தேடல் 12
பகுதி 12
இவர் தான் பூங்கொத்து கொடுத்தார் என்றதும், அனிதாவின் பார்வை அங்கு திரும்ப அந்த உருவம் நெருங்கி வந்தது. அருகில் வர வர அனிதாவிற்கு தூக்கி வாரி போட்டது. அது வேறு யாருமல்ல அனிதா காலேஜ் படிக்கும் போது அவளை சுற்றி சுற்றி வந்த வருண்.
அருகில் வந்ததும் வாரணம் ஆயிரம் சூர்யா போல் தரையில் முட்டி போட்டு இரு கைகளையும் விரித்து I LOVE YOU அனிதா என்று சினிமா பாணியில் அவன் சொல்லி முடித்தான். அனிதாவிற்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை, அந்த சமயம் வினய், உமா ,ராஜ் வந்தனர். அனிதாவின் முன் வருண் முட்டியிட்டு ப்ரொபோஸ் செய்ததை பார்த்து அனைவரும் திகைத்து போய் நின்றனர்.
அப்போது வருண் இவர்களை பார்த்தான், ஹாய் உமா எப்பிடி இருக்க இவ்வளவு ஸ்லிம் ஆகிட்டயே என்றதும் உமாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை. காலேஜ் படிக்குறப்போ ரெம்ப குண்டா இருப்பியே என்றான் வருண். ராஜ் மனதிற்குள் என்ன இது ஸ்லிம்மா என்று மனதிற்குள் சிரிப்பை அடக்கி கொண்டு, நீங்க யார் சார் என்றான்.
நான் வருண் உமா, அனிதாவோட காலேஜ் பிரென்ட் என்றான். அப்போது தான் வினய்க்கு நியாபகம் வந்தது வருணை பற்றி உமாவும், அனிதாவும் சொல்லி இருக்கிறார்கள்.
வருண் பணக்கார பையன் என்பதால் காலேஜ் பெண்கள் அவன் பின்னாடியே சுத்திட்டு இருப்பாங்க ஆனால் வருண் எப்போதும் அனிதா பின்னாடியே சுத்திட்டு இருப்பான், என்னமோ அனிதாவிற்கு அவன் மீது காதல் வரவில்லை என்று ஒரு நாள் உமா வினயிடம் சொல்லியது நியாபகத்திற்கு வந்தது.
வருண் அனைவரிடமும் அறிமுகமாகி கொண்டான். சரி அனிதா உன் பிரண்ட்ஸ் வந்துருக்காங்க நீ அவங்க கூட ஊட்டிய சுத்தி பாரு நான் ஷூட்டிங் கேன்சல் பண்ணிடுறேன் என்றான் வருண் அனிதாவிற்கு மேலும் குழப்பமா இருந்தது.
ராஜ் என்ன சார் நீங்க அவளோட ஷூட்டிங் நீங்க எப்படி கேன்சல் பண்ணுவீங்க விளையாடுறீங்களா என்றான் சிரித்துக்கொண்டே. நான் மதுரை டிவில ஒரு பார்ட்னர் 40% ஷேர் ஹோல்டர் என்று வருண் சொன்னதும் அனைவருக்குமே அதிர்ச்சி.
சரி நீங்க போய் பிரெஷ் ஆகுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் வருண். அனைவரும் குழம்பி போய் இருந்தனர், அனிதா முகம் அதிர்ச்சியாகவே இருந்தது, பின் வினய் வந்து அனிதா இதுக்கு போய் ஏன் உன் முகம் இப்படி ஆகி இருக்கு, வருணுக்கு நம்மள பத்தி சொல்லிட்டா விலகிக்க போறான் அவ்வளவு தான என்றான்.
இல்ல வினய் அவன் பணக்காரன் அதனால ஏதாவது பெரிய பிரச்சனை வருமோனு கொஞ்சம் பயமாவே இருக்கு என்றாள் அனிதா, அத விடு நான் பார்த்துக்கறேன் என்று வினய் தைரியம் சொன்னாலும் அனிதாவிற்கு மனது ஏற்கவில்லை.
அதற்குள் உமாவும் ராஜும் அந்த ஹோட்டல் அறையை சுற்றி சுற்றி பார்த்து விட்டு இது என்னடி அனிதா ரூம் னு நினச்சேன் ஆனால் இதுவே ஒரு வீடு மாதிரி இருக்கே என்றாள் உமா. இது மதுரை டிவி ஷேர் ஹோல்டேரோட 5 ஸ்டார் ஹோட்டல் அதான் இப்படி இருக்கு என்றாள் அனிதா.
அப்போ இதுவும் வருணோடது தான என்றாள் உமா சந்தோசமாக, அனிதா யோசித்து விட்டு முன்னாடி எனக்கு தெரியல ஆனால் இப்போ வருண் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் போது அப்பிடி தான் இருக்கும் போல என்றாள் அனிதா.
அதுக்கு ஏண்டி உன் முகம் சோகமா இருக்கு என்றாள் உமா, இப்போ நடந்ததை பார்த்தேல அப்புறம் இப்படி கேட்குற என்றாள் அனிதா. ஹே அனிதா வருணுக்கு நீயும் வினயும் காதலிக்குறது தெரியாது அதனால அவன் அப்படி ப்ரொபோஸ் பண்ணிட்டான் இதுக்கு போய் வருத்தப்பட்டுட்டு இருக்கியேடி கிளம்பு என்றாள் உமா. அனிதா மனம் குழப்பத்திலேயே இருந்தது.
கண்ணுக்கு தெரியும் தூரம் வரை மலை டீ எஸ்டேட் அனைத்தையும் ரசித்து போட்டோ எடுத்து கொண்டிருந்தாள் உமா. அனிதா வினய் இருவரும் டேபிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சாப்பாடு வந்து கொண்டிருந்தது, வினய் பேச தொடங்கினான் அப்போ உமா கையில் இருக்கும் கேமரா வருண் வாங்கி கொடுத்ததா என்றான், ஆமா அவன் தான் ஃகிப்ட் அனுப்பி இருக்கான் என்றாள் அனிதா.
வினய் பார்த்து விட்டு பரவாயில்லையே DSLR கேமரா அனுப்பி இருக்கான் என்று சிரிக்க ஆரம்பித்தான் வினய். அனிதா அழத்தொடங்கிவிட்டாள், ஹே நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் எதுக்கு இதுக்கு போய் அழுற என்று வினய் சொன்னதும், இது பெண்களுக்கே உரித்தான கஷ்டம் உனக்கு புரியாது என்றாள் அனிதா. சரி விடு நான் வருண் கிட்ட தெளிவா எடுத்து சொல்றேன் என்மேல நம்பிக்கை இருக்கா இல்லையா என்று வினய் கேட்டதும் அனிதா தலையசைத்தாள், சரி விடு நான் பார்த்துக்கறேன் என்று வினய் சொல்லவும் உமாவும் ராஜும் டேபிளுக்கு வர சரியாய் இருந்தது.
என்னடி அனிதா இதுல செல்ஃபி எடுக்க முடியல என்றாள் உமா, ஆமா DSLR கேமரால செல்ஃபி எடுக்குற மூஞ்சிய பாரு என்று சிரிக்க ஆரம்பித்தான் ராஜ். அய்யோ இங்க வந்து உங்க சண்டையை ஆரம்பிக்காதீங்கப்பா என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையில் சாப்பாடு வந்தது.
அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். வருண் வந்தான் ஹே எல்லாம் சரியாய் நடக்குதா சாப்பாடு எப்படி என்றதும், அனைவரும் நல்லா இருக்கு என்று தலை ஆட்டினர். நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றான் வினய். என்கிட்டயா என்றான் வருண், ஆமா உங்ககிட்டதன் பேசணும் என்றான் வினய்.
வாங்க பேசுவோமே என்று தனியே கூட்டிக்கொண்டு போனான். என்ன பேசணும் அனிதா ஏதும் சொல்ல சொல்லி சொன்னாளா, என்று வருண் கேட்க ஆமா நானும் அனிதாவும் காதலிக்குறோம், இது தெரியாம நீங்க அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணிடீங்க என்று பட்டென்று சொல்லிவிட்டான் வினய்.
வருணின் முகம் மாறியது, என்ன நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என்றான். ஆமா என்றான் வினய். வருண் டென்ஷன் ஆனான், நான் அனிதாவை காலேஜ் படிக்கும் போது இருந்து லவ் பண்றேன் நீ என்னனா இப்போ வந்து லவ் பன்றேன்னு சொல்ற, ஒழுங்கு மரியாதையாய் அனிதாவை விட்டு விலகிடு இல்ல எப்படி விலக்கணுமோ அப்படி விலக்கிருவேன் என்று வருண் சொல்ல சொல்ல வினய்க்கு அதிர்ச்சியாய் இருந்தது......
தேடல் தொடரும்
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments
Post a Comment