தேடல் 18
பகுதி 18
வினய் வரதராஜன் அருகில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான், என்ன செய்வது என்று தெரியாத ஒரே குழப்பத்தில் இருந்தான். அப்போது வரதராஜன் கண்களில் அசைவு இருப்பதாய் கண்டான், வினய்கு ஆச்சர்யம் உடனே அருகில் சென்று சார் என்று கூப்பிட வழக்கு என்ன ஆனது என்றார், வினய் உடனே இருபது நாட்கள் தள்ளி வச்சுருக்காங்க உங்க உடல்நிலை கருதி என்று சொல்லி முடிப்பதற்குள் நீ எனக்கு பதிலா வாதாடு என்று சொல்லிவிட்டு கண் மூடினார் வரதராஜன்.
வினய்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, உடனே டாக்டரை கூப்பிட்டான். டாக்டர் வந்து பார்த்து விட்டு உண்மையாகவே கண் விழித்தாரா இல்லை உங்கள் மனப்பிரமையா என்றார், சார் இல்லை இப்போதான் கண் விழித்து என்கிட்ட பேசினார் என்றான் வினய்.
டாக்டர்க்கு வினய் மேல் நம்பிக்கை இல்லை, இது மாதிரி நிறைய பேர் பார்த்துருக்கோம் இவ்வளவு சீக்கிரம் அவர் கண் விழிக்க சான்ஸ் இல்லை. ஒரு வேளை அவர் கண் விழித்து பேசினார் என்றால் நல்ல முன்னேற்றம் தான் என்று சொல்லி கிளம்பி விட்டார் டாக்டர்.
அய்யாசாமி உள்ளே பதறி கொண்டே உள்ளே நுழைந்தார், என்னாச்சு தம்பி டாக்டர் வந்து போறார் என்னாச்சு என்று பதறினார். ஒண்ணுமில்ல அண்ணே சார் கண் முழித்து என்கிட்ட பேசினார் அதான் டாக்டரை கூப்பிட்டேன் என்றான் வினய். என்னப்பா சொல்ற அய்யா பேசினாரா என்று மிகவும் சந்தோஷப்பட்டார் அய்யாசாமி. ஆமா அண்ணே ஆனால் டாக்டர் என்னை நம்பலை என்று வருத்தப்பட்டான் வினய். அவர் நம்பலைனா என்ன தம்பி நான் நம்புறேன் நான் கும்பிடுற கடவுள் நம்மளை கைவிடாது தம்பி என்றார் அய்யாசாமி.
சரி அண்ணே பார்த்துக்கோங்க நான் கேஸ் விஷயமா வெளிய போய்ட்டு வரேன் என்று கிளம்பினான் வினய். வினய் வெளியே வந்ததும் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் வந்தார், வினய் அவரை பார்த்ததும் ஹாய் சார் இந்த கேஸ்ல எதுவும் தகவல் கிடைச்சதா என்று விசாரித்தான் வினய்.
இல்லை வினய் இந்த கேஸ் மிகவும் குழப்பமா இருக்கு, காரை வரதராஜன் சார் ஓட்டலைன்னு சொல்றீங்க ஆனால் கார் டிரைவர் பத்தி எந்த நியூஸும் கிடைக்கலையே என்றார் ரஞ்சித். வினய் யோசித்து விட்டு சார் டிரைவர் வீட்டு முகவரி இருக்கே அங்க போய் விசாரிக்க சொன்னீங்களா என்றான் வினய்.
ஆமா வினய் போய் விசாரிச்சுட்டு வந்தாச்சு ஆனால் அவர் மனைவிக்கும் தெரியல அவர் வீட்டுக்கே வரலைன்னு சொல்றாங்க அந்த அம்மாவும் அழுதுட்டே இருக்காங்க சரி அவர் வீட்டுக்கு வந்தாலோ இல்லை அவரை பத்தி தகவல் கிடைச்சாலோ உடனே எங்களுக்கு சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்துருக்கோம் என்றார் ரஞ்சித்.
வினய் யோசித்து விட்டு சரி சார் எதுவும் உங்களுக்கு தகவல் கிடைச்சா சொல்லுங்க என்றான் வினய். கண்டிப்பா சொல்றேன் வினய் இப்போ வரதராஜன் சார் கேஸ்ல யார் வாதாட போறாங்க என்றார் ரஞ்சித். இன்னும் முடிவு பண்ணலை இருபது நாட்கள் இருக்கு அதுக்குள்ள ஏதாவது ஒரு அற்புதம் நடக்கலாம் என்றான் வினய்.
ஏன் நீங்களே வாதாட கூடாது என்று ரஞ்சித்தும் கேட்க இல்லை சார் இது பத்தி கொஞ்சம் யோசிக்கணும் என்றான் வினய். யோசிச்சு முடிவு பண்ணுங்க வினய் நீங்க கூடவே இருந்துருக்கீங்க அதனால இந்த கேஸ் உங்களுக்கு நல்லா தெரியும் கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவு எடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்.
வினய்க்கு அனிதாவிடம் இருந்து போன் வந்தது, ஹலோ சொல்லு அனிதா என்றான் வினய், வினய் எங்க சேனல்ல கேமரா டீமுக்கு கேமரா மேன் வேலைக்கு ஆள் தேடிட்டு இருக்காங்க இங்க எங்ககிட்ட யாரும் தெரிஞ்சா சொல்ல சொன்னாங்க நம்ம ராஜ் வருவானா அவன் பேர் சொல்லி வைக்கவா என்றாள் அனிதா. ஹே சூப்பர் அவன் கண்டிப்பா வருவான் சொல்லி வச்சுரு நான் அவனுக்கு சொல்லிடுறேன் வேலை கிடைக்குறதே கஷ்டம் அதுவும் பிடிச்ச வேலை கிடைக்குறதுனா வேண்டாம்னா சொல்லுவான் என்றான் வினய், அப்போ சரி நான் அவனை பத்தி எங்க சேனல்ல சொல்லிடுறேன் எப்போ வரணும்னு அப்புறமா கேட்டு சொல்றேன் நீ ராஜ்கிட்ட விளக்கமா சொல்லிடு என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் அனிதா.
ராஜ்க்கு கால் பண்ணி அனைத்தையும் சொல்லிவிட்டான் வினய். ராஜுக்கும் ரெம்ப சந்தோசம் அவனுக்கும் விருப்பம் என்று சொல்லி விட்டான்.
மறுநாள் ராஜ் சேனல் ஆபீஸ்க்கு சென்றான். அனிதா அவனிடம் வந்து எல்லாமே ஓகே உனக்கு வேலை கண்டிப்பா கிடைச்சுடும் ஆனால் இப்போ உன் கையில் கேமரா கொடுத்து சின்ன டெஸ்ட் ஷூட் எடுக்க சொல்வாங்க நல்ல பண்ணிடு என்றாள் அனிதா.
அய்யோ அதெல்லாம் சுலபமா பண்ணிடுவேன் என்று சொல்லி விட்டு உள்ளே போனான் ராஜ். அங்கு கேமரா டீம் ஹெட் அமர்ந்திருந்தார், சார் என்று ராஜ் கூப்பிட வாங்க என்று சொன்னார். உங்களை பத்தி அனிதா சொன்னாங்க இருந்தாலும் சேனல் விதிகள் படி நீங்க ஒரு சின்ன வீடியோ ரெடி பண்ணி கொண்டு வரனும் என்றார் கேமரா மேன் ஹெட்.
அது பரவாயில்லை சார் நான் கொண்டு வரேன் என்றான் ராஜ் அப்போ இது தான் உங்க கேமரா 3மணி நேரம் உங்களுக்கு அவகாசம் இருக்கு அதுக்குள்ள ஒரு வீடியோ எடுத்துட்டு வாங்க அதை பார்த்துவிட்டு அப்புறம் சொல்றேன் என்றார் அவர். சரி என்று சொல்லி கிளம்பினான் ராஜ்.
ராஜ் கிளம்பி சென்றான் அவனுக்கு இதில் மிகுந்த ஆர்வத்தால் கேமராவை கொண்டு நினைத்த இடத்தில் வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டு இருந்தான். மிகவும் எதார்த்தமாக அதே சமயம் நேர்த்தியாக இருந்ததால் அனைவர்க்கும் பிடித்து போக ராஜுவுக்கு வேலை கிடைத்தது நாளைக்கே வந்து வேலையில் சேர சொல்லி ஆர்டர் கொடுத்தனர்.
அனிதாவிற்கு சந்தோசம் வினய்க்கு கால் செய்து விஷயத்தை சொன்னாள், ராஜ் உன்னையும் உமாவையும் கிளம்பி காபி ஷாப்க்கு வர சொன்னான் என்றாள் அனிதா. ஓஹோ இத அவர் சொல்ல மாட்டாராமா என்றான் வினய். இல்லை ராஜ் உள்ளே இருக்கான் அவனுக்கான பார்ம்ஸ் எல்லாம் கை வலிக்க நிரப்பிட்டு இருக்கான் என்று சிரித்து கொண்டே அனிதா சொல்ல, சரி சரி வந்துடுறோம் என்றான் வினய்.
அனைவரும் கோல்டு காபி குடித்துக்கொண்டே அரட்டை அடித்தனர். பரவாயில்லையே நீ நினைச்ச மாதிரியே கேமரா மேன் வேலை கிடைச்சுருச்சு வாழ்த்துக்கள் என்றாள் உமா. நன்றி நன்றி என்றான் ராஜ். ஆனால் எனக்கு ஒரு டவுட் உன்ன எப்படி செலக்ட் பண்ணாங்க என்றாள் உமா, உடனே ராஜ் நான் எடுத்த ஒரு சாம்பிள் வீடியோ வச்சே செலக்ட் பண்ணிட்டாங்க என்றான்.
அப்படி என்னப்பா வீடியோ காட்டு பார்க்குறோம் என்று வினயும் உமாவும் சொல்ல ராஜ் அவன் எடுத்த வீடியோவை காட்டினான். அதை உமாவும் வினயும் பார்த்தனர் அப்போது உமா டேய் சூப்பரா இருக்கு என்றாள். உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்த வினய் இன்னைக்கு எடுத்த விடியோவா என்று ராஜை கேட்டான், ஆமா வினய் என்னாச்சு என்றான் ராஜ். வினய் எதுவும் பேசாமல் வீடியோவை மறுபடி மறுபடி பார்த்து அதிர்ந்து போனான்...
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment