Facebook page

தேடல் 7

பகுதி 7


வரதராஜன் மாதவன் அனுப்பின ஆளுங்களை பார்த்தவுடன் கோபம் தலைக்கேற கத்திக்கொண்டிருந்தார். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் அதிர்ந்து போயினர். அப்புறம் நிதானமாக சார் மாதவன் யார் தெரியுமா அவர் நினைச்சா உங்களை என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று மிரட்டல் தொணியில் அவர்கள் ஆட்கள் பேச ஆரம்பிக்க, வரதராஜன் மிகவும் கோபமாக என்ன பண்ணுவாராம் பண்ண சொல்லு என் சர்வீஸ்ல நான் பார்க்காத மிரட்டல்களா வெளியே போங்க என்று விரட்டினார். அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.


இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வினய் குழப்பத்துடனும் ஒரு வித பதட்டத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வெளியேறும் போது வினயை பார்த்துக்கொண்டே வெளியேறினர்.



வினய் அய்யாச்சாமியிடம் யார் இவர்கள் எதுக்கு இங்க வந்து வரதராஜன் சாரை மிரட்டிட்டு போறாங்க என்று கேட்டான். தம்பி இந்த மாதிரி நிறைய பேர் வந்து மிரட்டிட்டு போவாங்க அய்யா வாதாடுறா கேஸ்ல எதிர் தரப்புல இருந்து நிறைய மிரட்டல் வரும் அதுல இவுங்களும் ஒரு தரப்பு அவ்வளவு தான் ஆனால், இவுங்க ரெம்ப பெரிய இடம் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் அய்யாசாமி என வரதராஜன் கூப்பிட, தம்பி அய்யா கூப்பிடுறாரு நான் போறேன் என்று  சொல்லி இதோ வரேன்யா என்று பதறிக்கொண்டு ஓடினார் அய்யாசாமி.


வினய் அவனுக்கு வரதராஜன் கொடுத்த பைலை பிரட்டிக்கொண்டு இருந்தான் ஆர்வமே இல்லாமல், ச்சே என்னடா இது அப்பா இப்படி வந்து மாட்டி விட்டுட்டாரே நமக்கு இந்த வேலை பிடிக்கலைனு தெரிஞ்சும் இப்படி நம்ம கஷ்டப்படுத்துறாரே என்று தன்னை தானே நொந்து கொண்டான்.


நேரத்தை பார்த்தான் நேரம் ஆகிடுச்சே இவர் சொன்னா தான் போகணுமா இல்ல நாமாவே கிளம்பிடலாமா, இல்ல அவர்கிட்ட கேட்க போனா கத்துவாரா என்று யோசித்து கொண்டிருக்கையில், அய்யாசாமி வந்து தம்பி உங்களை அய்யா கிளம்ப சொல்லிட்டாரு நீங்க போகலாம் என்று சொல்ல வினய் மனதுக்குள் சந்தோசத்துடன் கிளம்பி பைக்கை கிளப்பினான். 


அனிதாவிற்கு போன் பண்ணலாம் என்று வினய் செல்போனை எடுத்து டயல் பண்ணினான், ஹலோ வினய் இப்போதான் நான் பேசலாம்னு நினச்சேன் ஆனால் நீ வரதராஜன் சார் வீட்ல இருப்பியேனு தான் பண்ணலை வெளியே வந்துட்டியா என்றாள் அனிதா. ஆமா அவர் வரப்போ எப்படி லேட்டா வரக்கூடாதுன்னு சொன்னாரோ அதே மாதிரி போறப்போ சரியான நேரத்துக்கு அனுப்பிட்டாரு அந்த வகையில ரெம்ப சந்தோசம் என்றான் வினய். சரி நீ இப்போ ஃபிரியா என்று இருவரும் ஒரு சேர கேட்டனர், பின் இருவரும் சிரித்துக்கொண்டே சரி உன் சேனல் ஆபீஸ் பக்கம் இருக்குற காபி ஷாப்க்கு வந்துரு என்று சொல்லி பைக்கை கிளப்பினான் வினய்.


ஆஃபிஸ் கான்பெரன்ஸ் அறையில் மூச்சு விடாமல் தனக்கு நடந்தவற்றை அனைத்தையும் சொல்லி முடித்தாள் உமா. மேனேஜர் நடந்த அனைத்தையும் கேட்டு விட்டு உமாவை பாராட்டினார் இந்த மாதிரி தைரியமா போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுக்குறதுக்கு பொண்ணுங்க பயப்படுவாங்க ஆனால் எதை பத்தியும் கவலைப்படாம தைரியமா கம்பிளைன்ட் பண்ணிருக்க வெரி குட் என்று பாராட்டி விட்டு அந்த டிரைவர் வேலையை விட்டு தூக்கிடுவோம் என்று சொல்லி கொண்டிருக்கையில், உமா குறுக்கிட்டு இனிமேல் டிரைவர் வேலைக்கு எடுக்கும் போது அவர் குடும்பம், அவரோட பின்னணி என்னனு பார்த்து எடுக்கணும் சார் இப்போ சதீஸ் பண்ணது மாதிரி வேற யாரும் பண்ண மாட்டாங்கன்னு என நிச்சயம்.

அதே போல அவசர தேவைக்கு தான் டிரைவர் நம்பருக்கு போன் பண்றோம் ஆனால் அந்த நம்பரை வச்சு இப்படி தப்பா சில பேர் கையாள்றதால பாதிக்கப்படுறது பொண்ணுங்க நாங்கதான் இதுக்கு வேற எதாவது ஒரு வழி பண்ணுங்க சார் என்றாள் உமா.


சரி இனி நம்ம ஃகேப் டிரைவர் எல்லார் பத்தியும் தகவல் சேகரிச்சுட்டு நடவடிக்கை எடுக்குறேன். அது மட்டுமில்லாம இதுக்கு நம்ம ஒரு டீம் ஏற்படுத்தி இனி டிரைவர் பத்தி எதாவது கம்பிளைன்ட் இருந்தால்  அந்த டீமுக்கு புகார் அனுப்பலாம்னு சொல்லி எல்லாருக்கும் ஒரு மெயில் போடுங்க உமா. அந்த டீம் லீடர் நீங்க தான் உடனே அதுக்கான வேலையை பாருங்க வாரத்துல ஒரு நாள் அரை மணி நேரம் ஒதுக்கி மீட்டிங் நடத்துங்க அதுல வர கம்பிளைன்ட்ட என் கவனத்துக்கு கொண்டு வாங்க உமா என்று சொன்னார் மேனேஜர்.உடனே உமா அதற்கான நடவடிக்கையில் இறங்கினாள்.


வினயும் அனிதாவும்  காபி ஆர்டர் பண்ணி விட்டு வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். என்னமா ரெம்ப பிஸி ஆகிட்டிங்க எப்போ பாரு ஷூட்டிங் ஷூட்டிங் தானா எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க என்று கிண்டலடித்தான் வினய், அதெல்லாம் இல்ல நீயும் இப்போ பிஸி ஆகிட்ட ஜூனியரா வேற சேர்ந்துட்ட என்று அனிதா சொல்லிக்கொண்டிருக்கையில், அய்யோ அத பத்தி மட்டும் பேசாத என்று வினய் முற்றுப்புள்ளி வைத்தான். ஹேய் நான் சொல்ல மறந்துட்டேன் நீ நல்ல ப்ரோக்ராம் பண்றியாம் உன் ப்ரோக்ராம் ரெம்ப சூப்பரா இருக்குனு அம்மா சொல்ல சொன்னாங்க என்றான் வினய், அனிதா வெட்கத்துடன் அப்படியா என்று கேட்க, ஆமா அம்மா உன் புராணத்தை தான் பாடிகிட்டே இருக்காங்க உன்ன பார்க்கணும்னு சொன்னாங்க என்றான். 


அனிதா வெட்கத்துடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டே என்னை பார்க்கணும்னு சொன்னார்களா என்று சந்தோசபட்டாள். நான் வந்து ஒரு நாள் அம்மாவை பார்க்கிறேன், ஆனால் எனக்கு கொஞ்சம் வெட்கமா இருக்கு எதுக்கு என்று வினய் கேட்க, இல்ல உங்க வீட்டுக்கு முதல் தடவை வர போறேன் அது மட்டுமில்லாம நமக்குள்ள ஒரு இது இருக்குல்ல என்று அனிதா சொல்லும்போது, நமக்குள்ள என்ன ஒரு இது இருக்கு என்று நக்கலாக வினய் கேட்க, அனிதா முகத்தை சுளித்து கொண்டு நமக்குள்ள ஒண்ணுமில்லயா  என்று அப்பாவியாக கேட்டாள். வினய் சிரித்துக் கொண்டே நம்ம காதல் அம்மாவுக்கு தெரியும் ஆனால் தெரியாத மாதிரி அம்மா இருக்காங்க என்றான். கண்டிப்பா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ வினய் அம்மாவை பார்க்கணும் என்று சொல்லி கொண்டிருக்கையில் அனிதாவின் செல்போன் ஒலித்தது. அய்யயோ போன் வந்துருச்சு நான் போய்ட்டு வரேன் என்று சொல்லி விட்டு ஓடினாள் அனிதா. 

ஹேய் காபி குடிச்சுட்டு போ என்று வினய் சொல்ல, எனக்கும் சேர்த்து நீயே குடி என்று சொல்லிக்கொண்டே சிறுபிள்ளையாக ஓட ஆரம்பித்தாள். வினய் காபி குடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

உமாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, அவள் மேனேஜர் சொன்னது போல் அனைவருக்கும் மெயில் அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் சதீஸ் மீது நிறைய கம்பிளைன்ட் அதில் ஆறு பேர் நானும் அவன் மேல் போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கிறோம் என்று தைரியமாக வந்தனர்.
இதை மேனேஜரின் பார்வைக்கு கொண்டு சென்றாள். 

மேனேஜர் முதலில் அதிர்ச்சி அடைந்தார் அவன் மேல் மட்டும் இத்தனை புகாரா கண்டிப்பாக போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கலாம் நான் இது பற்றி நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லும்போது, உமா குறுக்கிட்டு சார் நான் இன்ஸ்பெக்ட்ர் கிட்ட பேசுறேன் சார் என்றாள். 

ஓ அப்படியா சரி நீங்க பேசுங்க இதுக்கு உங்களுக்கு முழுக்க உறுதுணையா நானும் நம்ம ஆஃபீஸும்  இருப்போம் என்றார் மேனேஜர். 

ரஞ்சித்திற்கு போன் பண்ணினாள் உமா ஹலோ யாரு என்றான் ரஞ்சித், சார் நான் உமா பேசுறேன் காலையில கம்பிளைன்ட் கொடுக்க வந்தேனே என்று சொல்லும் போது, சொல்லுங்க உமா என்றான் ரஞ்சித். இல்ல சார் ஒரு முக்கியமான விஷயம் நேர்ல பேசணும் என்றாள் உமா. நான் இப்போ டூட்டி முடியுற டைம் அண்ணாநகர்ல இருக்கேன் நாளைக்கு ஸ்டேஷன் வந்துருங்க என்றான் ரஞ்சித். அய்யோ இல்ல சார் இப்போ நீங்க இருக்குற அண்ணாநகர்ல கோனார்கடைக்கு எதிர்ல ஒரு ஜூஸ் கடை இருக்கும் அங்க இருங்க சார் நான் ஒரு 5 நிமிசத்துல வந்துடுறேன் என்றாள் உமா.

ரஞ்சித் யோசித்தவாறே சரி வாங்க என்றான். உமா அடிச்சு பிடிச்சு ஆட்டோவில் ஏறி ஜூஸ் கடையை வந்தடைந்தாள். ஆனால் ரஞ்சித் இல்லை தேடிக்கொண்டே ஒரு ஜூஸ் ஆர்டர் செய்து குடித்து கொண்டிருந்தாள். அப்போது உமா பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணின் பர்ஸை ஒரு திருடன் எடுத்து கொண்டு ஓட முயல, அதை கவனித்த உமா வேகமாக சென்று பர்ஸின் ஒரு பாதியை பிடித்து இழுக்க அவன் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். திருடன் வெடுக்கென்று தள்ளி விட்டதில் உமா மயங்கி கீழே விழுந்தாள்........


தேடல் தொடரும் 

பாகா 

உங்கள் கருத்துகளை இங்கே தெரிவிக்கவும்.. 

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10