தேடல் 21
பகுதி 21
வினயும் அவர் அப்பா சீனிவாசனும் வாதாட துவங்கினர், கோர்ட்டில் அமைதி நிலவியது என்ன நடக்கும் என்று அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். சீனிவாசன் வாதாட ஆரம்பித்தார் அவர் எடுத்து வைத்த வாதங்களில் வினய் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். ஆனாலும் வினய் நன்கு வாதாடினான், இருந்தாலும் முன் அனுபவத்தில் சீனிவாசன் நன்கு வாதாடிய படியால் வினய் கொஞ்சம் திணறினான்.
இருவரும் வாதாடியதை வைத்து பார்த்து வரும் வியாழக்கிழமை வழக்கை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி ஜட்ஜ் எழுந்து சென்றார்.
மாதவன் முகத்தில் கடுப்பு கொப்பளித்தது, என்ன இன்னும் தள்ளி கொண்டே போகிறதே வழக்கு என்று சொல்லி கோபமானான். ஜெகன் வந்து அவனை சமாதானப்படுத்தினான், இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி அடுத்த வரும் தேதியில நமக்கு சாதகமா தீர்ப்பு வந்துரும் என்று மாதவனை சமாதானப்படுத்தினான்.
சீனிவாசனிடம் உங்கள் கோப முகத்தை காட்டாதீர்கள் என்று ஜெகன் மாதவனை ஆசுவாசப்படுத்தினான்.
வினய்க்கு கொஞ்சம் சந்தோசம் அடுத்த தடவை எப்படியாவது வழக்கை நன்கு வாதாடி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டான்.
வீட்டில் வாணி வினய் வருகைக்காக காத்திருந்தாள், வினய் பைக் சத்தம் கேட்டவுடன் வாணி ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு ஓடினாள், வினய்க்கு ஆர்த்தி எடுத்தாள். அம்மா இது எல்லாம் எதுக்குமா என்றான் வினய், சும்மா இரு உனக்கு எதுவும் தெரியாது என்று ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
பின்னர் வினயை சோபாவில் உட்கார வைத்து பேச ஆரம்பித்தாள், இன்னைக்கு எப்படி வாதாடுன என்று கேட்க ஆரம்பித்தாள். அட போமா அப்பா என்னை தூசு மாதிரி ஊதி தள்ளிட்டார் என்றான் வினய்.
அப்படியா என்று யோசித்து விட்டு, சரி சரி முதல் தடவையா வாதாடுற அதான் அப்படி இருக்கும் போக போக சரி ஆயிடும் என்றாள் வாணி. சரி நீ போய் ரெஸ்ட் எடு என்றால் வாணி. அப்போது சீனிவாசன் அறையில் இருந்து வெளியே வந்தார்.
வினய் நீ நல்லா வாதாடினா இது உன்னோட முதல் தடவையா தெரியலை என்று பாராட்டினார் சீனிவாசன். வினய்க்கு ஆச்சர்யம் என்ன அப்பா வந்து பாராட்டுறார் என நினைத்துக்கொண்டு சரிப்பா என்று சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தான்.
அனிதா, உமா மற்றும் ராஜிடம் இருந்து வாழ்த்துக்கள் மெசேஜ் வந்திருந்தது, காலையில் கோர்ட்டுக்கு போகும் அவசரத்தில் போனை வைத்து விட்டு சென்று விட்டான் வினய் அதனால் அவன் அவர்களுக்கு பதில் அனுப்ப முடியவில்லை. இப்போது அனைவர்க்கும் போன் பண்ணி நன்றி தெரிவித்துவிட்டு வைத்து விட்டான்.
படுக்கையில் சாய்ந்தான், அப்போது பெண்ணே பெண்ணே அலைகிறேன் நீ சொல்லாததால் மொழி இல்லை என்று பாடல் கேட்டது. புரிகிறது இந்த பாடல் எங்கோ கேட்டது போல் இருக்கா ஆமா அதே தான். சரி கதைக்குள் செல்வோமே அந்த பாடல் சத்தம் கேட்க வினய் போனை பார்த்தான் ரஞ்சித் என்று இருந்தது. வினய் யோசித்து கொண்டே ஏதாவது முக்கியமான தகவல் கிடைத்திருக்குமா என்று பதறிக்கொண்டு எடுத்தான்.
ஹலோ என்றான் வினய், எதிர்முனையில் ரஞ்சித் பேச ஆரம்பித்தார் வினய் உங்களை நேர்ல பார்த்து பேசணும் கொஞ்சம் வர முடியுமா என்றதும், கண்டிப்பா வரேன் இன்னும் 15 நிமிசத்துல நான் ஸ்டேஷன்ல இருப்பேன் என்றான் வினய். இல்லை வினய் என் வீட்டுக்கு வந்துருங்க நானும் கிளம்பிட்டேன் வீட்டுக்கு அதனால வீட்டுக்கு வந்துடுங்க என்றார் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்.
வினய் மனதுக்குள் டிரைவர் பற்றி நியூஸ் கிடைத்திருக்குமா என்று நினைத்து சந்தோசமா புறப்பட்டான். ரஞ்சித் வீட்டுக்கு சென்று கால்லிங் பெல் அழுத்தினான், ரஞ்சித்தின் அம்மா கோமதி வந்து கதவை திறந்தாள். வினய் சற்று யோசித்தபடி கதவு எண்ணை சரி பார்த்து விட்டு கோமதியிடம் ரஞ்சித் சார் என்று இழுத்தான். ஓஹோ வினய் தம்பியா வாங்க என்று உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்தாள். நீங்க என்று வினய் கேட்க நான் ரஞ்சித் அம்மா இப்போதான் ரஞ்சித் வந்தான் உன்னையை பத்தி சொல்லிட்டு வினய் வருவார்னு சொல்லிட்டு குளிக்க போனான்.
இப்போ வந்துருவான் நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி உள்ளே நுழைந்தாள் கோமதி. வினய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் இருந்த பேப்பரை எடுத்து படிக்கச் ஆரம்பித்தான். கோமதி காபி கொண்டு வந்தாள் இன்னும் வரலையா அவன் என்று சொல்லி விட்டு, இந்தா தம்பி காபி எடுத்துக்கோ என்று கொடுத்து விட்டு, ஹே ரஞ்சித் வினய் தம்பி வந்துட்டார் சீக்கிரம் வா என்று கத்தினாள் கோமதி.
ஐயோ அம்மா இருக்கட்டும் பதறாம வரட்டுமே என்ன அவசரம் என்றான் வினய். அது இல்லை தம்பி இவன் குளிக்க பாத்ரூம் போனாலே வெளிய வர அரைமணி நேரம் ஆகும் ஷவர்ல விளையாடுவான் என்று சிரித்து கொண்டே சொன்னாள் கோமதி. அம்மா என்னை பத்தி குறை சொன்னது போதும் என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தான் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்.
என்ன சார் முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னேங்களே என்று கேட்டான் வினய். ஆமா வினய் அதுக்கு தான் உங்களை வர சொன்னேன் என்றார் ரஞ்சித். என்ன சார் டிரைவர் கிடைச்சுட்டானா என்றான் பதட்டமாக ஐயோ வினய் என்னை மன்னிச்சுடுங்க நான் உங்களை வர சொன்னது சொந்த விசயத்துக்கு என்றார் ரஞ்சித்.
என்ன சார் சொல்லுங்க எதுவும் உதவி பண்ணனுமா சொல்லுங்க சார் தயங்காம என்றான் வினய், எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது வினய் நேரடியா கேட்குறேன் உங்க ஃபிரென்ட் உமாவை நான் கல்யாணம் பண்ணலாம்னு ஆசைப்படுறேன், அது விஷயமா பேசத்தான் உங்களை கூப்பிட்டேன் என் அம்மாகிட்டயும் பேசிட்டேன் எங்க அம்மாவுக்கும் இதுல ரெம்ப இஷ்டம் என்றார் ரஞ்சித்.
வினய் அமைதியானான் என்ன சொல்வது என்று தெரியவில்லை அவனுக்கு, என் பையன் இதுவரைக்கும் கல்யாண பேச்சுன்னு எடுத்தாலே விரும்பாதவன் உமாவை பார்த்து பிடிச்சுருக்குனு சொன்னான், அவனுக்கு மட்டுமில்ல எனக்கும் பிடிச்சுருக்கு இங்க ஷாப்பிங் போனப்ப நான் பார்த்தேன் எனக்கும் பிடிச்சிருந்தது நல்ல பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தா நாங்க நல்லா பார்த்துப்போம் அவளை என்று சொல்லி முடித்தாள் கோமதி.
வினய் யோசிக்க துவங்கினான். என்ன வினய் நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா நீங்க எதுவும் உமாவை விரும்புறீங்களா என்று சந்தேகத்தில் ரஞ்சித் கேட்க, அய்யோ இல்ல சார் உமா என்னோட நெருங்குன தோழி அவ்ளோதான், நீங்க சட்டுனு கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை நான் அவகிட்ட பேசிட்டு சொல்றேனே என்றான் வினய்.
தாராளமா கேளுங்க எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோங்க, ஆனால் கொஞ்சம் பக்குவமா உமாகிட்ட எடுத்து சொல்லுங்க அதுக்கு தான் உங்களை கூப்பிட்டேன், உமா விருப்பம் தெரியாம அவுங்க வீட்ல பேச முடியாது இல்லையா என்றார் ரஞ்சித்.
அதுவும் சரி தான் நான் உமாக்கிட்ட இதை பத்தி பேசுறேன் பேசிட்டு நான் உங்களுக்கு சொல்றேன் சார் என்றான் வினய். எதுவாக இருந்தாலும் என்கிட்ட தயங்காம தைரியமா சொல்லலாம் என்றார் இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித். கண்டிப்பா சொல்றேன் சார் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் வினய்.
வினய் அனிதாவிற்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான், இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித் உமாவை விரும்புறாரா என்று கேட்டாள் அனிதா, ஆமா அனிதா நீ உமா வீட்டுக்கு வந்துடு ராஜ் இருந்தால் அவனையும் கூப்பிட்டு வந்துடு என்றான் வினய். ராஜ்க்கு அவுட்டோர் ஷூட்டிங் அவன் மதுரைல இல்லை இப்போ என்றாள் அனிதா.
ஓஹோ அப்போ சரி நீ வந்துடு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் வினய். உமா வீட்டில் அவளின் அறையில் அனிதாவும் வினயும் ரஞ்சித் சொன்ன விஷயத்தை சொல்ல உமா அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள். நீ என்ன சொல்ற உமா என்று அனிதா கேட்க, திடிர்னு கேட்டா நான் என்ன சொல்ல முடியும், எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை என்றாள் உமா.
ரஞ்சித் சார் நல்ல மனுஷன் நேர்மையான போலீஸ் அதிகாரி,அவுங்க அம்மாவும் பார்த்தேன் நல்லவங்களா தான் இருக்காங்க யோசிச்சுட்டு உன் முடிவை சொல்லு உமா என்றான் வினய். சரி என்று தலையாட்டினாள் உமா.
அப்போது வினய்க்கு ரஞ்சித்திடம் இருந்து போன் வர, பாரு அவர் தான் பன்றாரு என்று வினய் பால்கனிக்கு வந்து ஹலோ சொல்லுங்க சார் இப்போ தான் உமாகிட்ட அது பத்தி பேசிகிட்டு இருக்கேன் என்றான் வினய், அது இல்ல வினய் ராஜாவோட மனைவி கிடைச்சுட்டாங்க அவுங்க பசங்களோட ஊரை விட்டு தப்பிக்க பார்த்தப்போ செக் போஸ்ட்ல மாட்டிக்கிட்டாங்க என்றார் ரஞ்சித். அவுங்க ஏன் தப்பிக்கனும் என்று வினய் கேட்க நேர்ல வாங்க எல்லாம் சொல்றேன் என்றார் ரஞ்சித்....
தேடல் தொடரும்
பாகா

Comments
Post a Comment