தேடல் 8
பகுதி 8
திருடன் உமாவை வேகமாக தள்ளி விட்டதில் நிலை குலைந்து மயங்கி விழுந்தாள். அப்போது ரஞ்சித் அந்த இடத்தை வந்தடைந்தான் ஒரே கூட்டமா இருக்கே என்ன நடந்தது என்று ஒருவரிடம் கேட்க அவர் நடந்தவற்றை கூறிக்கொண்டு இந்த பொண்ணு தான் அவனை பிடிச்சு கத்துச்சு அவன் தள்ளி விட்டதில் மயக்கம் ஆயிருச்சுனு சொல்லும் போதே யாரென்று பார்த்தான் ரஞ்சித். தள்ளுங்க தள்ளுங்க என்று பார்க்கையில் மயக்கமாகி கிடந்தாள் உமா. ரஞ்சித் உமா என்று தெரிந்ததும் தள்ளுங்க தள்ளுங்க தண்ணீர் கொண்டு வாங்க விலகி நில்லுங்க காற்று வரட்டும்னு சொல்லி கூட்டத்தை கலைத்தான்.
உமாவிற்கு தலையில் லேசான காயம் உடனே ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றான் ரஞ்சித். ஸ்டேஷன்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறி அந்த திருடனை பற்றிய தகவலை கூறினான்.
டாக்டர் வெளியே வந்து ஒன்னும் பிரச்சனை இல்லை சின்ன காயம் தான், வெடுக்குனு தள்ளி விட்ட அதிர்ச்சியில மயக்கம் அவ்வளவு தான் நீங்க போய் பார்க்கலாம்னு சொல்லி விட்டு டாக்டர் நகர்ந்தார்.
ரஞ்சித் உள்ளே சென்றான், உமா கண் விழித்து சார் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் எங்க ஆபீஸ்ல ஆறு பொண்ணுங்களும் சதீஸ் மேல கம்பளைண்ட் கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க அதை உங்ககிட்ட நேர்ல சொல்லத்தான் வந்தேன் என்று அவள் அடிபட்டதை கூட கவலை படாமல் படபடவென சொல்லி முடித்தாள்.
ரஞ்சித் சிரித்துக் கொண்டே அது சரி இப்போ உங்களுக்கு என்ன நடந்துச்சு தெரியுமா என்றான். ஆங் தெரியும் திருடன் தள்ளி விட்டு ஓடிட்டான் நான் மயங்கிட்டேன் நீங்க தான் காக்க காக்க சூர்யா மாதிரி வந்து காப்பாத்திடீங்க என்றாள் சிறுபிள்ளைத்தனமாக. என்ன இது இவ்வளவு நடந்துருக்கு சிறு பிள்ளைத்தனமா இருக்காளே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில் ரஞ்சித்திற்கு போன் வந்தது சார் அந்த திருடனை பிடிச்சாச்சு ஸ்டேஷன்ல தான் இருக்கான் என்று கான்ஸ்டபில் சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
சரி நான் டாக்டரை பார்த்துட்டு வரேன் என்று சொல்லி ரஞ்சித் நகர்கையில் சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க மதியம் சாப்பிட்டது ஜூஸ் கடையில ஆர்டர் பண்ண ஜூஸ் கூட குடிக்கல எப்போ போகலாம்னு டாக்டர் கிட்ட கேட்குறீங்களா சார், ரெம்ப பசிக்குது என்றாள் உமா.
ரஞ்சித் சிரித்துக்கொண்டே சரி என்றான், அவனுக்கு உமாவின் வெகுளித்தனம் மிகவும் பிடித்து இருந்தது. அவன் கதவருகே சென்றான், அதற்குள் ஒரு நர்ஸ் வந்து நீங்க கிளம்பலாம் டாக்டர் எதுவும் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டாங்க என்றாள்.
ரஞ்சித்தும், உமாவும் ஹோட்டலுக்கு சென்றனர். ஆர்டர் பண்ணி விட்டு காத்திருந்தனர். சரி உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிருங்க இந்த விஷயத்தை என்று உமா ஹாண்ட் பேக்கை அவளிடம் கொடுத்தான். அய்யயோ வேண்டாம் அவுங்க பயப்படுவாங்க என்ன மாதிரி தைரியசாலி இல்ல என்றாள் உமா.
ரஞ்சித் சிரித்துக்கொண்டே ஆமா ஆமா உங்க அளவுக்கு யாரும் தைரியசாலி இல்லை என்றான். சரி உங்க நெத்தில காயம் இருக்கே வீட்ல கேட்ட என்ன சொல்வீங்க என்றான் ரஞ்சித். அது எங்கயாவது இடிச்சிகிட்டேன் சொல்லி சமாளிச்சுக்கலாம் என்று சொல்லும் போது சாப்பாடு வந்து விட்டது.
சரி ஏதோ முக்கியமான விஷயம் பேச வர சொன்னேங்களே என்ன என்று ரஞ்சித் கேட்கும் போதே உமா குறுக்கிட்டு, சார் சாப்பாடு வந்துருச்சு சாப்பிட்டு பேசலாமே என்று பதிலுக்கு காத்திராமல் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். ரஞ்சித் அவளது வெகுளித்தனத்தை வியப்பாக பார்த்து கொண்டிருந்தான். சார் நீங்களும் சாப்பிடுங்க எனக்கு இரண்டு பிளேட் பிரியாணி போதும் இட்லி என்னால சாப்பிட முடியாது என்று வாயில் பிரியாணியை அமுக்கி கொண்டே சொன்னாள் உமா.
ரஞ்சித் மெதுவா சாப்பிடுங்க சிக்கிக்க போகுது என்று சொல்லும் போதே தண்ணியை மடமடவென்று குடித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் உமா. இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
பின்னர் உமா ஆஃபிஸில் நடந்த அனைத்தையும் கூறினாள் இவை அனைத்தையும் கேட்டு பரவாயில்லையே அந்த பொண்ணுங்களும் தைரியமா கம்பளைண்ட் கொடுக்க வராங்க உங்க ஆஃபிஸும் உதவியா இருக்கேனு சொல்லி இருக்காங்க என்றான் ரஞ்சித்.
ஆமா எங்க மேனேஜர் ரெம்ப நல்லவர் என்றாள் உமா. சரி சரி நான் நாளைக்கு ஆபீஸ் வந்து பேசிட்டு என்ன பார்மாலிட்டினு சொல்றேன் என்றான் ரஞ்சித். சரி சார் நான் போய்ட்டு வரேன் என்று கிளம்பினாள் உமா. இருங்க நான் உங்கள வீட்டுல விட்டுட்டு போறேன் என்றான் ரஞ்சித். வேண்டாம் சார் நீங்க வந்து வீட்ல விட்டாலே ஏதோ பிரச்சனை நடந்துருக்குணு நினைச்சு பயப்படுவாங்க என்ன பத்தி கவலைப்படாதீங்க என்றாள் உமா. இல்ல பரவாயில்லை உங்க வீட்டுக்கு வரல மெயின் ரோட்லயே இறக்கி விட்டுட்டு கிளம்பிடுறேன் என்றான் ரஞ்சித்.
உமாவும் யோசித்து விட்டு சரி என்றாள். பின் இருவரும் காரில் சென்றனர் உமா இறங்கும் இடம் வந்ததும் இறக்கி விட்டு உமாவை பத்திரமாக வீட்டில் விட்ட நிம்மதியுடன் வீட்டுக்கு சென்றான் ரஞ்சித்.
வினய் வீட்டில் சோபாவில் அமர்ந்து கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தான். அம்மா வாணி வழக்கம் போல் டேப்லெட்டில் சமையல் ப்ரோக்ராம் பார்த்துக்கொண்டிருந்தாள். ஹே இந்த பொண்ணு என்னமா ப்ரோக்ராம் பண்ணுது அனிதாவை வீட்டுக்கு கூட்டிட்டு வா கூட்டிட்டு வா னு சொல்லிட்டே இருக்கேன் எப்போ கூட்டிட்டு வர போற என்று கேட்டாள் வாணி.
ஒரு நாள் கூட்டிட்டு வரேன் அவளும் இப்போ ரெம்ப பிஸி என்றான் வினய். அதுவும் சரி தான் அவ ப்ரோக்ராம் தான் ரெம்ப சூப்பரா போய்கிட்டு இருக்கு சீரியல்லாம் இப்போ யார் பார்த்துட்டு இருக்கா என்று வாணி சொல்லி கொண்டே வீடியோ கால் போட்டு கொடுடா அனிதாவுக்கு அதுலயாச்சும் பார்த்து பேசிக்குறேன் என்று சொல்லும் போதே சீனிவாசன் கார் சத்தம் கேட்டது சீனிவாசன் உள்ளே நுழைந்தார்.
என்ன வினய் வரதராஜன் என்ன சொல்லறாரு என்று கேட்டார் சீனிவாசன். ஹ்ம் ஒரு கேஸ் பைலை கொடுத்திருக்கார் படிச்சுட்டு இருக்கேன் அதுக்கு பிறகு எப்படி கேஸ் பத்தின தகவல் சேகரிக்கணும்னு சொல்றேன்னு சொல்லி இருக்காரு என்றான் வினய்.
சரி நல்லது என்று சொல்லும் போதே சாப்பிட வாங்க என்றாள் வாணி இல்ல நான் வெளிய சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா என்றார் சீனிவாசன். இருவரும் சாப்பிட்டோம் என ஒரு சேர தலையாட்ட சரி என்று அவர் அறைக்கு நகர்ந்தார்.
அவர் அறைக்கு சென்றதும் வாணி அனிதாவிற்கு வீடியோ கால் போட்டு குடு என்று சொன்னாள், வினய் அனிதாவிற்கு வீடியோ கால் செய்தான். அனிதா எடுத்து ஹலோ சொல்லும் போது வாணி அருகில் இருந்ததும் கொஞ்சம் அதிர்ச்சி ஆனாள். என்ன அனிதா எப்படி இருக்க உன் ப்ரோக்ராம் ஒன்னு விடாம பார்த்துருவேன் என்று படபடவென பேசினாள் வாணி. தேங்க்ஸ் ஆண்ட்டி என்றாள் அனிதா.
அனிதா நீ ஒரு நாள் வீட்டுக்கு வரணும் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் வாணி என்று சீனிவாசன் கூப்பிட இதோ வந்துட்டேனு சொல்லி கொண்டு அனிதாவிடம் விடை பெற்று மாடிக்கு சென்றாள் வாணி. வினய் டேப்லெட்டில் பேசிக்கொண்டே அவன் அறைக்கு சென்றான் அனிதாவும் வினயும் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் உறங்கி போனார்கள்.
காலை எழுந்து அனிதா கிளம்பும் போது போன் கால் வந்தது மேடம் இன்னைக்கு அவுட் டோர் ஷூட்டிங் 2 நாள் தேவைக்கு டிரஸ் எடுத்துக்கோங்க என்றான், எங்க என்று அனிதா கேட்கையில் ஊட்டி என்று சொல்லி வைத்து விட்டான் உதவி இயக்குனர். அனிதாவிற்கு சந்தோசம் தாங்க வில்லை ஆஹா சம்மர்ல ஊட்டிக்கு போன மாதிரி ஆச்சு என்று சொல்லி கிளம்ப தயாரானாள்.
வினய்க்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னாள் அனிதா. ஆஹா சூப்பர் சம்மர் ஊட்டில ஷூட்டிங் கலக்கு கலக்கு என்றான் வினய். ஹே நான் அதுக்கா கால் பண்ணேன் நீயும் வா ஊட்டிக்குனு சொல்லத்தான் கால் பண்ணேன் என்றாள் அனிதா.
அய்யோ வரதராஜன் முசுடு தெரியும்ல என்றான் வினய், அப்போ நீ வரலையா என்றாள் அனிதா சோகமாக. வினய் யோசித்து விட்டு இன்னைக்கு வியாழக்கிழமை இரண்டு நாள் தான ஷூட்டிங் வெள்ளிக்கிழமை ஷூட்டிங் முடியும் நீ கிளம்பி வராம அங்கேயே தங்கிரு, நான் வெள்ளிக்கிழமை நைட் கிளம்பி அங்க வந்துடுறேன் இரண்டு நாள் அங்க சுத்தி பார்த்துட்டு ஞாயிற்றுக்கிழமை நைட் கிளம்பிடுவோம் என்றான் வினய்.
ஹே சூப்பர் ஐடியா அப்போ உமாவையும் நீயே கூட்டிட்டு வந்துரு என்றாள் அனிதா. கண்டிப்பா உமாவையும் ராஜையும் கூட்டிட்டு வந்துடுறேன் நீ பத்திரமா போய்ட்டு வா அங்க போனதும் கால் பண்ணு என்றான் வினய் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினாள் அனிதா ஊட்டியில் நடக்க போகும் விபரீதம் எதுவும் தெரியாமல்.....
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment