Facebook page

தேடல் 23

பகுதி 23

அனிதாவை இரவில் வீட்டில் விட்டு வரதராஜனை ஹாஸ்பிடலுக்கு பார்க்க சென்றவன், அவர் அறைக்கதவை திறந்ததும் அதிர்ச்சியானான். அய்யாசாமி தலையில் அடி பட்டு கிடந்தார், முகமூடி போட்ட ஒருவன் வரதராஜனை கத்தியை வைத்து குத்த முயன்றான். அய்யாசாமி அவன் காலை பிடித்து அவனை விடாமல் தடுத்து கொண்டிருந்தார். 

வினய் வேகமாக ஓடி வந்து அவனை பிடிக்க முயன்றான், அதற்குள் அவன் தள்ளி விட்டு தப்பித்து விட்டான். உடனே வரதராஜனுக்கு எதுவும் அடி பட்டு இருக்கிறதா என்று பார்த்தான், அதிர்ஷ்டவசமாக அய்யாசாமி இருந்ததால் எதுவும் விபரீதமாக நடக்கவில்லை.

டாக்டர் நர்ஸ் என்று குரல் கொடுத்துக்கொண்டே சென்றான் வினய், டாக்டர் வேகமா வந்து வினய் இது ஹாஸ்பிடல் இப்படி கத்துறீங்களே என்று கேட்க, இந்த ஹாஸ்பிடல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை போல என்று வினய் நடந்தவற்றை கூறினான். 

டாக்டர் அதிர்ந்து போனார், சீக்கிரம் வாங்க டாக்டர் அய்யாசாமிக்கு தலையில காயம் ஆகி இருக்கிறது என்று கூட்டி கொண்டு போனான் வினய்.


பின் டாக்டர் அய்யாசாமிக்கு மருந்து போட்டு கட்டினார், ரெஸ்ட் எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந்தார். அண்ணே 
அது யாரு அவனை உங்களால பார்க்க முடிஞ்சதா என்று கேட்டான் வினய், இல்ல தம்பி நான் பாத்ரூம் போய்ட்டு வரும் போது யாரோ உள்ள வந்து என் தலையில எதையோ கொண்டு அடிச்சுட்டான் என்று சொன்னார் அய்யாசாமி.

தம்பி கடவுள் புண்ணியத்துல நீங்க வந்துடீங்க இல்லைனா வரதராஜன் அய்யாவை பார்த்துருக்கவே முடியாது தம்பி என்று சொல்லி அழுக ஆரம்பித்து விட்டார்.

வினய் அய்யாசாமியை தேற்றினான், பின் வெளியே வந்து நடந்தவற்றை இன்ஸ்பெக்ட்டர் ரஞ்சித்திற்கு போன் பண்ணி கூறினான். நீங்க ஒரு கம்பளைண்ட் கொடுங்க அவர் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று, நாம அவரோட பாதுகாப்புக்கு 2 கான்ஸ்டபிள் அங்க அனுப்பலாம். இப்போதைக்கு நம்மளால அவ்ளோதான் செய்ய முடியும் என்றான் ரஞ்சித்.

வினயும் யோசித்துவிட்டு சரி சார் என்று சொல்லி வைத்து விட்டான். காலை விடிந்தது வினய் வரதராஜன் சார் அறையிலே அமர்ந்தவாறு தூங்கிவிட்டான். தம்பி நீ கிளம்புப்பா நான் பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு அய்யாசாமி கையில் மாலையை வைத்து கொண்டு 108 தடவை மந்திரம் சொல்லி சாமி கும்பிட ஆரம்பித்தார்.


சரி என்று சொல்லி வீட்டுக்கு சென்றான் வினய். நடந்தவற்றை அம்மா வாணியிடம் கூறினான். அவள் பயந்து போய் இதெல்லாம் யாரு தான் வினய் பண்றது என்று கேட்டாள். எல்லாமே மாதவன் ஆளுங்க தான் பன்றாங்க ஆனால் நம்மகிட்ட ஆதாரம் இல்ல அது தான் இப்போ பிரச்சனை என்றான் வினய். 

அப்போ அம்மா வாணி யோசித்துவிட்டு டேய் வினய் அந்த டிரைவர் மனைவி கிடைச்சுட்டாங்கன்னு சொன்னியே, அந்த பொண்ணை மிரட்டுனது மாதவன் அல்லக்கை ஜெகன் தான அப்போ அந்த பொண்ணை கோர்ட்ல சாட்சி சொல்ல சொன்னா வரதராஜன் சார் ஆக்சிடெண்ட்ல ஒரு விடை கிடைக்கும்ல என்றாள் வாணி. 

அதற்கு மாதவன் யோசித்து விட்டு அப்படி செய்யலாம் ஆனால் இப்போ வரதராஜன் வாதாடுறா விவசாயிங்க கேஸுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேப்பாங்க என்றான். அந்த கேஸ் வாதாடுனதால தான அவர் உயிருக்கு ஆபத்து அப்போ இதுவும் இந்த கேஸ்ல சம்பந்தம் தான வினய் என்று அவன் அம்மா வாணி கேட்டாள்.

ஆமா அப்போ இந்த கேஸையும் அந்த கேஸோட இணைந்து விசாரிக்கணும்னு ஒரு மனு போடணும் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் வினய். 

முதலில் ரஞ்சித் சொன்ன கம்பளைண்ட் பார்மாலிட்டியை முடித்து விட்டு அனிதாவை பார்க்க கிளம்பினான்.   போகும் வழியில் அய்யாசாமியிடம் போன் பண்ணி கான்ஸ்டபிள்ஸ் வந்துட்டாங்களா என்று கேட்டு உறுதி செய்தான், இடையில் அனிதாவிடம் இருந்து போன் வந்தது.

எடுத்து பேசினான் வினய் இன்னும் எனக்கு வேலை முடியலை அதனால் நாம் பார்க்க முடியாது நாளைக்கு பார்க்கலாமா என்று கேட்டாள் அனிதா, நாளைக்கு கோர்ட்க்கு போகணும் சரி நாளைக்கு சாயங்காலம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வழக்கிற்கு தேவையானவற்றை சேகரித்தான். இரண்டு வழக்கையும் ஒன்றாக விசாரிக்க சொல்லி மனு ஒன்றையும் கோர்ட்டில் சமர்பித்தான். 

வினய் ரஞ்சித்திற்கு போன் செய்து நாளை வழக்கு பற்றி சில தகவல்களை சேகரித்தான், அப்போது ரஞ்சித் தயங்கிய படி உமாவிடம் பேசுனீங்களா வினய் என்று கேட்டான். ஐயோ சாரி சார் சொல்ல மறந்துட்டேன் உமா கொஞ்சம் யோசிக்க டைம் கேட்டு இருக்கா அவ சொன்னதும் நான் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன் என்றான் வினய்.

சரி வினய் நாம் நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம் என்று சொல்லி போனை வைத்து விட்டான் ரஞ்சித்.

காலை சூரியன் வானத்தில் மலர்ந்தது, கோர்ட் வளாகமே மிகவும் பரபரப்பாக இருந்தது, காற்றை கிழித்து கொண்டு ஒரு கார் வந்து நின்றது...


தேடல் தொடரும் 


பாகா 


உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10