தேடல் 10
பகுதி 10
அந்த கார் பின்னாடியே வினயை தொடர்ந்து வந்தது, வினய் பதட்டமாகி வேகமெடுத்தான். அந்த காரும் வேகமெடுக்க தொடங்கியது, நம்மை தான் யாரோ தொடர்ந்து வருகிறார்கள் என்று சுதாரித்துக்கொண்டு பைக்கை நிறுத்தி விட்டு சைடு கண்ணாடியை பார்த்தான் காரும் நின்றது,பின்னர் வினய் பைக்கை விட்டு இறங்கி பின்னால் இருக்கும் காரை நோக்கி நடந்தான்.
வினய் அந்த காரை நோக்கி நடக்கையில் யாராக இருக்கும் என்னை எதற்கு பின் தொடர்கிறார்கள் என்ற குழப்பத்துடன் சென்றான். பின் ஒரு வேலை அவனது ஆட்களாக இருக்குமோ என்று உமாவிற்கு போன் போட்டு பிரச்சனை கொடுத்த சதீஸ் சொன்ன வார்த்தையை நினைவு கூர்ந்தான், என்மேலேயே கம்பளைண்ட் கொடுக்க வச்சுட்டேல உன்னை சும்மா விடமாட்டேனு சொன்ன வார்த்தை அவனுக்கு நியாபகம் வந்தது.
காரை நெருங்கி விட்டான் ஜன்னல் கண்ணாடி திறந்ததும், ஹே என்று வினய் கையை ஓங்கி அடிக்க முயல காருக்குள் இருந்தவன் முகம் சற்று பயத்துடன் வியர்த்து கொட்டியது.
வினய் ஓங்கிய கையை நிறுத்தினான், அவனுக்கு அந்த முகம் எங்கோ பார்த்த நியாபகம் யாரென்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு நினைவுக்கு வரவில்லை. பின்னர் அந்த நபர் காரில் இருந்து இறங்கி வினய் உங்கள் கோபம் நியாயமானது தான் உங்களை பின் தொடர்ந்து வந்ததால் கோபமா இருக்கீங்க, ஆனால் உங்களால ஒரு வேலை ஆகணும் அதான் உங்களை பின் தொடர்ந்தேன் என்றான்.
வினய்க்கு ஒன்றும் புரியவில்லை யார் நீங்கள், என்னால உங்களுக்கு என்ன வேலை ஆகணும் என்றான் குழப்பமாக. நான் மாதவன் சார் அனுப்பின ஆளு வரதராஜன் கிட்ட பேச வந்தப்போ உங்களை பார்த்தேன், அப்போதான் நீங்க அவர்கிட்ட ஜூனியரா சேர்ந்துருக்கீங்கனு தெரிய வந்தது என்றான்.
இப்போது வினய்க்கு நியாபகம் வந்தது. சரி அதுக்கு என்ன என்று வினய் கேட்க, வரதராஜன் கிட்ட இருக்குற முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எங்களுக்கு நீங்க எடுத்துட்டு வந்து கொடுக்கணும் அப்படி கொடுத்தா உங்களை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிப்போம் என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கையில், வினய் குறுக்கிட்டு உங்களை மாதிரி ஏமாத்தி பிழைக்குறவங்களுக்கு நான் என்னைக்குமே உதவ மாட்டேன் நீங்க கோர்ட்ல பார்த்துக்கோங்க என்று வினய் இடத்தை விட்டு நகர முற்பட்டான்.
அப்போது அந்த நபர் சத்தமாக சிரித்து விட்டு இந்த மாதிரி எத்தனை பேர பார்த்திருப்போம், சரி யோசிச்சிட்டு சொல்லுங்க என் பெயர் ஜெகன் என்று சொல்லி அவனுடைய கார்டை வினய் சட்டைப்பைக்குள் திணித்துவிட்டு, இதுல என் நம்பர் இருக்கு நல்லா யோசிச்சுட்டு எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு காரில் பறந்து விட்டான்.
வினய் கடும் கோபத்துடன் பைக்கில் ஏறி வீட்டுக்கு சென்றான். அம்மா எனக்கு குடிக்க தண்ணீர் கொடுங்க என்று வினய் கேட்டான் வீட்டுக்குள் நுழைந்ததும், வாணி கையில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள் வினய் வேகவேகமா குடித்து முடித்தான்.
என்னப்பா ரெம்ப களைப்பா இருக்கே உன் முகம், ரெம்ப வேலையா என்று கேட்டாள் வாணி. இல்லமா நான் சும்மா போய் உக்காந்துட்டு வரேன் இதுல என்ன களைப்பு வெயில்ல வந்ததுல முகம் வாடியிருக்கு அவ்வளவு தான் என்றான் வினய்.
சரி சாப்பிட்டு தூங்கு சரியா போயிரும் என்றாள் வாணி. இல்லமா அப்புறம் சாப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.
அப்போது அனிதாவிடம் இருந்து போன் வந்தது, அய்யோ அப்புறமா கால் பன்றேன்னு சொன்னோமே மறந்துட்டோமே என்று, பதட்டத்துடன் போனை எடுத்து ஹலோ என்றான். ஹே வினய் நான் நினைச்சு கூட பார்க்கல இப்படி ஒரு சர்பிரைஸ் கொடுப்பேனு என்று அனிதா சொல்ல, வினய் ஒன்றும் புரியாமல் என்ன சர்பிரைஸா என்று கேட்க, உனக்கு எப்பவும் விளையாட்டு தான் நீ அனுப்புனா ஃகிப்ட் எனக்கு வந்துருச்சு கேமரா சூப்பரா இருக்கு, விலை ரெம்ப அதிகமா இருக்கும் போலயே தேங்க் யூ ஓ இதுக்குத்தான் அப்போ நான் கால் பண்ணும் போது அப்புறமா பேசுறேன்னு சொன்னியா என்று அனிதா சொல்ல, வினய் குழப்பத்தின் உச்சிக்கே போனான்.
அனிதா நீ என்ன சொல்றேனே புரியல அப்போ நான் பைக்ல வந்தப்போ கார்ல யாரோ பின்தொடர்ந்த மாதிரி இருந்துச்சு அதான் யாருனு பார்க்கறதுக்கு அப்புறமா போன் பன்றேன்னு சொல்லி வச்சுட்டேன் என்றான் வினய்.
என்ன யாரோ கார்ல துரத்திட்டு வந்தாங்களா யாரு என்று அனிதா கேட்க, அது ஒரு கேஸ் விஷயமா ஒரு ஆளு என்னை விலைக்கு வாங்க வந்திருக்காரு என்று முழுவதையும் சொன்னான் வினய். என்ன வினய் இது பெரிய இடத்து சமாச்சாரமா இருக்கும் போல பின்னாடி எதுவும் பிரச்சனை வருமோ என்று அனிதா சொல்ல, வினய் சிரித்துக்கொண்டே பிரச்சனையா நான் விரும்பின ஜர்னலிஸ்ட் வேலையில இல்லாத பிரச்சனையா வரப்போகுது. ஆனால் பரவாயில்லை இந்த வேலையும் எனக்கு பிடிச்சுருக்கு இந்த மாதிரி த்ரில்லிங்கா இருந்தா தான் எனக்கும் பிடிக்கும் என்றான் வினய்.
சரி ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ என்றாள் அனிதா. சரி என்றான் வினய். அனிதா என்ற குரல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வர சரி வினய் எனக்கு ஷூட்டிங் நேரமாயிடுச்சு நான் அப்புறம் பண்றேன் என்று சொல்லிவிட்டு டயலாக் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தாள்.
ஷூட்டிங் முடிய இரவு 10 மணி ஆகிவிட்டது ஹோட்டல் அறைக்கு வந்து சுடுதண்ணீரில் குளித்து முடித்து விட்டு வந்து படுக்கையில் வந்து படுத்தாள் அனிதா மிகவும் களைப்புடன் இருந்தவள் தூங்கி போனாள்.
தேடல் தொடரும்.....
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment