Posts

Showing posts from March, 2017

Facebook page

தேடல் 4

பகுதி 4  அனிதாவிற்கு சுரேஷிடம் இருந்து போன் வர சினிமா ஹாலுக்கு வெளியே வந்து ஷூட்டிங் விவரம் பேசிக்கொண்டிருக்கையில், உங்களுக்கு தான் சார் நன்றி சொல்லணும் என்றாள் அனிதா. எனக்கெதுக்கு நன்றி அவருக்கு தான் நன்றி சொல்லணும் என்று சுரேஷ் சொல்லும் போது, அனிதா குழம்பி அவரா யாரு என்று கேட்டாள். சுரேஷ் சற்று யோசித்து விட்டு அய்யோ சாரி இன்னும் அவருக்கே சொல்லல நீங்க செலக்ட் ஆனது பத்தி, அதான் உங்ககிட்ட இத பத்தி பேசல போல அவர் என்று சொல்லி முடித்தான் சுரேஷ். சார் முதல்ல இந்த அவர் யாருனு சொல்லுங்க எனக்கு ரெம்ப குழப்பமா இருக்கு என்றாள் அனிதா சற்று பதட்டத்துடன். உங்க  ஃ பிரென்ட் வினய் தான் உங்களை பத்தி நேத்து சொன்னார், அப்போ தான் எங்க டிவி சேனல்ல நாளைக்கு இன்டெர்வியூ அப்டினு சொன்னாங்க அதான் உடனே லேட் நைட்னு பார்க்காம உங்ககிட்ட கால் பண்ணி இன்டெர்வியூக்கு வர சொன்னேன் என்றான் சுரேஷ். அனிதா அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள், ஆனால் இன்டெர்வியூனு கால் பண்ணி  சொன்னது மட்டும் தான் என் வேலை மத்தபடி உங்களுக்கு சிபாரிசு பண்ணல, உங்க திறமையை பார்த்து தான் செலக்ட் பண்ணிருக்காங்கனு ச...

தேடல் 3

பகுதி 3 அனிதா தூங்கப்போகும் பொழுது செல்போன் சிணுங்கியது. வினய் இருக்குமோ என்ற சந்தோசத்தில், ஹலோ என்கிறாள் எதிர் முனையில் அனிதாவா என்று ஒரு குரல் , ஆமா அனிதா தான் சொல்லுங்க யாரு? நான் சுரேஷ் மதுரை டிவி சேனல்ல வேலை பார்க்குறேன். நீங்க மீடியால வேலை பார்க்க முயற்சி பண்றதா உங்க பிரெண்ட் சொன்னாங்க. ஆமா சார் நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நிறைய பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்றாள் அனிதா. நாளைக்கு மதுரை டிவி சேனல்ல ஒரு இன்டெர்வியூ இருக்கு ஒரு பொண்ணு தான் தேடிட்டு இருக்காங்க, சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கணும், உங்களுக்கு பிடிச்சிருந்தா நாளைக்கு இன்டெர்வியூ வர முடியுமா. கண்டிப்பா வரேன் சார் என்றாள் அனிதா. சாரி இந்த நேரத்துல சொன்னதுக்கு, காலையில சொல்லணும்னு நினச்சேன் ஆனால் வேலையில அப்படியே மறந்துட்டேன்  இப்போதான் நியாபகம் வந்தது, காலையில 9 மணிக்கு வந்துருங்க என்றான் சுரேஷ். பரவாயில்லை சார் நாளைக்கு கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்லி விட்டு தூங்கி விட்டாள் அனிதா.  காலை விடிந்தது அனிதா எழுந்து கிளம்ப ஆயத்தமானாள். செல்போனை பார்த்தாள் ஏதோ ஒரு நம்பரி...

தேடல் 2

பகுதி 2  உமா மாலில் காத்துக்கொண்டிருக்கிறாள், வினயும் ராஜும்  வரலையே என்னதான் பண்ணுறானுங்க ஒரு பொண்ணு நானே வந்துட்டேன், இவ்ளோ நேரமா வரதுக்கு இவனுங்க பொண்டாட்டி என்ன பாடு பட போறாங்களோ பாவம் என்று புலம்பிக் கொண்டிருக்கையில், செல் போன்  சினுங்க ஆரம்பித்தது. யாரென்று பார்க்கையில் ராஜ், என்னடா வந்துட்டீங்களா நான் மாலுக்குள்ள வந்து பத்து நிமிஷம் ஆச்சு எங்கடா  இருக்கீங்க என்று உமா கேட்க, என்னது பத்து நிமிஷமா சும்மா பத்து செகன்டுக்கே கத்துவா இப்போ பத்து நிமிசமா இவகிட்ட இப்போ நான் பேசுனேன் செத்தேன் என்று மனதுக்குள் நினைத்த ராஜ் சரி வினய்கிட்ட கொடுத்துடுவோம் என்று வினயிடம் கொடுத்து விட்டான். வினய் என்னடா என்கிட்ட தர என்று கேட்க , நீயே பேசுப்பா அவ வந்து பத்து நிமிஷம் ஆச்சாம் பேசு என்று ராஜ் சொல்ல, வினய் காதில் வைக்க ஹலோ ஹலோ என்று உமா கத்திக்கொண்டே இருந்தாள்.வினய் உமா என்று பேச ஆரம்பிக்க, டேய் என்னடா பண்றீங்க இவ்ளோ நேரம் கத்திகிட்டே இருக்கேன் போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க என்று உமா கோபமாக கேட்டாள். இல்ல உமா வந்துட்டு இருக்கோம் இங்க கொஞ்சம் டிராபிக் ஜாம் ஆகிடுச...

தேடல் 1

இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே  பகுதி 1 சில்லென்று வீசும் காற்று மெல்லென வெளிவரும் சூரியக்கதிர்களின் வெப்பம்  பெற்று கரையும் புல்வெளியின் மேல் உள்ள பனித்துளி. இதமான அதிகாலை நேரம், காலை அமைதியின் நடுவில் கோவில் மணி சத்தம் கேட்டு கோபுரத்தில் இருந்து படபடவென பறக்கும் புறாக்கூட்டம், தெருமுனை பிள்ளையார் கோவிலில் சிதறும் தேங்காய். வானில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் நான்கு புற கோபுரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகோ அழகு.எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் இரவையே பகலாக்கும்,எந்நேரமும் போய் கேட்டாலும் உணவு தரும் சிறு கடைகள், எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் வடை,பஜ்ஜி கடைகள் இப்படியான தூங்காநகரமான மதுரை தான் நம் கதை களம். வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஒரு வாலிபன் இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான். அதிகாலை பொழுதில் இதை எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா, தூங்க கூட நேரமில்லாமல் செல்போனில்  பேசிக்கொண்டு நம்மை அறியாமல் தூங்கி போகிறோம். அவசரம் அவசரமாக தூங்கி எழுந்து வெந்ததும் வேகாததையும் சமைத்து கொடுத்து நாமும் சாப்பிட...