தேடல் 2
பகுதி 2
உமா மாலில் காத்துக்கொண்டிருக்கிறாள், வினயும் ராஜும் வரலையே என்னதான் பண்ணுறானுங்க ஒரு பொண்ணு நானே வந்துட்டேன், இவ்ளோ நேரமா வரதுக்கு இவனுங்க பொண்டாட்டி என்ன பாடு பட போறாங்களோ பாவம் என்று புலம்பிக் கொண்டிருக்கையில், செல் போன் சினுங்க ஆரம்பித்தது. யாரென்று பார்க்கையில் ராஜ், என்னடா வந்துட்டீங்களா நான் மாலுக்குள்ள வந்து பத்து நிமிஷம் ஆச்சு எங்கடா இருக்கீங்க என்று உமா கேட்க, என்னது பத்து நிமிஷமா சும்மா பத்து செகன்டுக்கே கத்துவா இப்போ பத்து நிமிசமா இவகிட்ட இப்போ நான் பேசுனேன் செத்தேன் என்று மனதுக்குள் நினைத்த ராஜ் சரி வினய்கிட்ட கொடுத்துடுவோம் என்று வினயிடம் கொடுத்து விட்டான். வினய் என்னடா என்கிட்ட தர என்று கேட்க , நீயே பேசுப்பா அவ வந்து பத்து நிமிஷம் ஆச்சாம் பேசு என்று ராஜ் சொல்ல, வினய் காதில் வைக்க ஹலோ ஹலோ என்று உமா கத்திக்கொண்டே இருந்தாள்.வினய் உமா என்று பேச ஆரம்பிக்க, டேய் என்னடா பண்றீங்க இவ்ளோ நேரம் கத்திகிட்டே இருக்கேன் போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க என்று உமா கோபமாக கேட்டாள்.
இல்ல உமா வந்துட்டு இருக்கோம் இங்க கொஞ்சம் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு அதான் உங்கிட்ட வர இன்னும் ஒரு அரை மணி நேரமாகும்னு சொல்ல தான் போன் பண்ணோம். அட கடவுளே சரி நான் கொஞ்சம் காஸ்மெடிக்ஸ் வாங்கணும் போய் வாங்கிட்டு இருக்கேன் அதுக்குள்ள வந்துடுங்க, எப்பயும் வாங்குற கடைல தான் இருப்பேன், என்னை தேடிகிட்டு லேட்டாயிடுச்சுனு திரும்பி கதை சொல்லாதீங்க என்று வைத்து விட்டாள். மாலில் காஸ்மெடிக்ஸ் ஷாப் போய்க்கொண்டிருந்தாள் உமா, போகிற வழியில் பிரெஞ்சு பிரைஸ் வாசனை வரவே அதை முதலில் வாங்கி கொறித்துக் கொண்டே ஷாப்பிங் பண்ண போய்க்கொண்டிருந்தாள். இங்கு நான் ஒன்று சொல்லி ஆக வேண்டும் உமா ஒரு சாப்பாடு பிரியை எப்போதும் எதாவது கொறித்துக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு.
காஸ்மெட்டிக் ஷாப்பில் லிப்ஸ்டிக் நெய்ல் பாலீஸ் பார்த்து கொண்டிருந்தாள்.இது உங்க கலருக்கு நல்லா இருக்கும் மேடம் என்று அங்கு வேலை பார்ப்பவன் ஜொள்ளு விட நானே பார்த்துக்குறேன் என்று உமா சொல்லி பார்த்து கொண்டிருந்தாள். அப்போது யாரோ பின்னால் இருந்து முதுகை தட்ட யார் என்று பார்த்தாள். ஹாய் என்று சொல்ல ஹே அனிதா எப்படிடி இருக்க எவ்ளோ நாள் ஆச்சு மதுரைக்கு எப்போ வந்த என்று உமா கேட்டு கொண்டிருந்தாள் அவள் பள்ளித்தோழியான அனிதாவிடம். ஹே அனிதா ரெம்ப அழகா இருக்க, நீ சொன்ன மாதிரியே மீடியாலயா வேலை பார்க்குற என்று கேட்டாள் உமா. அனிதா சளித்துக் கொண்டே அட நீ வேற எங்கயும் சான்ஸ் கிடைக்காம ரிஸ்ப்ட்டினிஸ்டா வேலை பார்க்குறேண்டி என்றாள்.
என்னடி சொல்ற, அட ஆமாண்டி சென்னைக்கு போய் வாய்ப்பு தேடுனா ஒண்ணுமே கிடைக்கல அங்க சும்மா இருக்குறதுக்கு திருப்பி வீட்டுக்கே வந்துடலாம்னு மதுரைக்கு வந்துட்டேன் என்றாள் அனிதா. சரி இங்க ஏதாவது லோக்கல் சேனல் ட்ரை பண்ணலாம்ல என்று உமா கேட்க, எல்லாத்துக்கும் போயிட்டு வந்துருக்கேன் சொல்றோம்னு சொல்லிருக்காங்க அது வரைக்கும் இப்போ ரிஸ்ப்னிஸ்டா வேலை பார்த்துட்டு இருக்கேன் சரி நீ என்ன பண்ற உமா. நான் ஒரு இயந்திர தனமா வாழ்ந்துட்டு இருக்கேன் என்ன முழிக்கிற புரியலையா, சாப்ட்வேர் இன்ஜினீரா வேலை பார்க்குறேண்டி 5 நாள் நான் ஒரு மனித பிறவிங்கறத மறந்துட்டு வேலை வேலை தான், ஒரே கஷ்டம் டென்ஷன் பிரஷர் தாண்டி இந்த வேலை, வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் என்னை நானே மனுசியா உணர்கிறேண்டி என்று சொல்லி முடித்தாள் உமா.
யாரை பார்க்க வந்த உன் பின்னாடியே சுத்தி வந்தானே அந்த வருண் அவனை பார்க்கவா என்று உமா நக்கலாக கேட்க. உமா அதை பேசாத அவனை எனக்கு சுத்தமா பிடிக்காதுடி என்று கோபமாக, சரி விடு சும்மா விளையாண்டேன் என்று உமா சமாதானப்படுத்தினாள். சரி நீ யாரை பார்க்க வந்த அனிதா கேட்டாள், அதுவா நல்ல வேலை நியாபகப்படுத்துன எனக்கு இருக்குற இரண்டு பிரெண்ட்ஸ் பார்க்க வந்தேன். அவனுங்க இன்னும் வரலை அவனுங்களை என்ன பன்றேன்னு பாரு என்று சொல்லி, செல்போனை எடுத்தாள் அதற்குள் இருவரும் வந்து விட்டனர். ஹாய் உமா என்று இருவரும் சொல்ல, வாங்கடா ஒரு பொண்ணு நான் பஸ் பிடிச்சு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆயிடுச்சு பசங்க பைக்ல வர இவ்ளோ நேரமா, ஹே டிராபிக் ஜாம் வர வழியில என்று வினய் சமாளிக்க, டேய் தல படம் பார்த்தது இல்லை சும்மா பறந்து பறந்து ஓட்டுவாரு மங்காத்தா படத்துல என்று உமா தல புராணம் பாட ஆரம்பிக்க, சரி விடுமா ஆரம்பிக்காத அடுத்த தடவை நாங்க பறந்து வரோம் என்று ராஜ் சொல்லி முடித்தான்.
டேய் சொல்ல மறந்துட்டேன் இவ அனிதா என் பள்ளித்தோழி ஸ்கூல் பிரென்ட் என்று அனிதாவை அறிமுகப்படுத்த, வினய் ஏதோ யோசித்த படியே கை கொடுக்க அனிதாவும் சிரித்த படியே கை கொடுத்தாள்.உனக்கு இவ்ளோ அழகான ஃபிரெண்டா என்று ராஜ் கொஞ்சம் வழிய, உமா சும்மா இருடா மானத்தை வாங்காத என்று அவன் காலை மிதிக்க அனிதா சிரித்துக்கொண்டே அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். வினய் மட்டும் கொஞ்சம் யோசித்துக்கொண்டே இருந்தான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று, அனிதாவிடம் கேட்டே விட்டான் நம்ம இதுக்கு முன்னால பார்த்துருக்கோமா என்று.பார்த்திருக்கோமே இன்னைக்கு காலையிலே பார்த்த்தோமே என்று அனிதா சொல்ல, உமாவும் ராஜும் முழித்து கொண்டிருந்தனர். வினய் மிகவும் குழப்பத்துடன் எனக்கு உங்கள எங்க பார்த்தேன்னு நியாபகம் இல்லை நீங்களே சொலுங்கனு சொல்ல, சரி டென்ஷன் ஆகாதீங்க சொல்றேன். காலையில ஒரு இன்டெர்வியூ வந்தீங்களா அங்க நான் தான் ரிசெப்ஷனிஸ்ட், வினய் அடுத்து நீங்க தான் சொன்ன போது நீங்க ஏதோ யோசித்து கொண்டிருந்தீங்க அப்பவே தெரியும் நீங்க என்னை சரியா கவனிக்கலைனு, ஆனால் இப்போ பார்த்த மாதிரி இருக்குனு சொன்னதே பெரிய விஷயம் என்று சொல்லி முடித்தாள் அனிதா. மன்னிச்சுடுங்க நான் ஒரு யோசனையில இருந்தேன் அதான் சரியா கவனிக்கல என்று விளக்கினான் வினய். அய்யோ பரவாயில்லை என்று அனிதா சொல்லி கொண்டிருந்தாள்.
இதை கவனித்த உமா பார்த்தியாடா ராஜ் இதுவரை பொண்ணுங்கள பார்த்தா தூர போறவன் இப்போ ரெம்ப நாள் பழக்கம் மாதிரி சிரிச்சு சிரிச்சு பேசிக்கிறாங்க என்றாள். பொண்ணுங்கள பார்த்தா தூரமா போவானா நீ பொண்ணு தானே அதையே மறந்துட்டியா உன்கூட பேசுறான்ல என்று சிரிச்சு கலாய்க்க, உமா கடுப்பாக ராஜ் சுதாரிச்சுட்டு சும்மா விளையாண்டேன் விடு என்று சமாளித்தான். எனக்கு ரெம்ப பசிக்குது வாங்க சாப்பிட போகலாம்னு உமா சொல்ல, அதான பார்த்தேன் என்னடா இன்னும் சொல்லலையேன்னு என்று முணுமுணுத்தான் ராஜ். சரி வாங்க போவோம் வழக்கம் போல சிக்கன் பிரியாணி சிக்கன் லாலிபாப் ஒரு கட்டு கட்டுவோம் என்று ராஜ் சொன்னான். இல்ல நான் போகணும் அம்மா தேடுவாங்க என்று அனிதா சொல்ல, அம்மாகிட்ட நான் பேசுறேன் அம்மாவை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு, நானும் உன்கூட வீட்டுக்கு வந்து அம்மாவை பார்த்துட்டு போறேன் போதுமா வா என்று கையோடு அனிதாவை இழுத்துக் கொண்டு சென்றாள் உமா.
சாப்பாடு ஆர்டர் பண்ணும் போது அனிதாவிடம் உனக்கும் சிக்கன் பிரியாணி சொல்லவா என்று உமா கேட்க, அய்யயோ இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாப்பிடக்கூடாது அம்மா சொல்லிருக்காங்க எனக்கு ஒரு வெஜ் பிரைடு ரைஸ் என்று சொன்னாள் அனிதா. வினய்,ராஜ், உமா மூவரும் முழிக்க, அனிதா திகைத்தாள் நான் இப்போ அப்பிடி என்ன சொன்னேன்னு இப்படி முளிக்குறீங்க என்றாள். அது இல்லை எங்க வினயும் எப்பவும் இதையே தான் சொல்வான் அதான் நாங்க அப்படி முளித்தோம் என்றாள் உமா. அப்படியா என்று அதிசயித்தாள் அனிதா.உனக்கு ஒரு ஜோடி வந்துருச்சுப்பா என்று சொல்ல, வினயும் அனிதாவும் சட்டென்று திரும்ப, சாப்பாட்டுக்கு ஜோடி வந்துருச்சுனு சொன்னேன் என்று சமாளித்தாள் உமா. வினய் அனிதா இருவரும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டனர். பின்னர் சாப்பாடு வந்தது பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். அனிதாவை பற்றி வினயும் அவனை பற்றி அனிதாவும் தெரிந்து கொண்டனர் உமா பேசியதை வைத்து. இருவருமே பிடித்த வேலை கிடைக்காமல் இருப்பதை உமா சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபப்பட்டு கொண்டனர்.
பின்னர் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப நான் அனிதா வீட்டுக்கு போயிட்டு வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்ப தயாரானாள் உமா. வினய்க்கு அனிதா புதிதாகத் தெரியவில்லை, ஏதோ நீண்ட கால நண்பர்கள் போன்ற ஒரு உணர்வு. அனிதாவுக்கும் அதே உணர்வு, செல்போன் நம்பர் கேட்கலாமா வேணாமா என்று இருவருமே தயங்க கேட்காமலேயே கிளம்பினர். இருவர் கண்களுமே அதை காட்டி கொடுத்து விட்டன. வினய்க்கு இது காதலா என்று தெரியவில்லை ஏனென்றால் வினய்க்கு பார்த்ததும் காதலில் நம்பிக்கை இல்லை ஆனால் அவள் நடந்து கொண்ட விதம் அவளை பற்றி உமா சொன்ன விஷயங்கள் அனைத்துமே வினயை ரசிக்க வைத்தது. அதுவும் இல்லாமல் இருவரும் ஒரே குணமுடையவர்கள் என்பது அவர்கள் இருவருக்குமே புரிந்தது.
பின் வீட்டுக்கு வந்ததும் அதையே யோசித்து கொண்டிருந்தான், அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அங்கு அனிதாவும் அதே போல குழம்பி கொண்டிருந்தாள். என்னாச்சு எனக்கு இப்படி யோசித்து கொண்டிருக்கிறேன் இது தான் காதலா அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவளே கேள்வி கேட்டு அவளே பதிலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.இல்ல நல்ல மனிதர் , இல்ல இல்ல நல்ல பிரென்ட் அவ்வளவு தான் என்று புலம்பி கொண்டிருந்தாள்.உமா கிட்ட வினய் நம்பர் கேட்டு சும்மா பேசலாமா இல்ல இல்ல தப்ப எடுத்துப்பாளோ!? இல்ல சும்மா பிரென்ட் தானே பேசுனா தப்பா எடுத்துப்பாங்களா என்ன, சரி என்று உமாவிற்கு போன் போட இல்லை வேண்டாம் என்று ரிங் ஆவதற்குள் துண்டித்து விட்டாள்.வினய் நினைச்சுருந்தா அவர் இந்நேரத்துக்கு உமாகிட்ட நம்பர் வாங்கி பண்ணிருக்கலாமே அவருக்கு நம்மள மாதிரி எதுவும் தோணல போல என்று தூங்க போனாள்.
செல்போன் சிணுங்கியது யாரென்று பார்க்க ஏதோ நம்பரில் இருந்து வந்தது. ஒரு வேலை வினய் இருக்குமோ என்று சந்தோசத்தில் ஹலோ என்றால் ஆனால்......
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment