Facebook page

தேடல் 13

பகுதி 13

 வினயும் அனிதாவும் காதலிக்கிறார்கள் என்று கேட்டவுடன் வருணின் முகம் மாறியது, என்ன நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என்றான். ஆமா என்றான் வினய். வருண் டென்ஷன் ஆனான், நான் அனிதாவை காலேஜ் படிக்கும் போது இருந்து லவ் பண்றேன் நீ என்னனா இப்போ வந்து லவ் பன்றேன்னு சொல்ற, ஒழுங்கு மரியாதையாய் அனிதாவை விட்டு விலகிடு இல்ல எப்படி விலக்கணுமோ அப்படி விலக்கிருவேன் என்று வருண் சொல்ல சொல்ல வினய்க்கு அதிர்ச்சியாய் இருந்தது.

வருண் வினயின் பக்கம் வந்தான் வினயின் தோளில் கை போட்டு வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தான். வினய்க்கு ஆச்சர்யமாக இருந்தது அதிர்ச்சியிலேயே இருந்தான். என்ன வினய் ஆச்சர்யமா இருக்கா, என்னடா இவ்வளவு நேரம் மிரட்டுற மாதிரி பேசுனவன் இப்போ வாழ்த்துக்கள் சொல்றனேனு பார்க்கிறீர்களா, இந்த கதையில நான் வில்லன் இல்லை பாஸ் என்றான் வருண் சிரித்துக்கொண்டே.


வினய் வருணை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தான், நான் வில்லன் இல்லை என் அப்பா அம்மாவும் பணம் புகழ் இருந்தாலும் என்னை ரெம்பவும் ஒழுக்கமா தான் வளர்த்துருக்காங்க என்றான் வருண். அனிதா பின்னாடி சுத்துனேன் காதலிச்சேன் என்னைக்காவது ஒரு நாள் அவளுக்கு என் மேல காதல் வரும்னு தான் காத்திருந்தேனே தவிர தப்பான எண்ணத்துல அவள் பின்னாடி நான் சுத்துனது இல்ல என்றான் வருண்.


உங்களை பற்றி உமாவும் அனிதாவும் நிறைய சொல்லி இருக்காங்க, அப்போவே தெரிஞ்சுருச்சு உங்க கேரக்டர் என்னனு என்றான் வினய். 
அவுங்க ரெண்டு பேரும் என்னை பற்றி அப்பிடி என்ன சொன்னாங்க என்று கேட்டான் வருண். எல்லாமே நல்ல விதமா தான் சொன்னாங்க வாங்க அனிதாகிட்ட போய் இத சொன்னா ரெம்ப சந்தோசப்படுவா, அவள் ரெம்ப பயந்துட்டே இருந்தாள் என்று வருணை கூட்டிக்கொண்டு சென்றான் வினய். அவர்கள் மூவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.


வருண் அனிதாவிடம் வந்து வாழ்த்துக்கள் அனிதா என்று சொல்லும் போதே அனிதா வினயின் முகத்தை பார்த்தாள். இருவரும் கண்களால் ஏதோ பேசிக்கொண்டனர், வினயின் கண்ணசைவில் வருணிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான் என்று அனிதா புரிந்து கொண்டாள்.

அனிதா சந்தோசத்தில் வருணிடம் தேங்க்ஸ் சொல்லிவிட்டு வினயிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டாள், நீ என்கூட இருந்தாலே நான் எதுக்கும் பயப்பட தேவையில்லை வினய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே  கண்களில் கண்ணீர் வந்துகொண்டிருந்தது அனிதாவிற்கு, வினய் கண்ணீரை துடைத்து விட்டு சந்தோஷத்துல கூட உன் கண்ணுல கண்ணீர் வர கூடாது என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கும் போது, உமா குறுக்கிட்டு ஹலோ ஹலோ நாங்களும் இங்கதான் இருக்கோம் உங்க ரொமான்ஸ் அப்புறம் வச்சுக்கோங்க என்று சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.


சரி இனி நான் இங்க இருந்தா சரி வராது நான் கிளம்புறேன் என்றான் வருண். அனிதா வினய் உங்க கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுங்க நான் கண்டிப்பா வருவேன், இப்போ நான் கிளம்புறேன் என்றான் வருண், இல்ல நீயும் எங்களோட இருந்துட்டு நாளைக்கு போகலாமே என்றாள் அனிதா. உமாவும் வினயும் ஆமா வருண் நீங்க எங்க கூட ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமே என்றனர். 

இல்ல நான் வில்லன் இல்ல தான், ஆனாலும் எனக்குள்ளேயும் கொஞ்சம் வலி இருக்கு நான் அதுல இருந்து வெளியே வரணும் கொஞ்ச நாள் ஆகும், என்று சொன்னதும் அனிதாவும் வினயும் வருத்தமடைந்தனர். வருண் அதை பார்த்துவிட்டு எனக்கு கொஞ்சம் காலம் ஆகும் இதுல இருந்து வெளியே வர அவ்ளோதான் அதுக்காக நான் தாடி வச்சுட்டு தேவதாஸ் ஆகிட மாட்டேன் என்றான் வருண் சிரித்துக்கொண்டே.


சரி நீங்க முதல் தடவையா எல்லாரும் சேர்ந்து ஊட்டிக்கு வந்து இருக்கீங்க நல்லா சுத்தி பாருங்க, ஏதாவது உதவினா என்னை கூப்பிடுங்க, இங்க பொட்டானிக்கல் கார்டன் ரெம்ப பேமஸ் மறக்காம போய் பாருங்க நான் என்னோட மேனேஜர்கிட்ட சொல்லி உங்களுக்கு எல்லா ஏற்பாடும்  பண்ணிட்டு கிளம்புறேன் என்றான் வருண். 

அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான் வருண். உமா, அனிதாவிடம் வந்து பாரு நான் சொன்னேன்ல வருண் ரெம்ப நல்லவனு  இப்போ புரிஞ்சுகிட்டியா என்றதும், அனிதா ஆமா என்று தலையாட்டினாள்.

சரி வாங்க நாம இருட்டுறதுக்குள்ள போட்டிங் போயிட்டு வந்துடலாம் நாளைக்கு பொட்டானிக்கல் கார்டன் போகலாம் என்றாள் உமா, ஆமா வாங்க போவோம் என்று அனைவரும் போட்டிங் சென்று விட்டு இரவு ரூமிற்கு வந்தனர்.

அப்போது ரூம் பாய் வந்து மேடம் வருண் சார் உங்ககிட்ட இந்த சாவியை கொடுக்க சொன்னார் உங்களுக்கு வேணும்னா பக்கத்து அறையையும் சேர்த்து எடுத்துக்க சொன்னார் என்றான்.

அனிதாவும் சரி என்று வாங்கி கொண்டாள், நானும் உமாவும் இங்க தங்கிக்கிறோம் நீங்க அந்த ரூம் எடுத்துக்கோங்க என்றதும் சரி என்று சொல்லி ராஜும், வினயும் அவர்கள் சூட்கேசை எடுத்து கொண்டு கிளம்பினர். 

உமா புலம்ப ஆரம்பித்தாள் என்னடி இது இப்படி குளுருது, மதுரைல இருக்குற வெயிலையும் தாங்க முடியல ஊட்டில இருக்குற குளிரையும் தாங்க முடியல என்ன உடம்புடி இது என்று புலம்பினாள். ஹே நான் என்னமோ குளுரலைனு சொன்ன மாதிரி பேசிட்டு இருக்க எல்லாருக்கும் அப்படி  தாண்டி உன் உடம்புக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் அப்படித்தான் என்று சிரித்தாள் அனிதா.


எனக்கு இப்போ சூடா பஜ்ஜி சாப்பிடணும் போல இருக்குடி என்றாள் உமா, ஆமாடி உனக்கு பத்து மணிக்கு சூடா பஜ்ஜி சாப்பிட தோணுமா என் பையில ஒரு சிப்ஸ் பாக்கெட் இருக்கு சாப்பிட்டு தூங்குடி என்றாள் அனிதா. போடி சூடா சாப்பிட கேட்டா நீ என்ன இப்படி சொல்ற போடி என்று சொல்லி உமா தூங்க தயாரானாள். 

அனிதா மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தாள், ஏண்டி இங்க பக்கத்து பக்கத்து ரூம்ல இருந்துட்டு இப்போ கூட போன்ல தான் பேசுவீங்களா போய் நேர்ல பேசுடி என்று உமா சொல்லி விட்டு ரெண்டு போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கி விட்டாள்.


அந்த அறையில் வினயிடம் உன்னயெல்லாம் திருத்தவே முடியாது இங்க வந்தும் போன்ல பேசிகிட்டு இருக்கீங்க பாரு என்று தலையில் அடித்துக்கொண்டு தூங்கி விட்டான் ராஜ். வினய் அவன் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்தான் அனிதாவிற்கு.

இப்படியே அனிதாவும் வினயும் மெசேஜ் பரிமாறிக்கொண்ட அவர்களை அறியாமல் தூங்கி போனார்கள். 

விடிந்தது அனைவரும் கிளம்பி பொட்டானிக்கல் கார்டன் சென்றனர். அங்கு இருக்கும் அனைத்து இடங்களையும் அனைத்து பூக்களையும் உமா போட்டோ எடுத்துக்கொண்டே சென்றாள், அனைத்து இடத்தையும் சுத்தி பார்த்து விட்டு அனைவரும் மதுரைக்கு பஸ்சில் கிளம்பினர்.


வினய் காலையில் வீட்டை அடைந்தான், அவனுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது...

தேடல் தொடரும் 


பாகா 

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10