Facebook page

தேடல் 9

பகுதி 9

அனிதா அவுட்டடோர் ஷூட்டிங்கிற்கு ஊட்டிக்கு கிளம்பி செல்கிறாள். வினய் வழக்கம் போல் எழுந்து வரதராஜன் வீட்டுக்கு செல்லத் தயாராகிறான். வினய் சாப்பிட வா என்று வாணி கூப்பிடும் சத்தம் கேட்கவே வினய் அவசரம் அவசரமாக கிளம்பி சென்றான், இட்லி சாம்பார் சட்னி தயாராக இருந்தது. வினய் அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு பைக்கை கிளப்பினான்.

வரதராஜன் அவர் இடத்தில் இல்லை, வினய் அவன் இடத்தில் அமர்ந்து அவர் கொடுத்த கேஸ் பைலை படித்துக்கொண்டிருந்தான். அப்போது வரதராஜன் வரவே வினய் எழுந்தான் நீ வா என்று வினயை அழைத்துக் கொண்டு அவர் இடத்துக்கு செல்கிறார்.

கேஸ் பத்தி முழுசா படிச்சுட்டியா என வரதராஜன் கேட்க, படிச்சுட்டேன் என வினய் சொல்கிறான். இந்த கேஸ் பத்தி என்ன நினைக்குற என்று வரதராஜன் கேட்க, இதுல என்ன இருக்கு அவுங்க இடத்தை குடுத்துட்டு பணம் வாங்கிட்டாங்க, மாதவன் அந்த இடத்துல இண்டஸ்ட்ரி கட்டப்போறாரு, இப்போ அவுங்க அந்த இடம் தங்களுக்கே வேணும்னு கேஸ் போட்ருக்காங்க. இதுல மாதவன் மேல தப்பு இருக்குறதா எனக்கு தெரியலையே என்று வினய் சொல்லி முடித்தான். 

வரதராஜன் சிரித்துவிட்டு ஒரு வழக்கறிஞர் மாதிரி யோசிக்கணும் அப்படினு சொல்லிட்டு வினய்க்கு புரியுற மாதிரி விளக்கி சொல்ல ஆரம்பிக்கிறார்.

வினய் இந்த கேஸ்ல அந்த நிலத்தோட உரிமையாளர்கள் யார் தெரியுமா என்று வரதராஜன் கேட்க, வினய் முழித்தான். அவுங்க எல்லாருமே விவசாயிங்க அவுங்க நிலத்தை அவுங்களுக்கு தெரியாமையே வாங்கி இப்போ அவுங்கள அந்த இடத்தை விட்டு விரட்டுறாங்க என்று வரதராஜன் சொல்ல, வினய் குறுக்கிட்டு அவுங்க கையெழுத்து போட்டு கொடுத்துருக்காங்களே என்றான். 

வரதராஜன் மீண்டும் சிரித்துவிட்டு தொடர்ந்தார், kk குரூப் ஆஃப் கம்பெனி ஆட்கள் வந்து அந்த விவசாயிங்க கிட்ட வந்து நாங்க அரசாங்கத்துல இருந்து வரோம் உங்களுக்கு கல்வீடு அரசாங்கமே இலவசமா கட்டி கொடுக்க போறாங்கன்னு சொல்லி ஏமாத்தி கையெழுத்து போட சொல்ல, இந்த விவசாயிகளுக்கு எழுத படிக்க தெரியாது சரி  கல்லுவீடு கட்டித்தரேனு சொல்றங்களேன்னு சந்தோஷத்துல எதையும் யோசிக்காம கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க இப்போ மாதவன் ஆட்கள் வந்து மிரட்டி இடத்தை காலி பண்ண சொன்னதும் விவரம் தெரிஞ்சு இங்க வந்துருக்காங்க என்று சொல்லி முடித்தார் வரதராஜன்.

வினய் அனைத்தையும் கேட்டு விட்டு யோசிக்க ஆரம்பித்தான். ஒரு வழக்குன்னு எடுத்துக்கிட்டா ஒரு வழக்கறிஞரா யோசிக்கணும் என்றார் வரதராஜன். வினய் தலையாட்டினான், சரி போ என்று சொல்லிவிட்டு அய்யாசாமி அய்யாசாமி என்று கூப்பிட ஆரம்பித்தார். 

வினய் அதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான் அதான் மாதவன் ஆட்கள் வந்து மிரட்டிட்டு போறாங்க, அவுங்க மேல் தப்பு இல்லாட்டி ஏன் மிரட்டுறாங்க என்று மனசுக்குள் குழப்பிக்கொண்டே இருந்தான்.

உமாவின் ஆஃபீசிற்கு ரஞ்சித் சென்று அனைவரிடமும் விசாரணையை ஆரம்பித்தான் அந்த பெண்களிடமும் கம்பளைண்ட் கொடுக்க சொல்லி விட்டு மேனேஜர் எங்கே என்று உமாவிடம் கேட்கிறார். வாங்க என்று மேனேஜர் அறைக்கு அழைத்து செல்கிறாள் உமா. சார் இவர் தான் ரஞ்சித் இன்ஸ்பெக்ட்டர் என்று அறிமுகப்படுத்துகிறாள். 

ரஞ்சித் அவரிடம் சார் நீங்க இவ்வளவு உறுதுணையா இருக்குறீங்க உங்க கம்பெனி பத்தி கவலையே படாம தைரியமா கம்பளைண்ட் கொடுக்க சொல்லி இருக்கீங்க ரெம்ப  சந்தோசம் சார் என்று ரஞ்சித் சொல்லி கொண்டிருக்க, எல்லாத்துக்கும் காரணமே உமா தான் என்று அவர் உமாவை கை காட்டினார்.

எங்க ஆபீஸ்ல இருக்குற பொண்ணுங்களுக்கு பாதிப்புனா நடவடிக்கை எடுத்து தான ஆகணும் என்று சொல்ல, உங்கள பார்த்ததுல ரெம்ப சந்தோசம் சார் என்று சொல்லிக்கொண்டு ரஞ்சித் கிளம்பினான். 

வினய் நேரம் ஆகிவிட்ட படியால் வரதராஜன் வீட்டில் இருந்து கிளம்பினான். பைக்கை எடுக்கும் போது உமா போன் செய்தாள். ஹலோ உமா என்று சொல்லத்தொடங்கும் முன்னே, நேற்று தனக்கு நடந்தவற்றை எல்லாம் மூச்சு விடாமல் சொன்னாள். வினய் அனைத்தையும் கேட்டு விட்டு திருடனா உனக்கு ஏதும் ஆகலைல என்று வினய் பதட்டமாக, இல்லடா எனக்கு எதுவும் ஆகல நெத்தில ஒரு சின்ன காயம் அப்புறம் மயங்கி விழுந்துட்டேன் ரஞ்சித் சார் தான் வந்து என்னை ஹாஸ்பிடலில் சேர்த்தார் என்றாள் உமா.

ஹாஸ்பிடல் வரை பிரச்சனை போயிருக்கு என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல என்றான் வினய். இல்ல ஒன்னும் பிரச்சனை இல்லை எல்லாம் சரி ஆகிடுச்சு உனக்கு தெரியாததா எனக்கு பிரச்சனைன்னு வந்தா உனக்கு தான முதல்ல போன் பண்ணுவேன் என்று சொன்னாள் உமா.

சரி ரெம்ப ரிஸ்க் எடுக்காத உமா என்றான் வினய். அதெல்லாம் ஒண்ணுமில்ல வினய் சரி அனிதா ஊட்டிக்கு போயிருக்கேன்னு சொன்னாளே என்று உமா கேட்க, ஆமா அவ ஷூட்டிங் ஊட்டில அதான் இன்னைக்கு போயிருக்கா நாம நாளைக்கு சாயந்திரம் கிளம்பி போறோம் ரெடியா இரு என்று வினய்  சொல்ல, உமாவிற்கு செம குஷி அப்பாடா இந்த சம்மருக்கு சூப்பர் இடம் ஊட்டி தான் நான் இப்பவே ரெடி என்றாள் உமா. சரி அப்போ நாளைக்கு ரெடியா இரு என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு கிளம்பினான்வினய்.

சிறிது தூரம் சென்றதும் செல்போன் ஒலித்தது. பைக்கை நிறுத்தி யாரென்று பார்க்கையில் அனிதா, ஹே அனிதா ஷூட்டிங் முடிஞ்சதா என்றான். ஆங் முடிஞ்சுருச்சு செம குளுரு நல்ல சீசன் அடுத்து லொகேஷன்க்கு போய்ட்டு இருக்கோம் அதான் உங்கிட்ட சொல்லலாம்னு கால் பண்ணேன். 

ம்ம் கொடுத்து வச்ச மகராசி ஊட்டில இருக்க என்று வினய் சிரித்துக்கொண்டே சொல்ல, ஹே நீங்க எப்போ வரீங்க என்று அனிதா கேட்கையில், வினய் பைக் சைடு கண்ணாடியை பார்த்து கொண்டே நாளைக்கு கிளம்பிடுவோம் என்று சொன்னான். பைக் கண்ணாடியை சரி செய்து கொண்டிருக்கையில் அப்போது தான் கவனித்தான் பின்னால் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சரி அனிதா நான் அப்புறமா கால் பன்றேன்னு சொல்லி வச்சுட்டு பைக்கை கிளப்பினான்.

அந்த கார் பின்னாடியே வினயை தொடர்ந்து வந்தது, வினய் பதட்டமாகி வேகமெடுத்தான். அந்த காரும் வேகமெடுக்க தொடங்கியது, நம்மை தான் யாரோ தொடர்ந்து வருகிறார்கள் என்று சுதாரித்துக்கொண்டு பைக்கை நிறுத்தி விட்டு சைடு கண்ணாடியை பார்த்தான் காரும் நின்றது,பின்னர் வினய் பைக்கை விட்டு இறங்கி   பின்னால் இருக்கும் காரை நோக்கி நடந்தான்.

தேடல் தொடரும்..... 

பாகா 

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10