Facebook page

தேடல் 4

பகுதி 4 

அனிதாவிற்கு சுரேஷிடம் இருந்து போன் வர சினிமா ஹாலுக்கு வெளியே வந்து ஷூட்டிங் விவரம் பேசிக்கொண்டிருக்கையில், உங்களுக்கு தான் சார் நன்றி சொல்லணும் என்றாள் அனிதா. எனக்கெதுக்கு நன்றி அவருக்கு தான் நன்றி சொல்லணும் என்று சுரேஷ் சொல்லும் போது, அனிதா குழம்பி அவரா யாரு என்று கேட்டாள். சுரேஷ் சற்று யோசித்து விட்டு அய்யோ சாரி இன்னும் அவருக்கே சொல்லல நீங்க செலக்ட் ஆனது பத்தி, அதான் உங்ககிட்ட இத பத்தி பேசல போல அவர் என்று சொல்லி முடித்தான் சுரேஷ். சார் முதல்ல இந்த அவர் யாருனு சொல்லுங்க எனக்கு ரெம்ப குழப்பமா இருக்கு என்றாள் அனிதா சற்று பதட்டத்துடன். உங்க பிரென்ட் வினய் தான் உங்களை பத்தி நேத்து சொன்னார், அப்போ தான் எங்க டிவி சேனல்ல நாளைக்கு இன்டெர்வியூ அப்டினு சொன்னாங்க அதான் உடனே லேட் நைட்னு பார்க்காம உங்ககிட்ட கால் பண்ணி இன்டெர்வியூக்கு வர சொன்னேன் என்றான் சுரேஷ். அனிதா அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள், ஆனால் இன்டெர்வியூனு கால் பண்ணி சொன்னது மட்டும் தான் என் வேலை மத்தபடி உங்களுக்கு சிபாரிசு பண்ணல, உங்க திறமையை பார்த்து தான் செலக்ட் பண்ணிருக்காங்கனு சொல்லி முடித்தான் சுரேஷ். அப்படியா சரி ஷூட்டிங்கு சரியான நேரத்துல வந்துருவேன் தேங்க் யூ சார்னு சொல்லி போனை வைத்து விட்டாள்.


அனிதா பல யோசனையுடன் மீண்டும் சினிமா ஹாலுக்குள் நுழைந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள், ஆனால் ஏதோ ஒரு குழப்பம் இருந்தது அவள் மனதுக்குள். வினய் தான் இந்த வேலை கிடைக்க உதவி செய்திருக்காரா என்று ஒரு சந்தோச குழப்பத்தில் இருந்தாள். அருகில் உமா என்னடி யாரு போன்ல என்று கேட்க, இல்ல ஷூட்டிங் பத்தி விவரம் சொல்ல போன் பண்ணாங்க அப்படினு அனிதா சொல்ல, அதுக்கு ஏண்டி உன் முகம் ஏதோ குழப்பமா வச்சுருக்க என்றாள் உமா. அனிதாவின் பார்வை வினய் இருந்த இடத்தை நோக்கி சென்றது, ஆனால் அங்கு வினய் இல்லை என்ன இது வினய் இல்லையே என்று நினைத்து கொண்டிருக்கையில், ஹேய் என்னடி அனிதா நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ என்னன்னா எங்கேயே பார்த்து எதையோ  யோசிச்சுட்டு இருக்க என்றாள் உமா. இல்ல உமா எனக்கு தலை வலிக்குற மாதிரி இருக்கு நான் கொஞ்சம் காபி குடிச்சுட்டு வரவானு அனிதா கேட்க, அப்படியா சரி நானும் கூட வரவா என்று உமா கேட்டாள். இல்ல இல்ல நீ படம் பாரு நான் போய்ட்டு வந்துடுறேன் என்று சொன்னாள் அனிதா.

இல்ல இல்ல நீ தனியா போக வேண்டாம் வெளிய வினய் இருப்பான் இப்போ தான் கால் வந்துச்சுனு போனான், அவனையும் கூட்டிட்டு போ நான் சொன்னேன்னு சொல்லு என்றாள் உமா. ஓஹோ அதான் வினய் இங்க இல்லையோ என்று மனதில் யோசித்து கொண்டு சரி உமா போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வெளியே வந்தாள். வினய் எங்கு இருப்பார் என்று தேடிக்கொண்டிருக்கையில் காபி ஷாப் பக்கத்தில் நின்று போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான், இவள் அமைதியாக பின்னால் இருந்து பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். இல்ல சுரேஷ் எனக்கு தெரியாது இன்னைக்கு தான் இன்டெர்வியூ இருக்கும்னு தெரியாது, அனிதா வந்து வேலை கிடைச்சுருச்சுனு சொல்லும் போது தான் எனக்கே தெரியும் உங்க சேனல் தான்னு, என்று பேசிக்கொண்டிருந்தான் வினய்.


இதை கேட்டவுடன் அனிதா தெளிவானாள், அப்போ வினய் தான் சுரேஷ் கிட்ட சொல்லி இருக்கனும் ஆனால் அவருக்கே நாம சொல்லி தான் தெரிஞ்சுருக்கு என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள். வினய் பேசி முடித்து திரும்பியதும் அனிதா நின்றதை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியானான். 


ஆனாலும் வினய் தடுமாறாமல் அனிதா என்ன இங்க நிக்குறீங்க என்று கேட்க, தலை வலி அதான் காபி குடிக்க வந்தேன் என்று சொல்லும் போது, வினய் வாங்க சாப்பிடுவோம்னு சொல்லி போய் ஒரு டேபிளில் அமர்ந்தனர். இருவருமே அமைதியாக இருந்தனர். வினய்க்கு புரிந்து  போனது, சுரேஷ் பேசியது தான் அனிதாவின் அமைதிக்கு காரணமாக இருக்கும் என்று. வினய் பேச ஆரம்பித்தான் அனிதா நேத்து நான் தான் சுரேஷ் கிட்ட சொல்லி வச்சேன் ஆனால் இன்னைக்கே இன்டெர்வியூ வச்சு இவ்வளவு சீக்கிரம் வேலை கிடைக்கும்னு எனக்கு தெரியாது, என்னடா இவன் நேத்து தான் தெரியும் அதுக்குள்ள இவன் ஏன் நமக்கு வேலைக்கு உதவி பண்றானு என்னை பத்தி தப்ப நினைக்காதீங்க  என்றான் வினய். இல்ல நான் ஏதும் தப்பா நினைக்கல சுரேஷ் எல்லாமே தெளிவா சொன்னார் என்கிட்ட, நானும் முதல்ல யோசிச்சேன் ஏன் இவர் நம்மகிட்ட இத பத்தி சொல்லல காலையில கூட போன் பண்ணினாரே ஏன் சொல்லலைனு குழப்பத்தில இருந்தேன் ஆனால் சுரேஷ் கிட்ட இப்போ நீங்க பேசினதை கேட்டேன் தெளிவாயிடுச்சு என்றாள் அனிதா. சரி நீங்க என்னை தப்ப நினைச்சுக்காததே ரெம்ப சந்தோசம் என்று சொல்லி முடித்து காபியை இருவரும் குடித்து முடித்தனர்.


படமும் முடிந்து உமா,ராஜ் வெளியே வர என்னடி இப்போ தலை வலி எப்படி இருக்கு என்று கேட்டாள் உமா. பரவாயில்லை என்றாள் அனிதா, சரி  கிளம்புவோமா என்று சொல்லிக்கொண்டு எல்லாரும் கிளம்பினர். 


வினய் வீட்டுக்கு வந்தான், அவன் முகம் மிகவும் சந்தோசத்தில் இருந்தது. வாணியை கவனிக்காமல் வினய் ரூமிற்கு செல்ல முற்பட்டான். வாணி அதை கவனித்து விட்டு வினய் வந்து சாப்பிட்டுட்டு உன் ரூமுக்கு போ என்றாள்.  வினய் சுதாரித்து விட்டு அம்மா இல்லமா நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க என்று அருகில் வந்து அமர்ந்தான். என்னப்பா இன்னைக்கு ரெம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இருக்கு என்ன விஷயம் என்று வாணி கேட்டாள். இல்லமா படத்துக்கு போயிட்டு வந்தேன்ல அதான் என்று சமாளித்தான். டேய் இப்போ தான் நீ படத்துக்கு போறியா இல்ல உன்ன பத்தி எனக்கு தெரியாதா? என்ன அம்மாகிட்ட உண்மையா சொல்லு நானும் சந்தோசப்படுவேன் என்றாள் வாணி. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா என்று வினய் சொல்ல, வாணி குறுக்கிட்டு நேத்து ஒரு பொண்ணு பத்தி சொல்லிட்டு இருந்தியே பேரு கூட ஏதோ வனிதாவோ? வினிதாவோ? அந்த பொண்ணு வந்ததா என்று வாணி ஆர்வ மிகுதியில் கேட்டாள். 


வினய் ஆஹா அம்மாகிட்ட சமாளிக்க முடியாது என்று மனதுக்குள் யோசித்து விட்டு, ஆமாமா அந்த பொண்ணு வந்துச்சு நான்,உமா,ராஜ்  எல்லாரும் போனோம் என்றான். உமா, ராஜ் கதை எனக்கு தெரியுமே இந்த சரிதா கதையை சொல்லு என்றாள் வாணி. என்னது சரிதாவா என்று முழித்தான் வினய். அதாண்டா அந்த பொண்ணு என்று வாணி சொல்ல, அய்யோ அம்மா அது அனிதா என்றான் வினய். சரி சரி சொல்லு அந்த பொண்ணு கூட ஏதோ மீடியால வேலைக்கு ட்ரை பண்றதா சொன்னியே, உனக்கு தெரிஞ்ச பையன்கிட்ட கூட பேசுனியே நேத்து. ஆமா அம்மா அந்த பொண்ணுக்கு வேலை கிடைச்சுருச்சு, நேத்து பேசுனேன்ல அவன் தான் சேனல்ல கேட்டுட்டு ஏதோ வேலை இருக்குனு சொல்ல அந்த பொண்ணுக்கு நேத்தே போன் பண்ணி இன்டெர்வியூக்கு வர சொல்லி, அனிதாவும் இன்டெர்வியூ நல்ல பண்ணினதால செலக்ட் பண்ணிட்டாங்கனு சொல்லி முடித்தான் வினய்.


வாணி இதையெல்லாம் கேட்டு விட்டு பரவாயில்லையே நேத்து சொல்லி இன்னைக்கு வேலை கிடைச்சுருச்சு, என்ன தான் இன்டெர்வியூனு சொன்னாலும் செலக்ட் ஆனதா பார்க்கும் போது அந்த பொண்ணு திறமைசாலியா இருப்பா போல என்றாள். ஆமா ரெம்ப திறமைசாலி அழகு அறிவு எல்லாமே இருக்கு அந்த பொண்ணுகிட்ட என்று சொல்லும் போது, ஓஹோ அப்படியா இதுவரை நீ எந்த பொண்ணையும் இப்படி பாராட்டுனது இல்லையே என்ன விஷயம் என்றாள் வாணி நக்கலாக.ஐயோ அம்மா நீ நினைக்குற மாதிரி இல்லை திறமை எங்க இருக்கோ அத பாராட்டுறதுல தப்பா என்றான் வினய். என்னமோ நல்லது நடந்தா  சரி  என்று சொல்லி விட்டு எழுந்தாள் வாணி.


வினய் ரூமிற்கு போய் தூங்க போனான். அப்போது கவனித்தான் அனிதாவிடம் வாட்சப்பில் இருந்து மெசேஜ் குட்நைட் என்று வந்து இருந்தது. இவனும் மெசேஜ் செய்தான் உடனே அனிதாவிடம் இருந்து கால் வந்தது, ஹலோ என்றான் வினய் தூங்கலையா என்றாள் அனிதா, இல்லங்க இப்போதான் அம்மாவிடம் பேசி விட்டு வந்தேன் என்றான் வினய். நீங்கன்னு சொல்லி பேச வேண்டாம் நீ வா போனு பேசலாம் தப்பா எடுத்துக்க மாட்டேன் என்று சொன்னாள் அனிதா. 

அப்போ நீங்களும் என்னை, சாரி நீயும் என்னை அப்படியே கூப்பிடலாம் என்றான் வினய். சரி என்று இருவரும் பேசி கொண்டே தூங்கி போனார்கள்.  இவர்கள் போனில் மெசேஜ், கால் என்று இவர்கள் நட்பா காதலா என்று தெரியாமலே பழகினார்கள். இப்படியே நாட்கள் கடந்தது. 


ஒரு நாள் சீனிவாசன் வினயிடம் பேச வேண்டும் என்று சொல்லி கேட்கையில் என்னப்பா என்று வினய் கேட்டான். நீ உனக்கு பிடிச்ச வேலையை பாரு வேண்டாம்னு சொல்லல ஆனால் அப்படியே நீ ஜூனியரா போய் சேர்ந்துட்டே வேலை தேடு இதுல உனக்கு என்ன கஷ்டம் இருக்கு, நான் இப்போ கோபப்படாம தான் சொல்றேன் நல்ல யோசிச்சுக்கோ என்று சொல்லி விட்டு சீனிவாசன் கிளம்பி விட்டார். வாணிக்கும் சீனிவாசன் சொல்வது சரி என்று மனதில் பட்டது, உங்க அப்பா சொல்றதும் சரி தான் நீ ஏன் அங்க ஜூனியரா போய் சேர்ந்துட்டே வேலை தேடக்கூடாது, கொஞ்ச நேரம் தானே அங்க இருப்ப அவர்கிட்ட எப்போ வரணும்னு கேட்டு விட்டு மீதி நேரத்துல நீ உனக்கு பிடிச்ச ஜர்னலிஸ்ட் வேலையை தேடு என்று வினயிடம் கூறினாள் வாணி. வினய்க்கும் அது சரி என்று மனதில் பட்டது சரிம்மா நான் போறேன் என்று சொன்னான்.


இரு, நான் அப்பாகிட்ட சொல்லி அதுக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன் என்று சொல்லி விட்டு சீனிவாசனிடம் சொல்ல கிளம்பினாள். இதை கேட்டவுடன் சீனிவாசனுக்கு மிகவும் சந்தோசம் நாளைக்கே ஏற்பாடு பண்றேன் என்று அவர் நண்பருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னார்.அடுத்த நாள் வினய் அப்பாவின் நண்பரான அந்த வழக்கறிஞரை சந்திக்க கிளம்பினான்.......   


தேடல் தொடரும்......

பாகா 


உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10