்க வில்லை அந்த ஆண்டவன் நம்மளை கைவிடலை தம்பி என்று சொல்லி விட்டு நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேனு சொல்லி புறப்பட்டு சென்றார் அய்யாசாமி.
வினய் வரதராஜன் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே அமர்ந்தான் அவன் மனதில் ஏகப்பட்ட குழப்பங்களுடன் இருந்தான் இப்போ என்ன தான் செய்வது என்று புலம்பினான், தீடீர் என்று வரதராஜன் கண் விழித்து வினய் நீ தான் கேசில் எனக்கு பதிலாக வாதாட வேண்டும் என்று சொன்னார் வினய் மிகவும் அதிர்ச்சி ஆனான்..!
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment