தேடல் 1
இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே
பகுதி 1
சில்லென்று வீசும் காற்று மெல்லென வெளிவரும் சூரியக்கதிர்களின் வெப்பம் பெற்று கரையும் புல்வெளியின் மேல் உள்ள பனித்துளி. இதமான அதிகாலை நேரம், காலை அமைதியின் நடுவில் கோவில் மணி சத்தம் கேட்டு கோபுரத்தில் இருந்து படபடவென பறக்கும் புறாக்கூட்டம், தெருமுனை பிள்ளையார் கோவிலில் சிதறும் தேங்காய். வானில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் நான்கு புற கோபுரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகோ அழகு.எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் இரவையே பகலாக்கும்,எந்நேரமும் போய் கேட்டாலும் உணவு தரும் சிறு கடைகள், எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் வடை,பஜ்ஜி கடைகள் இப்படியான தூங்காநகரமான மதுரை தான் நம் கதை களம்.
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஒரு வாலிபன் இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான். அதிகாலை பொழுதில் இதை எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா, தூங்க கூட நேரமில்லாமல் செல்போனில் பேசிக்கொண்டு நம்மை அறியாமல் தூங்கி போகிறோம்.அவசரம் அவசரமாக தூங்கி எழுந்து வெந்ததும் வேகாததையும் சமைத்து கொடுத்து நாமும் சாப்பிட்டு கிளம்பி கொண்டிருக்கிறோம், இந்த பரபர உலகில்.
அப்படி இருக்க இந்த இளைஞன் அமைதியாக நின்று அனைத்தையும் ரசித்துக் கொண்டிருக்கின்றானே கொடுத்து வைத்தவன் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா, ஆம் அப்படித்தான் சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
அதிகாலை பொழுதை ரசித்துக் கொண்டிருப்பவன் வினய், நம் கதையின் நாயகன் வயது 27 வெள்ளையும் இல்லாமல் கருப்பும் இல்லாமல் ஒரு மாநிறம், தேவையான உயரம் ஜிம்மிற்கு செல்லாமலேயே கட்டுகோப்பாக இருக்கும் கட்டுடல். சட்டப்படிப்பு படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞன். பணத்திற்கு குறைவில்லாத குடும்பம். அப்பா சீனிவாசன் மூத்த வழக்கறிஞர், இவர் வாதாடும் ஒவ்வொரு வழக்கும் வெற்றி தான். இவர் வழக்கில் வாதாடும் பொழுது நீதிமன்றம் மட்டுமல்லாமல் தமிழகமே ஒரு பரபரப்புடன் இருக்கும். இவரின் நிர்பந்தத்தால் பிடிக்காத சட்டப்படிப்பை படித்து விட்டு பிடித்த வேலையான பத்திரிக்கையாளர்(journalist) வேலையை தேடி கொண்டிருக்கிறான் வினய்.அம்மா வாணி அதிர்ந்து பேசாத மென்மையான சுபாவம். சிறுவயதில் இருந்து இசை பயின்று பாடல் பாடுவதில் வல்லவர். திருமணத்திற்கு பிறகு சீனிவாசன், வினய் தான் அவருக்கு உலகம் அவர்களை கவனித்துக் கொண்டு குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டிருக்கிறார்.
வினயின் சிறுவயது நண்பர்கள் உமா மற்றும் ராஜ் இவர்கள் மூவரும் இணைபிரியா உயிருக்கு உயிரான நண்பர்கள் பள்ளி பருவத்தில் இருந்து இப்போது வரைக்கும் நட்பு பலமாகிக் கொண்டு தான் இருக்கிறது.ஒவ்வொரு வார இறுதியும் இவர்களுக்கு கொண்டாட்டம் தான். இன்று வெள்ளிக்கிழமை வினய் மொட்டை மாடியில் நின்று கொண்டு வார இறுதியை எப்படி கொண்டாடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
என்னடா வழக்கம் போல வார இறுதியை எங்க போறதுன்னு யோசிக்கிறியா என்று குரல் கேட்ட இடம் திரும்பி பார்க்க, கையில்
காபியுடன் அம்மா வர காபியை வாங்கிக் கொண்டு ஆமா அம்மா இன்னைக்கு வெள்ளிக்கிழமை நான் சந்தோசமா இருக்கிறதே இந்த மூன்று நாள் தானம்மா, ஆமாடா அப்போ எங்க கூட இருந்த சந்தோசம் இல்லையா என்று வாணி பொய் கோபம் காட்ட,அம்மா அப்படி இல்லமா என் செல்ல அம்மானு முத்தம் கொடுத்து சமாதானப்படுத்த, வாணி என்று சீனிவாசன் கூப்பிட சரியாக இருந்தது. அப்பா கூப்பிடுறாங்க இன்னைக்கு ஏதோ முக்கியமான வழக்காம் சீக்கிரம் போகணுமாம் சரி நீ குளிச்சுட்டு வா உனக்கு பிடிச்ச பொங்கல் பண்ணிருக்கேன் வந்து சூடா சாப்பிடு, பொங்கல் சாம்பார் தேங்காய் சட்னியாமா என்று வினய் குஷியில் கேட்க,ஆமாண்டா வந்து சீக்கிரம் சாப்பிடு. சரி வடை இல்லையாம்மா என்று வினய் பாவம் போல் கேட்க, வடை மாவு எல்லாம் ரெடி பண்ணி வச்சுருக்கேன் நீ குளிச்சுட்டு வரதுக்குள்ள என் செல்லத்துக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சுடுவேன் போதுமா, அம்மான்னா அம்மா தான். சரி சரி போய் குளிச்சுட்டு வா உங்க அப்பா கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு சரிம்மா என்று சொல்லி விட்டு குளிக்க செல்கிறான்.
குளித்து முடித்து விட்டு சாப்பாடு டேபிளில் சாப்பிட அமர அவன் அப்பாவும் சாப்பிட வர வாணி பரிமாறி கொண்டிருந்தாள். சரிடா என்ன முடிவு பண்ணிருக்க எப்போ என் நண்பன் கிட்ட ஜூனியரா சேர போறன்னு சீனிவாசன் கேட்க,இல்லப்பா இன்னும் நான் முடிவு பண்ணல இன்னும் எனக்கு கொஞ்சம் நாள் அவகாசம் வேணும்னு வினய் கேட்க,சீனிவாசன் சற்று முகம் மாறி என்னடா சொல்ற உனக்கு இப்ப 27 வயசு இன்னும் வேலைக்கு போகாம உனக்கு பிடிச்ச வேலையும் கிடைக்காம நான் சொல்ற வேலைக்கும் போகாம இருந்தா என்ன அர்த்தம், என்று சீனிவாசன் கேட்க ஒரே நிசப்தம்.
வாணி தன் மனதுக்குள் ஐயோ காலையிலே சாப்பாட்டு நேரத்தில் ஆரம்பித்து விட்டாரே, இருவரும் சரியாக சாப்பிடாமல் சாப்பாட்டின் மீது கோபத்தை காட்டுவார்களே என்று மனதுக்குள் படபடக்க
செல்போனில் சத்தம் அழைக்க யார் என்று சீனிவாசன் பார்த்து பேச, அப்பாடா இனி செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிட்டு விடுவார் வினயும் நிம்மதியாக சாப்பிடுவான் என்று மனதுக்குள் சந்தோசப் பட்டுக் கொண்டாள் வாணி.
அவள் நினைத்தது போலவே பேசிக்கொண்டே சாப்பிட்டு விட்டு சரி நேரம் ஆகிறது என்று கிளம்பி விட்டார் சீனிவாசன். கிளம்பியதும் இவர்கள் இருவரும் ஆசுவாசமடைந்தனர். சாப்பிடுடா வினய் அவர் இப்படித்தான் நீ சாப்பிடு உனக்கு பிடித்த வேலை கிடைக்கும் செல்லம் என்று சொல்லி வடை வைக்கட்டுமா என்று கேட்க,போதும்மா என்று சொல்லி சாப்பிட்டு விட்டு எழுந்தான் வினய்.
என்ன வெள்ளிக்கிழமை இவ்வளவு நேரம் ஆகிறது இன்னும் யாரும் போன் பண்ணலையே என்று செல்போனை பார்க்க அது ஸ்விட்ச்ஆஃப் ஆகியிருந்தது, அதை ஆன் செய்ய உமா போன் பண்ண சரியாக இருந்தது.
டேய் என்னடா எவ்ளோ நேரம் ட்ரை பண்றது ஸ்விட்ச்ஆஃப் னு வந்தது இன்னைக்கு வெள்ளிக்கிழமை தெரியுமா இல்ல மறந்துட்டியா, ஏய் இல்ல உமா ராத்திரி சார்ஜ் போட்டுட்டு தூங்கிட்டேன் எப்படியோ ஸ்விட்ச்ஆஃப் ஆகியிருக்கு, ஓஹோ ராத்திரி சார்ஜ் போட்டு தூங்காதப்பா செல்போன் வெடிக்குதாம் என்று உமா சொல்ல, சரி சரி இப்போ நீ வெடிக்காத இன்னைக்கு சாயந்திரம் எங்க வரணும்னு வினய் கேட்க, உமா சிரித்துக்கொண்டே ஷாப்பிங் மாலுக்கு வந்துடுடா எனக்கு வேலைக்கு நேரமாயிருச்சுனு சொல்லி போனை வைத்து விட்டாள் உமா.
வினய் வழக்கம் போல் கிளம்பி அம்மா இன்னைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு போயிட்டு வரேன்னு சொல்லி கிளம்பினான்.சரிடா பார்த்து போயிட்டு வா மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுனு சொன்னாள் வாணி. சரி என்று சொல்லி பைக்கில் கிளம்பினான் சரியாக ஆபீஸ்க்கு 9:55 மணிக்கு வந்து விட்டான். பத்து மணிக்கு இண்டெர்வியூ அனைவரும் ஓரிடத்தில் அமர இவனும் காத்திருந்தான். இன்னைக்கும் இத்தனை பேரா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். பின் வினய் என்று ஒரு பெண் கூப்பிட நினைவு வந்தவனாய் பார்க்க அடுத்து நீங்க தான் சார் போங்க என்று கூறினாள்.
உள்ளே மிடுக்கான தோற்றத்தில் ஒருவன் அமர்ந்திருந்தான், வாங்க உட்காருங்க என்று சொல்ல இருக்கையில் அமர்ந்தான் வினய்.
வினய் பயோடேட்டாவை பார்த்துவிட்டு நீங்கள் சட்டப்படிப்பு படித்து விட்டு ஜர்னலிஸ்ட் ஏன் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் இவ்வளவு படித்து விட்டு இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்க, என் அப்பா ஆசைக்கு படித்தேன் ஆனால் இந்த வேலையில் எனக்கு ஒரு ஈர்ப்பு, ஆசை எல்லாமே என சொன்னான் வினய். உங்கள் அப்பா பற்றி சொல்லுங்கள் என்று கேட்க, அப்பா பெயர் சீனிவாசன் மூத்த வழக்கறிஞர் என்று சொல்ல தொடங்கிய போதே, சார் நீங்க அவர் பையனா நீங்க என்ன சார் அப்பா மாதிரி பெரிய வழக்கறிஞர் ஆகாம இப்படி இங்கு வந்திருக்கிறீர்களேனு கேட்டு அறிவுரை கூற ஆரம்பிக்க, வினய் பொறுமையாக கேட்டு விட்டு விரக்தியில் கிளம்பி வந்து விட்டான்.
பைக்கில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவன் அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். என்னடா இது போகிற இடமெல்லாம் அப்பாவைக் காரணம் காட்டி வேலை கிடைக்க மாட்டிங்குதே என்று யோசித்து கண் அயர்ந்து தூங்கி விட்டான்.
அவளும் நானும் அமுதும் தேனும் என்று பாடல் ஒலிக்க திடுக்கென எழுந்தான், அவன் செல்போனின் ரிங்டோன் அது, யாரென்று பார்த்தான் ராஜ், சொல்லுடா ராஜ் என்று பேச ஆரம்பித்தான் என்னடா எங்க இருக்க என்று ராஜ் கேட்க, அப்போது தான் நினைவு வந்தவனாய் அய்யயோ மணி 5:30 ஆயிடுச்சுனு பார்க்க இருடா கிளம்பிடுறேனு சொன்னான் வினய். அடப்பாவி இன்னும் கிளம்பலையா கிளிஞ்சது அப்போ வழக்கம் போல நீ லேட்டா கிளம்பி வா நான் போறேன் அங்க உமா பத்ரகாளி ஆட்டம் ஆடிடுவா என்று சொன்னான் ராஜ், டேய் இருடா பத்து நிமிசத்துல கிளம்பி வந்திடுறேன் பைக்ல சேர்ந்து போய்டலாம்னு சொல்லி போனை வைத்து விட்டான் வினய்.
வினய் எழுந்து கிளம்ப ஆயத்தமானான் அவன் வாழ்வில் இன்று நடக்க போகும் திருப்பு முனையை அறியாமல்.......
தேடல் தொடரும்...
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்
பாகா

Comments
Post a Comment