தேடல் 11
பகுதி 11
அசதியிலும், குளிரிலும் தன்னை அறியாமல் தூங்கிய அனிதா கண் விழித்தாள். கடிகார முள் 7ல் நின்றிருந்தது, மணி 7 ஆயிடுச்சு என்ன குளிர் என்று போர்வைக்குள்ளேயே இருந்து புலம்பினாள். அப்போது தான் நியாபகம் வந்தது அவள் கண்ணுக்கு முன்னால் இருந்த கேமரா பற்றிய நினைப்பு. அவள் சற்று யோசிக்கத் துவங்கினாள், நேற்று வினய் கூறியதை நினைவு கூர்ந்தாள். என்ன கேமராவா நான் எதுவும் அனுப்பலையே என்ற வார்த்தை அவள் காதில் பலமுறை அலறலாய் ஒலித்து கொண்டே இருந்தது.
பின் அலைபேசி கூப்பிடவே சற்று அதிர்ந்து தான் போனாள். ஹலோ என்றாள் அனிதா, மறுமுனையில் அனிதா ஷூட்டிங் 9 மணிக்கு ரெடியா இருங்க என்றார் இயக்குனர். சரி சார் நான் கிளம்பி ரெடியா இருப்பேன் என்றாள் அனிதா, கால் துண்டிக்கப்பட்டது. ஆனால் அனிதாவின் மனதில் அந்த கேமரா பற்றிய நினைவுகளை துண்டிக்க முடியவில்லை.
வினய்க்கு கால் செய்தாள், பின்பு யோசித்தவளாய் வேண்டாம் வினயை எதற்கு குழப்ப வேண்டும் என்று ரிங் ஆவதற்கு முன்பே துண்டித்து விட்டாள். சரி கிளம்பலாம் என்று அனிதா கிளம்ப தயாரானாள்.
வினய் உமாவிற்கும், ராஜிற்கும் கான்பிரண்ஸ் கால் செய்தான், ஹலோ என்றாள் உமா, உமா நான் ராஜ்க்கு கால் போடுறேன் இரு என்று சொல்லி விட்டு கால் பண்ணினான், ஹலோ என ராஜ் சொல்ல மூவரும் போன் காலில் இணைந்தனர். வினய் பேச ஆரம்பித்தான் இன்னைக்கு சாயங்காலம் ஊட்டிக்கு போறோம் டிக்கெட் புக் பண்ணிட்டேன் ரெடியா இருங்க பஸ்ஸ்டாண்ட்க்கு சரியான டைம்க்கு வந்துடுங்க என்றான். நான் வந்துருவேன் அவனை வரச்சொல்லு என்றாள் உமா.
நானும் வந்துடுவேன் நீ திங்குறதுக்கு என்ன என்ன வேணுமோ ஒரு மூட்டைல எடுத்துட்டு வந்துரு இடையில எங்கயும் பஸ் நிக்காட்டி அப்புறம் உனக்கு தான் கஷ்டம் என்று ராஜ் உமாவை கிண்டல் செய்ய, ஓ இது ஜோக்கா சிரிப்பு வரலை நாளைக்கு சிரிக்குறேன் என்று உமா சொல்ல, நாளைக்கு கூட தனியா போய் சிரி யாராச்சும் பயந்துடுவாங்க என்று ராஜ் திரும்பி கலாய்க்க ஆரம்பித்தான்.
டேய் ராஜ் போதும் என்று உமா கத்த, ஐயோ உங்க சண்டையை இங்கயே ஆரம்பிச்சுடீங்களா விடுங்க நாளைக்கு ஊட்டில நேர்ல வந்து சண்டை போடுங்க என்று வினய் போனை வைத்து விட்டான்.
உமா ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள், திடீரென அவளுக்கு ஏதாவது கொறிக்க வேண்டும் போல் இருந்தது வழக்கம் போல எழுந்து கேன்டீன் நோக்கி நகர ஆரம்பித்தாள், அனைவரும் உமாவை பார்த்து என்ன சமோசாவா இல்ல சிப்ஸா என்று ஒரு சேர கத்தி கிண்டல் செய்தனர்.
போங்கப்பா உங்களுக்கு வேற வேலை இல்ல என்று சொல்லி விறுவிறுவென கேன்டீனுக்குள் நுழைந்தாள். வாம்மா உமா என்ன வேணும் என பாய் கேட்டார். பாய் சமோசா இருக்கா என்று உமா கேட்டாள். இல்லையே காலையில சுட்ட வடை தான் இருக்கு வேணுமா என்றார், உமா முகத்தை சுளித்து கொண்டு வேண்டாம் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் மாலுக்கு சென்றாள்.
அங்கு ஸ்னாக்ஸ் கப் என்ற கடை அவளை ஈர்த்தது உள்ளே நுழைந்தாள் மெனு கார்டை எடுத்து ஆர்டர் செய்தாள். சமோசா, மாமூஸ் டீ என ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தாள். உமா எப்போதும் சாப்பிட ஆரம்பித்தால் இந்த உலகத்தையே மறந்து விடுவாள்.
உமா சாப்பிட்டு கொண்டிருக்கையில் ரஞ்சித் மற்றும் அவன் நண்பனும் இருந்த டேபிளை அவள் கவனிக்கவில்லை, பின் ரஞ்சித் கவனித்துவிட்டு நண்பனிடம் இரு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு உமாவின் டேபிளுக்கு சென்றான். ஹலோ மேடம் டீயா வச்சுட்டு போங்க என்றாள் ரஞ்சித்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஹலோ உமா என்று சொல்ல, சாப்பிட்டு கொண்டிருந்தவள் யார்டா இது இவனுக்கு எப்படி நம்ம பெயர் தெரியும் என்று நிமிர்ந்து பார்க்க, அய்யயோ ரஞ்சித் சார் சாரி நான் சாப்பிட்டு இருந்தேனா அதான் கவனிக்கல என்றாள் உமா.
வாங்க சார் உட்காருங்க என்றாள் உமா. என்ன சாப்பிடுறீங்க என்றாள், ஒன்னும் வேண்டாம் நானும் என் நண்பனும் இங்க வந்தோம் அப்போ உங்களை பார்த்தேன் அதான் பேசிட்டு போலாம்னு வந்தேன் என்றான் ரஞ்சித். அவன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உமா சாப்பிட்டுக்கொண்டு கேட்டு கொண்டிருந்தாள்.
நீங்க சாப்பிடுறத பார்க்கும் போதே ரெம்ப சந்தோசமா இருக்கு, எங்க அம்மா சொல்லுவாங்க சாப்பிடுற விசயத்துல கூச்சப்படவே கூடாதுனு என்றான் ரஞ்சித். உமா சற்று நிமிர்ந்து ஆமா சரியாத்தான் சொல்லியிருக்காங்க, நாம வாழுறதே சாப்பிட தான் நாம சம்பாதிக்குறது சாப்பிடத்தான, இப்போ பாருங்க நான் வரும் போது எங்க ஆபீஸ்ல எல்லாரும் என்னை கிண்டல் பண்ணாங்க ஆனால் வீட்ல போய் கட்டு கட்டுன்னு பொளந்து கட்டுவாங்க சாப்பாட்டை என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அவளுடன் ரஞ்சித்தும் சேர்ந்து ஆமா என்று சிரித்தான். அவ்ளோ ஏன் சார் நீங்களே கூட அப்படி இருக்கலாம் என்று சொல்லி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். ரஞ்சித் சிரித்து கொண்டிருந்தவன் முகம் அசடு வழிய தொடங்கியது.
சும்மா சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க என்றாள். ஐயோ டைம் 3 ஆயிடுச்சு ஆபீஸ்ல இன்னும் முடிக்காத நிறைய வேலை இருக்கு இன்னைக்கு நாங்க ஊட்டிக்கு வேற போறோம் சீக்கிரமா எல்லா வேலையையும் முடிச்சுட்டு கிளம்பனும் என்றாள் உமா.
ஊட்டியா சம்மர் டூரா என்றான் ரஞ்சித், அப்படியும் சொல்லலாம் என்றாள் உமா. சரி நான் கிளம்புறேன் சார் பை என்று கிளம்பினாள் உமா.
ரஞ்சித் நண்பன் அவனிடம் வந்து யார் இந்தப்பொண்ணு இவ்ளோ துறுதுறுனு இருக்கு என்றான். தெரிஞ்ச பொண்ணு என்றான் ரஞ்சித். நீ எந்த பொண்ணு கூடவும் இப்படி வழிய மாட்டியே என்னடா என்னாச்சு என்று சிரித்து கொண்டே கேட்டான், அதெல்லாம் ஒன்னுமில்லடா என்று சொல்லி கிளம்பினர்.
மணி 7 மூவரும் பஸ்ஸ்டாண்ட் வந்தடைந்தனர். பஸ் வந்தது அவரவர் சீட்டில் அமர்ந்தனர். எனக்கு ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் ஒரு தண்ணீர் பாட்டிலும் வாங்கிட்டு வரியா வினய் என்றாள் உமா. சரி என்று இறங்கி வாங்க சென்றான்.
உமா பின்னால் திரும்பி ராஜ் பார்க்கிறானா என பார்த்தாள், அவன் அங்கு இல்லை அப்பாடா அவன் கேட்கல இல்லாட்டி என்னை கிண்டல் பண்ணிட்டே இருப்பான் என்று நினைத்து கொண்டே முன்னாடி திரும்பினாள். ராஜ் முன்னாடி நின்று கொண்டு தின்னிப்பண்டாரம் என்று சொல்லி சிரிச்சுகிட்டே அவன் சீட்டிற்கு போனான். ச்சே போடா என்று உமா முணுமுணுத்தாள்.
வினய் உமாவிடம் சிப்ஸ், தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியாக கொடுத்தான். வேற எதுவும் வேண்டுமா என்றான் இல்லை என்றாள் உமா. பின் வினய் செல்போன் ஒலித்தது அனிதா என்று இருந்தது. ஹலோ அனிதா பஸ் ஏறிட்டோம் கிளம்ப போகுது என்றான் வினய். ஓ அப்படியா சரி வாங்க வினய் உங்கிட்ட நிறைய பேசணும் நேர்ல என்றாள் அனிதா. என்ன விஷயம் என்றான் வினய், நீ நேர்ல வா அப்புறம் பேசலாம் என்று சொல்லும்போதே அனிதா பஸ் கிளம்புது நான் வந்து பேசுறேன் என்றான் வினய், சரி பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் அனிதா.
அனிதாவிற்கு குழப்பம் கேமரா அனுப்பியது யாராக இருக்கும் என்று வினயிடம் நேரில் இந்த விஷயத்தை பற்றி பேசுவோம் என்று தூங்கிபோனாள். பஸ் ஊட்டியை வந்தடைந்தது நேரம் சரியாக 6 வினய் அனிதாவிற்கு கால் பண்ணி சொல்லிவிட்டான் ஊட்டிக்கு வந்தடைந்ததை, அனிதா ஹோட்டலுக்கு வழி சொல்லிவிட்டு திரும்ப தூங்க முயன்றாள். ரூம் பெல் அடித்தது யாரு அதுக்குள்ள வினய் வந்துட்டான்னா என்று கதவை திறந்தாள்.
ஹோட்டல் பணியாள் கையில் பூங்கொத்தை வைத்துக்கொண்டு நின்றான். மேடம் இது உங்களுக்கு என்று நீட்டினான் அனிதா முழித்தாள் யார் கொடுத்தது ஒரு வேலை வினய் தான் இப்படி கொடுக்கிறான் என்று சந்தோஷத்தில் வாங்கினாள், இவர் தான் கொடுத்தது என்று அவரை கை காமிக்க தூரமாய் ஒரு உருவம் ஹாய் அனிதா என்றது, அருகில் வர வர அனிதாவிற்கு தூக்கி வாரி போட்டது அது வேறு யாருமல்ல வருண்.......!
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment